TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியம்


             பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும் வளர்ச்சியுற்று புத்த,சமண சமயத்தின் செல்வாக்கு குறைந்தன.எனவே இக்காலத்தை சமய மறுமலர்ச்சி காலம் அல்லது பக்தி இலக்கிய காலம் என அழைத்தனர்.

சைவம்


நாயன்மார்கள்-63 பேர்


நாயன்மார்களின் பாடல்களின் தொகுப்பு திருமுறைகள் (அ) தோத்திரம் என்றழைக்கப்பட்டது.
திருமுறைகள்-12

பாடியவர்கள்
திருமுறை

திருஞானசம்பந்தர்

1,2,3- திருமுறை

திருநாவுக்கரசர்

4,5,6- திருமுறை

அப்பர் (அ) சுந்தரர்

7- ம் திருமுறை

மாணிக்கவாசகர்

8-ம் திருமுறை

9பேர் பாடியது

9-ம் திருமுறை

திருமூலர்

10-ம் திருமுறை

காரைக்காலம்மையார் முதலிய 12 பேர் பாடியது.

11-ம் திருமுறை

சேக்கிழார்

12-ம் திருமுறை

 

1.திருஞானசம்பந்தர்

பிறப்பு            -----à  சீர்காழி
பெற்றோர்        -------à சிவபாத இருதயர்,பகவதி அம்மாள்
இயற்பெயர்       ------à ஆளுடையப்பிள்ளை
·         

உமையம்மையே ஞானப்பால் ஊட்டியதால் அன்று முதல் ஆளுடையப்பிள்ளை , ஞானசம்பந்தனார்.
·        
அன்று பாடிய முதல் பாடல் “தோடுடைய செவியின் இடையேறி”

·         16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஞானசம்பந்தர் 16000 பதிகம் பாடினார்.தற்போது கிடைத்திருப்பது 4213 மட்டுமே.இவை முறையே 1,2,3 திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

v  வேறுபெயர்-----àதிராவிட சிசு (கூறியவர்-திராவிட சிசு)
காளி வள்ளல்,தோடுடைய செவியன்,தோணிபுறத்தோன்றல்,நாளும் இன்னிசையால் தமிழ்ப்பரப்பும் ஞானசம்பந்தர்(கூறியவர்-சுந்தரர்)பிறசமயகோளரி.

·         இவர் மதுரையில் தான் தங்கியிருந்த மடத்திற்கு கூன்பாண்டியன் என்ற மன்னன் வைத்த நெருப்பை அவனுக்கே வெப்புநோயாக பற்றச்செய்தார்.பிறகு மன்னன் மனைவி மங்கையர்க்கரசி வேண்ட,திருநீறு பூசி வெப்புநோயை நீக்கி,கூன் நீங்க செய்து ,அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார்.

·         “வேதநெறி தழைத்தோங்கமிகு சைவத்துறை தழைத்தோங்க தோன்றியவர்”-என சேக்கிழார் பாராட்டியுள்ளார்

v  இவர் செய்த அற்புதம்

·         திருமறைக்காடு(வேதாரண்யம்) கோவிலின் கதவைப்பதிகம் பாடி திறக்கச்செய்தார்.

·         கொல்லிமழவன் மகனின் முயலக நோயை நீக்கினார்.

·         திருவோத்தூரில் ஆண் பனையை பெண் பனையாக மாற்றினார்

·         சமணர்களை வெல்லும் வாதப்போரில் அக்னியில் தம் ஏட்டை இட்டு வேகாமல் எடுத்தார்.

·         பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரைப்பற்றி பாடல்கள் அதிகமாக இருப்பதால் இவரை தில்லைப்பாதி புராணம் பாதி என்பர்.

·         இவர் மேற்கொண்ட சமுதாய பணிகள் சத்புத்திர மார்க்கம்(இறைவன்-மகன் உறவு) என்று அழைக்கப்படுகிறது.

·         இவர் முருகனின் அவதாரமாய் போற்றப்படுகிறார்.

·         இறைவன் இவரை ஆட்கொண்ட இடம்-சீர்காழி

·         இறைவனடி சேர்ந்த இடம்-பெருமணநல்லூர்

·         இவர் பாடலமைப்பு-கொஞ்சுதமிழ்

v  இவரின் பாடல்வரிகள்:


·         “இன்றுநன்று நாளை நன்றன்று”


·         ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகளும்’

என்னுடைய முதல் சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

வேறு TNPSC பதிவுகளுக்கு  இங்கே அழுத்துங்கள்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *