TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் - ஏழாம் வகுப்பு - 4 | Samacheer Kalvi Tamil Notes 8th Std

சமச்சீர் 7-ம் வகுப்பு தமிழ் , தொடர்ச்சி

6-ம் வகுப்பு , தமிழ்ப்பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

7-ம் வகுப்பு , தமிழ் பதிவு -1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

7-ம் வகுப்பு , தமிழ் பதிவு -2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

7-ம் வகுப்பு , தமிழ் பதிவு -3 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

சென்ற பதிவில் , நெசவு எனும் பாடத்தினைப்பார்த்தோம் . இப்போது , அதன் தொடர்ச்சியைக்காணலாம் .

28.தமிழக முன்னோடிகள்

·         கண் , காது , மனம் ,இம்மூன்றிற்கும் இன்பம் பயக்கும் கலை – நாடகக்கலை
·         நாடக இலக்கண நூல்கள்
1.   சயிந்தம்
2.   செயிற்றியம்
3.   முறுவல்
4.   மதிவாணன் நாடகக்கலை


·         பரிதிமாற் கலைஞர் காலம் – 1870 – 1903
·         ‘தமிழகம்  உரிமை இழந்து , ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில் அருந்தமிழைப் போற்றி வளர்த்தவர் ’ – பரிதிமாற்கலைஞர் .
·         பரிதிமாற்கலைஞரின் நாடகங்கள்
1.   ரூபாவதி
2.   கலாவதி
3.   மானவிஜயம் (களவழி நாற்பது எனும் நூலை தழுவி எழுதப்பட்ட நாடகம்)
·         செம்மாந்த சீரிய செந்தமிழ்நடையில் நாடகம் இயற்றியவர் – பரிதிமாற்கலைஞர் .
·         வடமொழி , மேனாட்டு நாடகமரபுகளை , தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் – நாடகவியல் (எழுதியவர் – பரிதிமாற் கலைஞர்)



·         சங்கரதாசு சுவாமிகள் காலம் – 1867 – 1920

·         பாமர மக்களுக்குத்தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கியவர் – சங்கரதாசு சுவாமிகள்

·         சிறுவர்களை வைத்து நாடகக்குழுவை தோற்றுவித்தவர் – சங்கரதாசு

·         சங்கரதாசுவின் நாடகங்கள்

1.   வள்ளித்திருமணம்
2.   கோவலன் சரித்தரம்
3.   சதிசுலோசனா
4.   இலவகுசா
5.   அபிமன்யூ
6.   சுந்தரி
7.   பக்த பிரகலாதா
8.   சதிஅனுசுயா
9.   பவளக்கொடி
10. நல்லதாங்காள்  (இவை உட்பட , மொத்தம் 40 நாடகங்கள்)
·         ‘துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவை சொட்டும் சந்தர்யம் தோய்ந்திருக்கும்’ என்றவர் – புத்தனேரி சுப்ரமணியம் .

·         பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலம் – 1875 – 1964
·         மாபாவி (மா – அலைமகள் , பா – கலைமகள் , வி - மலைமகள்)
·         1891-ல் , தம் 18-வது வயதில் பம்மல் சம்பந்தனார் துவங்கிய சபை – சுகுணவிலாச சபை .
·         ‘நடிகர்களால் கலைஞர்’ என மதிக்கப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார் .
·         ‘கட்டுக்குழையாத நாடகக்குழுவை வெற்றிகரமாக நடத்தியவர்’ – பம்மல்
·         பம்மல் எழுதிய நாடகங்கள் – 94
1.   மனோகரா
2.   யயாதி
3.   சிறுதொண்டன்
4.   கர்ணன்
5.   சபாபதி
6.   பொன்விலங்கு

·         ‘கேளிக்கை நாடகம் மூலம் ,நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ’ – பம்மல் .
·         ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தமிழில் தழுவி எழுதியவர் – பம்மல் (வாணிபுரத்து வாணிகன் , விரும்பியவிதமே , அமலாதித்யன்)
·         ‘சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது’ என்ற குரளை எழுதியவர் – பம்மல் .
·         தமிழ்நாடக பேராசிரியர் –பரிதிமாற்கலைஞர்
·         தமிழ்நாடகத்தலைமை ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
·         தமிழ்நாடக உலகின் இமயமலை – சங்கரதாசு சுவாமிகள்
·         தமிழ்நாடகத்தந்தை – பம்மல் சம்பந்தனார் .

மரபுச்சொற்கள்

1.   தாவரங்கள்
·         பிஞ்சு – அவரை , முருங்கை , கத்தரி , வெள்ளரி , கொய்யா,
·         மூசு – பலா மூசு , தென்னங்குப்பை , மாவடு

2.   விலங்குளின் இளமைப்பெயர்கள்
·         குருவிக்குஞ்சு , கோழிக்குஞ்சு , எலிக்குஞ்சு
·         ஆட்டுக்குட்டி,நாய்க்குட்டி , கழுதைக்குட்டி, பன்றிக்குட்டி , குதிரைக்குட்டி, பூனைக்குட்டி
·         மான் கன்று , யானைக்கன்று , எருமைக்கன்று ,
·         சிங்கக்குருளை , புலிப்பறழ் , கீரிப்பிள்ளை , அணில்பிள்ளை .

3.   ஒலிமரபு சொற்கள்
·         சேவல் – கூவும்
·         காகம் – கரையும்
·         கூகை – குழறும்
·         கிளி – கொஞ்சும்
·         வானம்பாடி- பாடும்
·         ஆந்தை – அலறும்
·         கோழி – கொக்கரிக்கும்
·         குதிரை – கணைக்கும்
·         சிங்கம் – முழங்கும்
·         பன்றி - உருமும்
·         யானை- பிளிறும்
·         நரி – ஊளையிடும்

31. முக்கூடற் பள்ளு
·         மதோன் மத்தர் என்பதன் பொருள் – பெரும்பித்தனாகிய சிவன் .
·         முக்கூடல் எனும் ஊரின் வேறுபெயர் – ஆளூர் வடகரைநாடு
·         முக்கூடலில் கூடும் ஆறுகள் -  தன்பொருனை, சிற்றாறு , கோதண்டராம ஆறு .
·         தென்பால் இருக்கும் நாடு – தென்பால் சீவலமங்கைத் தென்கரை நாடு
·         முக்கூடற்பள்ளை எழுதியவர் -  எண்ணயினாப்புலவர்
·         நவரத்தினம்
1.   முத்து
2.   பவளம்
3.   மரகதம்
4.   வைடூரியம்
5.   மாணிக்கம்
6.   புட்பராகம்
7.   ரத்தினம்
8.   வைரம்
9.   கோமேதகம்

32. இயற்கை வேளாண்மை
·         நில இடைவெளிகள்
1.   நெல் – நண்டோட
2.   கரும்பு – ஏரோட
3.   வாழை – வண்டியோட
4.   தென்னை – தேரோட

·         பஞ்சகவ்வியம் – கோமேயம் , சாணம் , பால் , தயிர் , நெய் .
·         வேளாண்பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் – கோவை
·         வேளாண் தொழிற்கூறுகள் – 6

34. வேற்றுமை அடைமொழி

·         முதல் வேற்றுமை – எழுவாய் வேற்றுமை , 8-ம் வேற்றுமை – விளி வேற்றுமை .
·         இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
·         மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல் ,ஆன் , ஒடு, ஓடு, உடன்
·         நான்காம் வேற்றுமை உருபு – கு
·         ஐந்தாம் வேற்றுமை உருபு – இல் , இன்
·         ஆறாம் வேற்றுமை உருபு – அது
·         ஏழாம் வேற்றுமை உருபு – கன் , மேல் , கீழ் , உள்
·         தமிழ்ப்பாடநூல் என்பது இனமுள்ள அடைமொழி
·         வெண்ணிலவு ,செஞ்ஞாயிறு , உப்பளம் – இனமில்லா இடைமொழி

35. தனிப்பாடல்

·         ஆசிரியர் –அந்தக்கவி வீரராகவர்
·         சீட்டுக்கவி மற்றும் நகைச்சுவையாய் பாடுவதில் வல்லவர் .
·         இவரின் வேறு நூல்கள் –
1.   சந்திரவாணன் கோவை
2.   சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
3.   சேயூர் கலம்பகம்
4.   திருக்கழுகுன்ற புராணம்
·         இவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் , தொகுக்கப்பட்டுள்ளன .
·         தனிப்பாடல் திரட்டில் இருக்கும் பாடல்களின் எண்ணிக்கை – 1113  , பாடியவர்கள் -110 .
·         யானையைக்குறிக்கும் வேறுபெயர்கள்
1.   களபம் (சந்தனம்)
2.   மாதங்கம் (பெருந்தங்கம்)
3.   வேழம் (பொன்)
4.   பகடு (எருது)
5.   கம்பம்மா (கம்புமாவு)



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *