TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

சங்கம் மருவிய கால இலக்கியங்கள்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

·         கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 6-ம் நைற்றாண்டு வரையிலான காலம்
·         இக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்
·         இக்கால இலக்கியத்திற்கு இருண்டகால இலக்கியம் எனும்பெயரும் உண்டு.
·                              “நாலடி நாண்மணி நாநாற்பது ஐந்திணை
முப்பால் கடுங்கோவை பழமொழி-மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பனவே
கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு”

1.   அறநூல்கள்           -     11
2.   அகநூல்கள்           -     6
3.   புறநூல்                -     1


·         அறநூல்கள்
1.   நாலடியார்            -     சமண முனிவர்கள்
2.   நாண்மனிக்கடிகை    -     விளம்பிநா்கனார்
3.   இன்னா நாற்பது       -     கபிலர்
4.   இனியவை நாற்பது   -     பூதஞ்சேந்தனார்
5.   திரிகடுகம்             -     நல்லாதனார்
6.   ஆசாரக்கோவை       -     பெருவாயின் முள்ளியார்
7.   பழமொழி              -     முன்னுரையரையனார்
8.   சிறுபஞ்சமூலம்        -     காரியாசன்
9.   ஏலாதி                 -     கணிமேதாவியார்ர
10. திருக்குறள்                  -     திருவள்ளுவர்
11. முதுமொழிக்காஞ்சி   -     கூடலூர்க்கிழார்

·         அகநூல்கள்
1.   ஐந்திணை ஐம்பது           -     மாறன் பொறையனார்
2.   ஐந்திணை எழுபது          -     மூதாவையார்
3.   திணைமொழி ஐம்பது       -     கண்ணன் சேந்தனார்
4.   திணைமாலை நூற்றைம்பது      -     கணிமேதாவியார்
5.   கார் நாற்பது                 -     கண்ணன் கூத்தனார்
6.   இந்நிலை                    -     பொய்கையார்

·         புறநூல்
1)   களவழி நாற்பது             -     பொய்கையார்


1.நாலடியார்
·         திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் நீதி நூல்
·         தொகுத்தவர் – பதுமனார்
·         வேறுபெயர்கள்
¨       வேளாண் வேதம்
¨       நாலடி நானூறு
¨       குட்டித்திருக்குறள்
·         திருக்குறள் போலவே அறம்,பொருள்,இன்பம் என்ற 3 பிரிவுகளை உடையது.
§  அறத்துப்பால்       -     13 அதிகாரங்கள்
§  பொருட்பால்        -     24 அதிகாரங்கள்
§  காமத்துப்பால்            -     3 அதிகாரங்கள்
·         இந்நூல் 400 பாடல்களை கொண்டுள்ளது.
·         G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
·         நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றோர்.
·         பாடல் வரிகள்
§  கல்வியழகே அழகு”
§  “கல்விக்கரையில கற்பவர் நாள் சில”
§  “நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு துரையுண்டு”
§  “செல்வம் சகடக்கால் போல் வரும்”

2.நாண்மனிக்கடிகை
·         கடிகை என்பதற்கு துண்டு என பொருள்.4 மணித்துண்டுகள் இணைந்த மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் 4 கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரை பெற்றது.
·         இந்நூலின் 7,100 வது பாடலை போப் மொழிபெயர்த்துள்ளார்.
·         இந்நூல் 100 பாடல்களைக்கொண்டுள்ளது.
·         பாடல் வரிகள்
Ø  இளமைப்பருவத்து கல்லாமைக்குற்றம்’
Ø  ‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்’
Ø  ‘செல்வது வேண்டின் வெகுளி வேண்டல்’


3.இன்னா நாற்பது
·         துன்பம் தரும் செயல்களைத்தொகுத்துக்கூறும் நூல்
·         ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று முடிவதால் இப்பெயர் பெற்றது.
·         40 பாடல்களைக்கொண்டது
·         பாடல்வரிகள்
§  ‘ஊணைத்தின்று ஊனைப்பெருக்குதல் இன்னா’
§  ‘உண்ணாது வைக்கும் பெரும்பொருள் இன்னா’

4.இனியவை நாற்பது
·         இனிய செயல்களை 40 பாடல்களில் தொகுத்துக்கூறியதால் இப்பெயரைப்பெற்றது.
·         பாடல்வரிகள்
§  ஊணைத்தின்று ஊனைப்பெருக்காமை இனிது’
§  ‘மானம் அழிந்த பின் வாழாமை இனிது


5.திரிகடுகம்
·         திரி என்றால் 3.கடுகு என்றால் காரமான பொருள்.
·         திப்பிலி,சுக்கு,மிளகு எனும் மூன்றினால் ஆன பொருளுக்கு திரிகடுகம் எனப்பெயர்.இதில் ஒவ்வொரு பாடலிலும் வரும் 3அறக்கருத்துகள் மக்களின் மனமயக்கத்தைப்போக்கும்.
·         இது 100 வெண்பாக்களை உடையது.
·         பாடல்வரிகள்
§  நெஞ்சம் அடக்குதல் வீணாகும்’
§  ‘தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்’


6.ஆசாரக்கோவை
·         ஆசாரம்    -     ஒழுக்கம், கோவை    -     ஒடுக்கிக்கூறல்
·         நாள்தோறும் செய்யவேண்டிய கடைகள் பற்றி கூறுகிறது
·         இது ஆரிடம் எனும் வடமொழிநூலை மூலமாக கொண்டது.

7.பழமொழி
·         நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில் அமைந்த நூல்.
·         திருக்குறள்,நாலடியாரோடு ஒருங்கே வைத்து எண்ணத்தக்க பெருமை உடைய நூல்
·         தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக்குறிப்பிடகிறார்.
·         இதன் வேறுபெயர்கள்
¨       பழமொழி நானூறு
¨       உலக வசனம்
¨       முதுமொழி
·         இது 400 பாடல்களை உடையது
·         பாம்பின் கால் பாம்பறியும்’
·         ‘ஆற்றுநா வேண்டுவது இல்’

8.சிறுபஞ்சமூலம்
·         பஞ்சம்           -     5,     மூலம்           -     வேர்.
·         இந்நூல் கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களை கொண்டது.
·         சிறுவழுதுணை,நெருஞ்சி,சிறுமல்லி,பெருமல்லி,கண்டங்கத்திரி ஆகிய 5 வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த 5 கருத்துகள் மக்கள் மனதிற்கு வலிமை கொடுக்கும்.
·         பாடலின் விளக்கம்
§  “கண்ணுக்கு அழகு இரக்கம் கொள்ளுதல்
காலுக்கழகு இரந்து செல்லாமை
இசைக்கழகு கேட்டார் நன்றென்றல்
ஆராய்ச்சிக்கழகு முடிவை துணிந்துரைத்தல்
அரசனுக்கழகு குடிமக்கள் வருந்தாமல் காத்தல்”

9.ஏலாதி
·         ஏலம்,இலவங்கம்,நாககேசரம்,சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய 6 மருந்துப்பொருட்கள் கலவை.
·         இந்நூல் 4 அடியில் 6 அறக்கருத்துகளை கூறுகிறது.
·         இந்நூல் சிறப்பாயிரம்(முன்னுரை),தற்சிறப்பாயிரம்(முடிவுரை) உட்பட 81 வெண்பாக்களை உடையது.
·         இந்நூலின் நற்கருத்து கற்பவரின் அறியாமையை விலக்கும்.
·         இது தமிழருக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.
·         பழி இல்லா மன்னன் நூல்கள் போற்றும்படி வாழ்வான் என இந்நூல் கூறுகிறது.
·         இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயம் சார்ந்தவர்.

திருக்குறள்,முதுமொழிக்காஞ்சி, மற்றும் பிற நூல்கள் அடுத்தப்பதிவில்.



Share:

3 comments:

  1. Could you please suggest any general knowledge books for tnpsc group 1 main exam paper 3

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு.. நன்றி.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *