TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா் - கவிக்கோ அப்தூல்ரஹ்மான்

கவிக்கோ அப்தூல்ரஹ்மான்

·         பிறப்பு – 02.11.1937 , ஊர் – மதுரை .
·         ‘தொன்மம்’ என்ற இலக்கிய உத்தியை மிகுதியாக பயன்படுத்தியவர் .
·         வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றியவர் .
·         ‘கவிக்கோ’ எனும் இதழை நடத்தினார் .

பரிசும் பாராட்டும்

·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார் .
·         தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது பெற்றார்
·         ‘கவிக்கோ’ என்னும் பட்டம் பெற்றார் ,
·         மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் ; புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்பட்டார் .

சிறந்த நூல்கள்

·         பால்வீதி , நேயர் விருப்பம் , சுட்டுவிரல் , பித்தன் , சொந்த சிறைகள் , கரைகளே நதியாவதில்லை , விலங்குகள் இல்லாத பகுதி , விதை போல விழுந்தவன் , முத்தமிழின் முகவரி , அவளுக்கு நிலா என்று பெயர் .
·         ஆலாபணை – சாகித்திய அகாதமி வென்ற நூல்.

சிறந்த தொடர்கள்

·         புறத்திணை சுயம்வரம் மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன் குருட்டு தமயந்தி
·         உன் தராசுத்தட்டுகளை கொஞ்சம் கண்திறந்து பார்

இங்கே புறாவின் மாமிசத்தை ஜீவிகள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள் .
Share:

தமிழ் அறிஞா் - ஈரோடு தமிழன்பன்



·         பிறப்பு – 28.09.1940 , ஊர் – ஈரோடு
·         பெற்றோர் – நடராஜா , வள்ளியம்மாள் .
·         இயற்பெயர் – ஜெகதீசன் , புனைப்பெயர் – விடிவெள்ளி
·         இவர் ஒரு ‘வானம்பாடி’ விஞர் .

சிறந்த தொடர்கள்

·         சதைத்திரண்டு உன் வார்த்தைகளின் வீரம்
கலகலத்து ஓடுகிறது எங்கள் உள்ளங்களில்

சிறப்புப் பெயர்

·         மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர் .

சிறந்த நூல்கள்

·         தோணி வருகிறது , தீவுகள் கரையேறுகின்றன ,  சூரியப்பிறைகள் , நிலவு வரும் நேரம் , ஊமை வெயில் , திரும்பி வந்த தேர்வலம்

·         வணக்கம் வள்ளுவா  - சாகித்திய அகாதமி வென்ற நூல் .


Share:

தமிழ் அறிஞா்கள் - மு.மேத்தா

மு.மேத்தா

·         பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·         இயற்பெயர் – முகமது மேத்தா .
·         ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
·         ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

மேற்கோள்கள்

·         இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·         மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

சிறந்த நூல்கள்

·         கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .

·         ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்
Share:

தமிழ் அறிஞா்கள் - சி. மணி & சிற்பி பாலசுப்ரமணியம்

சி.மணி

·         எழுத்து இதழின் தொடக்கக்கால எழுத்தாளர் .
·         பாலுணர்ச்சியை பச்சையாக எழுதுகிறார் மணி , என்றகுற்றச்சாட்டிற்கு  பதிலாக ‘பச்சையம்’ எனு கவிதையை எழுதியுள்ளார் .

சிறந்த நூல்கள்

·         நகரம் – கவிதை நூல்
·         வரும்போகும் , ஒளிச்சேர்க்கை , கொலைகாரர்கள்


சிற்பி பாலசுப்ரமணியம்

·         பிறப்பு 29.07.1936 , ஊர் – ஆத்துப்பொள்ளாச்சி
·         பெற்றோர் – பொன்னுசாமி , கண்டியம்மாள் .
·         பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம கல்லூரியில்  விரிவுரையாளராக பணியாற்றினார் .
·         கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
·         இவரது கவிதைகள் ஆங்கிலம் , கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
·         சாகித்திய அகாதமி,  ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது .

விருதுகள்

·         இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’ ,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது .
·         லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் . இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
·         இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
·         தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
·         தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் , ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
·         ‘கவிஞர்கோ’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.

சிறந்தநூல்கள்


·         சிரித்த முத்துகள் , நிலவுப்பூ , ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும் பூனைகள் , நீலக்குருதி .
Share:

தமிழ் அறிஞா்கள் - இரா.மீனாட்சி

இரா.மீனாட்சி

·         சி.சு.செல்லப்பாவின் எழுத்துக்காலத்தில் இருந்து எழுதி வருகிறார் .
·         கோவை அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன்முதலாக பாரதி சிலை வைக்க , அரசாணை பெற்று சிலை நிறுவி , பாரதியார் நூற்றாண்டு விழாவை நடத்தினார் .
·         ஆப்பிரிக்கா –இந்திய இளைஞர்களுக்கிடையே நட்புறவு பாலமாக , ‘ஆரோ’ வில் இளைஞர்கள் கல்வி மையத்தைத் துவங்கினார் .
·         சாகித்திய அகாதமியுடன் இணைந்து ‘வருங்காலக் கவிதையும் கவிதையின் வருங்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினார் .
·         ஆரோவில் இருந்து வெளிவரும் ‘கிராம செய்தி மடல்’ எனும் மாத இதழின் ஆசரியராக பணணியாற்றினார்.
·         ஶ்ரீ அரவிந்தர் பன்னாட்டு கல்வி ஆய்வுமையத்தில் பொறுப்பு உறுப்பினராக இருந்தார் .

விருதுகளும் பரிசுகளும்

·         இவர் எழுதிய ‘உதயநகரில் இருந்து’ எனும் புதுக்கவிதை நூலுக்கு 2006-ல் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது .
·         புதுவை அரசின் கவிஞர் கல்லாடனார் விருது பெற்றார் .
·         ஐ.நா சபையின் பொன்விழாவையொட்டி , ஆரோவிற்கு வழங்கிய நட்புப்பரிசினை பெற்றார் .

சிறந்த நூல்கள்


·         நெறிஞ்சி , சுடுபூக்கள், தீபாவளி பகல் , செம்மன் மடல்கள் , வாசனைப்பூ .
Share:

தமிழ் அறிஞா்கள் - பசுவய்யா

பசுவய்யா – சுந்தர ராமசாமி

·         பிறப்பு – 30.05.1931 , ஊர் – தழுவியமகாதேவர் கோவில் (குமரி மாவட்டம்)
·         இயற்பெயர் – சுந்தர ராமசாமி
·         தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ எனும் பத்திரிக்கையில் எழுதத்துவங்கினார் .
·         மலையாளத்தில் தகழி எழுதிய செம்மீன் , தேரோட்டியின் மகன் என்ற இருநாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் .
·         சு.ரா பெயரில் தமிழ்கணிமைக்கான விருது , கனடாவின் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ’ எனும் அமைப்பால் நடத்தப்படும் ‘காலச்சுவடு’ எனும் அறக்கட்டளை உதவியுடன் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது .
·         சு.ரா நினைவாக ஆண்டுதோறும் , இளம்படைப்பாளி ஒருவருக்கு , ‘நெய்தல் இலக்கிய அமைப்பு’ சுரா விருது அளித்து வருகிறது

சிறந்த நூல்கள்

·         ஒரு புளியமரத்தின் கதை , அக்கரைச் சீமையில் , பிரசாதம் , நடுநிசி நாய்கள், யாரோ ஒருவனுக்காக , ஜேஜே சில குறிப்புகள் .

Share:

தமிழ் அறிஞா்கள் - தருமு சிவராமு

தருமு சிவராமு

·         பிறப்பு – 20.04.1939 , மறைவு – 06.01.1997
·         ஊர் – திருக்கோணமலை , இலங்கை
·         புனைப்பெயர் – பானுசந்திரன் , அருட்சிவராம் , பிரமிள் .
·         சி.சு.செல்லப்பாவின்  எழுத்து இதழில் எழுதத்துவங்கினார் .
·         மௌனியின் கதைத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ளார் .
·         ‘கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்’ என்ற தலைப்பில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார் .

விருதுகள்

·         புதுமைப்பித்தன் விருது (வழங்கியது – நியூயார்க் விளக்கு அமைப்பு)
·         புதுமைப்பித்தன் வீறு (கும்பகோணம் சிலிக்குயில்)

சிறந்த நூல்கள்

·         கைப்பிடி அளவு கடல் , மேல்நோக்கிய பயணம் , கண்ணாடி உள்ளிருந்து , விறங்காபுரி ராஜா , அங்குலிமாலா , பாறை , நட்சத்திரவாசி ,

புகழுரை
·         பிரமிள் , விசித்திரமான படிமாவாதி – சி.சு.செல்லப்பா
·         உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் – சி.சு.செல்லப்பா

·         தமிழின் மாமேதை – தி.ஜானகிராமன். 
Share:

தமிழ் அறிஞா்கள் - சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

·         பிறப்பு – 29.09.1912 , மறைவு – 18.12.1998
·         ஊர் – சின்னமனூர் , தேனி மாவட்டம்
·         ‘சுதந்திரசங்கு’ எனும் இதழில் எழுதத்தெடங்கினார் .
·         ‘தினமணி’க்கதிரில் பிரபல எழுத்தாளர் துனிலனுக்கு உறுதுணையாக பணியாற்றினார் .
·         1958-ல் , ‘எழுத்து’ இதழை தொடங்கினார் .

சிறந்த நூல்கள்

·         நீ இன்று இருந்தால் , மாற்று இதயம் , சரசாவின் பொம்மை , மணல்வீடு , அறுபது , வெள்ளை , வாடிவாசல் , ஜீவனாம்சம் .
·         சுதந்திர தாகம் (சாகித்திய அகாதமி விருது வென்ற நூல்)

சிறப்புப்பெயர்


·         புதுக்கவிதையின் புரவலர்
Share:

தமிழ் அறிஞா்கள் - ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதை

புதுக்கவிதைத் தோற்றம்

·         அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனின் , புல்லின் இதழ்கள்  புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகிறது .
·         டி.எஸ்.எலியட் எழுதிய பாழ்நிலம் (THE WASTE LAND) எனும் கவிதைநூல் , நோபல் பரிசு பெற்றது . இது புதுக்கவிதை உலகில் புதுத்தாக்கத்தினை ஏற்படுத்தியது .
·         வால்ட் விட்மனின் முறையை பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி , நகரம் என்ற தன் கட்டுரையில் , மகான் என்று அவரைக் குறிப்பிடுகிறார் .
·         தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
·         பாரதி எழுதிய புதுக்கவிதை , ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது .
·         தமிழில் புதுக்கவிதையைத் தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
·         புதுக்கவிதை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த இதழ்கள் – எழுத்து , நடை , கலாமோகினி , கசடதபற , வானம்பாடி .
·         வல்லிக்கண்ணன் , ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
·         ‘புதுக்கவிதை இலக்கணம்’ எனும் நூலை எழுதியவர் – ராஜேந்திரன் .


ந.பிச்சமூர்த்தி

·         பிறப்பு – 15.08.1900 , மறைவு – 04.12.1976 , ஊர் – கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
·         பெற்றோர் – நடேச தீட்சிதர் , காமாட்சி அம்மாள்
·         இயற்பெயர் – வேங்கடமஹாலிங்கம் .
·         1924 – 1938 வரை வழக்குரைஞர் பணி .
·         1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார் .
·         பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரின் படைப்புகளாகும்.
·         1934-ல் மணிக்கொடி இதழில் வெளிவந்த ‘காதல்’ எனும் கவிதை , தமிழில் வெளியான முதல் புதுக்கவிதையாகும் .
·         இவரது ‘புதுக்குரல்கள்’ எனும் கவிதைத்தொகுதிதான் , தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பாகும் .
·         ‘நவ இந்தியா’ எனும் பத்திரிக்கையில் சிறிதுகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார்.
·         ‘கலைமகள்’ எனும் பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக அறிமுகமானார்.
·         இவரின் எழுத்துகள்ள ‘சுதேசமித்திரன்’ , ‘சுதந்திர சங்கு’ , ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தன .

சிறப்புப்பெயர்

·         புதுக்கவித இரட்டையர் – ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

சிறந்த கவிதை நூல்கள்

·         காட்டுவாத்து , வழித்துணை , பூக்காரி , ஆத்தோரான் மூட்டை , கிளக்கூண்டு , கிளிக்குஞ்சு

சிறுகதை

·         மாயமான் , ஈஸ்வர லீலை , இரும்பும் புரட்சியும் , பாம்பின் கோவம் , முள்ளும் ரோஜாவும் , கொலுபொம்மை .

சிறந்த தொடர்கள்

·         நீயன்றி மண்ணுன்டோ விண்ணுன்டோ ஒளியுண்டோ நிலவுமுண்டோ

·         காமனை எரித்த ருத்ரன் கண்சிமிட்டில் தணிந்து போவான் .
Share:

தமிழ் அறிஞா்கள் - மருதகாசி

மருதகாசி

·         பிறப்பு – 13.02.1920 , ஊர் – மேலக்குடிக்காடு , திருச்சி
·         பெற்றோர் – ஐயம்பெருமாள் உடையார் , மிளகாயி அம்மாள்
·         குடந்தையில் தேவிநாடக சபையின் நாடகங்களுக்கு பாடல் எழுதி வந்தார்
·         இவர் ஆசிரியர் – ராஜகோபால ஐயர் .
·         சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரித்த , மாயாவதி என்ற திரைப்படத்திற்கு தனது முதல் திரையிசைப் பாடலுக்கு ‘’பெண் என்ற மாயப்பேயாம்’ என்ற பாடலை எழுதினார் .
·         ஜகம்புகழும் புண்ணிய கதை  ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .
·         துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருதினைப் பெற்றார் .
·         ‘மருதமலை மாமணியே முருகைய்யா’  எனும் இவரின் பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது .

சிறப்புப்பெயர்

·         திரைக்கவித்திலகம் ,
·         மாடர்ன் தியேட்டரின் இரட்டைக் கவிஞர்கள் – மருதகாசி , க.மு.ஷெரிப் .

மறைவு

·         29.11.1989ல் மறைந்த இவரது பாடல்கள் , மே 2007 ல் அரசுடைமை ஆக்கப்பட்டது.

சிறந்த தொடர்கள்

·         ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை
·         நெத்தி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக

அது நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக.
Share:

தமிழ் அறிஞா்கள் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

·         பிறப்பு – 13.04.1930 , ஊர் – செம்படுத்தான்காடு , தஞ்சை மாவட்டம் .
·         பெற்றோர் – அருணாசலனார் , விசாலாட்சி .
·         இவர் இயற்றி வந்த கருத்துசெறிவு மிக்க பாடல்களை , ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.
·         இவர் முதன்முதலில் திரையிசைப் பாடல் எழுதிய திரைப்படம் – படித்த பெண்
·         முதல் திரையிசைப்பாடல் – நல்லதை சொன்னால் நாத்திகனா ?
·         விவசாய இயக்கத்தை கட்டி வளர்க்க தீவிரமாக பாடுபட்டார் .

சிறப்புப்பெயர்

·         மக்கள் கவிஞர் , பொதுவுடைமை கவிஞர் .

மறைவுa

·         8.10.1959 ல் மறைந்தார் .
·         மணிமண்டபம் ,  பட்டுக்கோட்டையில் உள்ளது .
·         எனது வலதுகை என்று பாரதிதாசனால் புகழப்பட்டார் .
·         அவர் கோட்டை , நான் பேட்டை (கூற்று – உடுமலை நாராயண கவி)

சிறந்த தொடர்கள்

·         செய்யும் தொழிலே தெய்வம்
·         தூங்காதே தம்பி தூங்காதே
·         வசதி இருக்கின்றவன் தரமாட்டான் ; அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் .
·         சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா !
·         உச்சிமலையில் ஊறும் அருவிகள் ஒரு மலையில் கலக்குது

ஒற்றுமையில்லாத மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது .
Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *