TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பொது வினாத்தாள்-75 கேள்விபதில்

                  பொது மாதிரி வினாத்தாள்




1.’மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’-
  விடைக்கேற்ற வினாவை தேர்வு செய்க.
அ)இவ்வுலகத்தார்க்கு எது உயிராகும்
ஆ)முறை செய்து காத்தலினால் யார் உயிராவர்
இ) முறை செய்து காத்தலினால் எது உயிராகும்
ஈ)யார் முறை செய்துகாத்தல் வேண்டும்

2.’எறும்புந்தன் கையால் எண்சாண்’-எனப்பாடிய புலவர்?
அ)ஔவை                      ஆ)கம்பர்
இ)ஜெயங்கொண்டார்             ஈ)திருவள்ளுவர்

3.பொருந்தாச்சொல்லைக் கண்டறிக
அ)பால்                         ஆ)தயிர்
இ)நெய்                         ஈ)மோர்

4.’அரிமா நோக்கு’ என்ற இதழின் ஆசிரியர் யார்?
அ)செகதீசன்                     ஆ)மி.மேத்தா
இ)கவிக்கோ                     ஈ)தேவதேவன்

5.மேற்கதுவாய் இயைபுத்தொடை என்பது?
அ)1,2,4 சீர்களில் அமைவது
ஆ)1,3,4 சீர்களில் அமைவது
இ)4,2,1 சீர்களில் அமைவது
ஈ)4,3,2,1 சீர்களில் அமைவது

6.தவறான இனையைக்காண்க
1)செப்புத்திருமேனிகளின் காலம்-சோழர்
2)கோயில் கோபுரம் அமைத்தல்-பல்லவர்
3)குடைவரைகோயில் பணி நின்ற காலம்-9ம் நூற்றாண்டு
இவற்றில்
அ)1 மட்டும் தவறு                    ஆ)இவற்றில் எதுவுமில்லை
இ)3 மட்டும் தவறு                    ஈ)2 மட்டும் தவறு

7.வரிசைப்படுத்துக
அ)அரிவை,தெரிவை,பெதும்பை,பேதை,பேரிளம்பெண்,மங்கை,மடந்தை
ஆ) மங்கை,மடந்தை பேரிளம்பெண்,பேதை பெதும்பை தெரிவை, அரிவை
இ) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை,தெரிவை,பேரிளம்பெண்,

ஈ) பேதை பெதும்பை மடந்தை மங்கை அரிவை,தெரிவை,பேரிளம்பெண்,

8.ஆங்கிலச்சொல்லுக்கு இனையான தமிழ்ச்சொல் தருக ”SNACKS”
அ)சிற்றுணவு                         ஆ)காலை உணவு
இ)தின்பண்டம்                        ஈ)நொறுக்குத்தீனி

9.ஞானபோதினியிலும் விவேக சிந்தாமனியிலும் எழுதிய கட்டுரைகளைத்தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ எனும் பெயரில் வெளியிட்டவர்?
அ)மு.சி.பூர்ணலிங்கம்                  ஆ)பரிதிமாற்கலைஞர்
இ)ந.மு.வேங்கட சாமி                 ஈ)சி.வை.தாமோதர்

10.’இயற்றினாள்’ –வேர்ச்சொல் தருக
அ)இயல்                              ஆ)இயற்று
இ)இயற்றி                            ஈ)இயற்றிய

11.’கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன்’
அ)நள்ளி                              ஆ)ஓரி
இ)பேகன்                             ஈ)அதியமான்

12.வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கேற்ப எழுதப்பெற்ற ஐந்திலக்கண நூல்?
அ)வீரசோழியம்                       ஆ)நன்னூல்
இ)அகத்தியம்                         ஈ)தொல்காப்பியம்

13.தமிழ்-திரமிள-திரவிட-திராவிட என உருவாயிற்று என கூறியவர்?
அ)கால்டுவெல்                        ஆ)கெல்லட்
இ)எமினோ                           ஈ)ஈராஸ் பாதிரியார்

14.ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பால்புலவர்படை தமிழர்களின் எதைப்பற்றி பாடினார்கள்?
அ)பெண்களின் கற்பு                   ஆ)பெண்களின் தாய்மை
 இ)பெண்களின் வீரம்                  ஈ)பெண்களின் கல்வி

15.சரியான இனையை கண்டுபிடி
அ)சாப விமோசனம்-புலமைப்பித்தன்
ஆ)இனிப்பும் கரிப்பும்-கு.ப.ராசகோபாலன்
இ)நாற்காலி-ஜெயகாந்தன்
ஈ)கனையாழியின் கனவு-கல்கி

16.சுப்புரத்தினதாசன் எழுதிய நூல்களில் எது சரி
அ)துறைமுகம்                        ஆ)வாடிவாசல்
இ)வார்த்தைவாசல்                    ஈ)தேன்மழை

17.பிறித்தெழுதுக:”தண்டளிர்ப்பாதம்”
அ)தண்+தளிர்+பாதம்                   ஆ)தண்மை+தளிர்+பாதம்
இ)தண்+அளிர்+பாதம்                   ஈ)தண்மை+அளிர்+பாதம்

18.பழந்தமிழர் பொருளீட்டுதலை தம் கடமையாக கருதினர் எனும் செய்தியைக்கூறும் "பொருட்வயிற்பிரிவு" இடம்பெறும் நூல்?
அ)அகத்தியம்                         ஆ)அகநானூறு
இ)புறநானூறு                         ஈ)தொல்காப்பியம்

19.’கருணாமிர்த சாகரம்’என்ற இசைநூலை எழுதியவர்
அ)ஆபிரகாம் பண்டிதர்                 ஆ)விபுலானந்த அடிகள்
இ)அண்ணாமலை செட்டி               ஈ_தண்டபானி தேசிகர்

20.’நாட்டுதும் யாமொர் பாட்டுடைச்செய்யுள்’-யாருடைய கூற்று?
அ)சீத்தலைச்சாத்தனார்                 ஆ)கவந்தியடிகள்
இ)இளங்கோவடிகள்                   ஈ)கம்பர்

21.திருநாவுக்கரசர் பாடிய பாடல்வரிகளைத்தேர்வு செய்க
அ)பித்தா பிறைசூடி பெருமானே
ஆ)தென்னாட்டுடைச்சிவனே போற்றி
இ)நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
ஈ)நாமார்க்கும் குடியெல்லாம் நமனை அஞ்சோம்

22.’களிமண்’ இலக்கண குறிப்பு தருக
அ)இடுகுறிப்பெயர்                           ஆ)இடுகுறிப்பொதுப்பெயர்
இ)காரணப்பெயர்                       ஈ)காரணப்பொதுப்பெயர்

23.ஒரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் தருக ; ‘நூ’
அ)எல்                                ஆ)யானை
இ)தோணி                            ஈ)நித்தை

24.சேக்ஸ்பியர் நாடகத்தை தழுவி ‘வாணிபுரத்து வாணிகன்’ நாடகத்தை எழுதியது யார்?
அ)பரிதிமார்கலைஞர்                  ஆ)சங்கரதாசு சுவாமிகள்
இ)பம்மல் சம்பந்தனார்                 ஈ)கந்தசாமி

25.பத்துப்பாட்டில் வஞ்சியடி கலந்த ஆசிரியப்பாவினால் ஆன நூல்கள் எத்தனை?
அ)2                                  ஆ)6
இ)5                                  ஈ)8

26.’வஞ்சி நெடும்பாட்டு ’என்றழைக்கப்படும் நூல்?
அ) மலைபடுகடாம்                        ஆ)பட்டினப்பாலை
இ)குறிஞ்சிப்பாட்டு                          ஈ)முல்லைப்பாட்டு

27.வினைத்தொகையைத்தேர்க
அ)தெய்தவம்                         ஆ)பெறும்பேறு
இ)நல்வினை                          ஈ)தீவினை

28.தவறான இனையைத்தேர்க.
அ)திரை ஒளி –முத்தையா
ஆ)எழுத்து – சி.சு.செல்லப்பா
இ)பொருநை – வண்ணதாசன்
ஈ)அறிவியக்கம் –சாலை இளந்தரையன்

29.’குழந்தைச்செல்வம்’ நூலின் ஆசிரியர்
அ)அழ.வள்ளியப்பா                    ஆ)கவிமணி
இ)நாமக்கல் கவிஞர்                   ஈ)பாரதிதாசன்

30.பொருத்துக
1.துகிர் –      அ) நட்பு
2.கேண்மை – ஆ)பற்றார்
3.புல்லார் –   இ) இகழ்வார்
4.எள்ளுவர்   –ஈ)பவளம்

1    2      3    4
ஆ   அ   ஈ    இ
இ    ஆ  ஈ    அ
ஆ   ஈ   இ    அ
ஈ    அ  ஆ    இ

31.’அன்புள்ள இனிநாம் ஐவராவோம்’ யாருடைய கூற்று?
அ)குகன்                        ஆ)லக்குவன்
இ)ராமன்                        ஈ)அனுமான்

32.’தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’-எனப்பாடியவர்?
அ)பாரதி                         ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்                  ஈ)திரு.வி.க

33.’குறைவற வாசித்தான் பிள்ளை’-யாருக்கு கற்பித்தார்?
அ)காமராசு                      ஆ)வ.வே.சு
இ)உ.வே.சா                      ஈ)முத்துராமலிங்கம்

34.’வாடக்காண்பது மின்னார் மருங்கு’-அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் (ம) எதிர்ச்சொல் தருக.
அ)ஆண்கள் * பெண்கள்           ஆ)ஆடவர்*மகளிர்
இ)பெண்கள்*ஆண்கள்             ஈ)மகளிர்*ஆடவர்

35.’ஆறு’ என்பதன் தவறான பொருளைத்தேர்க
அ)நீர்                           ஆ)எண்
இ)வழி                          ஈ)நீர் ஓடும் ஆறு

36.நம்மாழ்வார் பிறந்த இடம்?
அ)குருகூர்                       ஆ)சீர்காழி
இ)தஞ்சை                       ஈ)சிதம்பரம்

37.சரியான இனையை தேர்வு செய்க
அ)டால்ஸ்டாய் – ஆங்கில நாடகாசிரியர்
ஆ)பெர்னான்ட்ஷா     - ரஷ்ய எழுத்தாளர்
இ)மில்டன் – ஆங்கிலக்கவிஞர்
ஈ)அல்மோரா சிறை – உத்திரபிரதேசம்

38.மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள்?
அ)பல்லவர்                      ஆ)பாண்டியர்
இ)சோழர்                        ஈ)சேரர்

39.புதுக்கவிதைக்கு உயிர்ப்பும் வனப்பும் வழங்குபவை
அ)தென்மம்                           ஆ)எழுத்து
இ)சொல்                               ஈ)படிமம்

40.பண்டைய தமிழர்கள் இறக்குமதி,ஏற்றுமதி பற்றி குறிப்பிடும் தூல்கள்.
அ)மதுரைக்காஞ்சி,குறிஞ்சிப்பாட்டு
ஆ)பட்டிணப்பாலை,குறிஞ்சிப்பாட்டு
இ)அகநானூறு,நெடுநெல்வாடை
ஈ)பட்டிணப்பாலை,மதுரைக்காஞ்சி

41.பகுதி மட்டும் தொழிலைக்குறிப்பது
அ)தொழிற்பெயர்                 ஆ)முதனிலை திரிந்த தொழில்பெ
இ)விகுதிபெற்ற தொழில்          ஈ)முதனிலை தொழில்பெயர்

42.மனிதகுலவளர்ச்சிக்கு ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றங்களும் நிகழ்தல் இயல்பு.இச்சிந்தனை மாற்றத்தின் விளைவே _______________ன் தோற்றம்.
அ)புதுக்கவிதை                  ஆ)சிறுகதை
இ)மரபுக்கவிதை                 ஈ)நாவல்

43.’ஊரிணி நீர் நிறைந்தற்று போல’-உவமையால் விளக்கப்படும் பொருள் யாது?
அ)அறியாமை                   ஆ)பண்பாளரின் தொடர்பு
இ)பண்பாளரின் செல்வம்         ஈ)செல்வத்தின் சிறப்பு

44.’மகரத்தம்’ எனும் பொருள் தரும் எழுத்து?
அ)வ                            ஆ)வா
இ)வி                           ஈ)வீ

45.வரகுணப்பாண்டியனின் அவைப்புலவர்
அ)புகழேந்தி                          ஆ)கம்பர்
இ)ஒட்டக்கூத்தர்                 ஈ)ஜெயங்கொண்டார்

46.’மணிமொழி’ நூல்நிலையம் உருவாக்கியவர்?
அ)மறைமலை அடிகள்           ஆ)பரிதிமாற்கலைஞர்
இ)தேவநேய பாவாணர்           ஈ)ரா.பி.சேதுப்பிள்ளை

47.’கடந்தான்’என்பதன் வினையெச்சம் தருக
அ)கடக்க                            ஆ)கடந்த
இ)கட                                ஈ)கடத்தல்

48.’தமிழ்வேதம் செய்த மாறன்’-என அழைக்கப்படுபவர்?
அ)நம்பியாண்டார் நம்பி                ஆ)நாதமுனிகள்
இ)குலசேகராழ்வார்                     ஈ)நம்மாழ்வார்

49.புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ)5                             ஆ)7
இ)12                            ஈ)10

50.செப்பலோசை பெற்று வருவது?
அ)வெண்பா                      ஆ)வஞ்சிப்பா
இ)கலிப்பா                       ஈ)ஆசிரியப்பா

51.யூரியாவை உருவாக்கும் உயிரியல் தயாரிப்பு முறை?
அ)ஆர்னித்தைன்                 ஆ)கோல்சிசைன்
இ)கால்வின்                          ஈ)கோல்கை

52.சாங்கியம் என்ற சொல்லின் அர்த்தம்?
அ)பண்பாடு                      ஆ)பூரண அறிவு
இ)புத்தி                          ஈ)முரண்பாடு

53.கி.மு.6ம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்டமுதல் மரபு?
அ)சுங்க மரபு                        ஆ)சிசுநாக மரபு
இ)ஹர்யங்க மரபு                     ஈ)மௌரியமரபு

54.சாளுக்கியர்களுக்குப்பிறகு தக்காணத்தை ஆண்ட மரபு?
அ)ராஸ்டிரகூடர்கள்               ஆ)பாமினி அரசு
இ)சுல்தானிய மரபு               ஈ)கல்யாணி சாளுக்கிய மரபு

55.நிலநடுக்கமானியில் இறுதியாகப்பதிவாகும் அலைகள் எவை?
அ)P அலைகள்                   ஆ)Lஅலைகள்
இ)மேற்புர அலைகள்             ஈ)B,C,இரண்டும்

56)63.84169801ன் வர்க்கமூலம்?
அ)8.8801                         ஆ)7.9901
இ)8.9901                         ஈ)7.6601

57)மெக்னேஷ் ,ருபேஷ் ஆகியோரின் தந்தை ரூ.36 ஐ அவர்களின் வயது விகிதங்களுக்கு ஏற்ப பிரித்தளிக்கிறார்.மெக்னேஷின் வயது 15  ருபேஷின் வயது 12 எனில் அவர்கள்பெறும் தொகை எவ்வளவு?
அ)19,17                          ஆ)20,16
இ)21,15                          ஈ)22,14

58.தர்மாம்பாள் அம்மை நினைவு விதவை மறுமண நிதி உதவிதிட்டத்தில் பயன்பெற எத்தனை நாட்களுல் விண்ணப்பிக்க வேண்டும்?
அ)திருமணம் முன்               ஆ)திருமணமாகி 2 வருடத்துள்
இ) திருமணமாகி 6 மாதத்துள்          ஈ)கால அவகாசம் இல்லை

59.உழவர்பாதுகாப்பு அட்டை உள்ள குடும்பத்தில்,விடுதியில் தங்கிப்படிக்கும் பட்டமேற்படிப்பு(PG) பயிலும் மாணவிகளுக்கு வழங்கும் உதவித்தொகை?
அ)4750                          ஆ)2500
இ)2750                          ஈ)3750

60.அயல்நாட்டிலுள்ள இந்தியகுடிமக்களின் பிறப்பு,இறப்பு பற்றி கூறும் பிரிவு?
அ)பிரிவு 20                      ஆ)பிரிவு 21
இ)பிரிவு 22                      ஈ)பிரிவு 23

61.போர்டாக்ஸ் கலவை தயாரிக்கப்பயன்படுவது?
அ)காப்பர் சல்பேட்                ஆ)கால்சியம் ஹைட்ராக்சைடு
இ)A,B இரண்டும்                 ஈ)பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

62.துணைக்குடியரசுத்தலைவரின் பதவி விலகல் பற்றி உடனடியாக யாருக்குத்தெரிவிப்பார்?
அ)உச்சநீதிமன்ற நீதிபதி                ஆ)பிரதமர்
இ)மக்களவை சபாநாயகர்         ஈ)மாநிலங்கலவை துணை தலைவர்

63.நாடுமுழுவதும் பல அடுக்குகளிலுள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் ஒரே அமைப்பின் கீழ் செயல்படும் முறை?
அ)ஒருங்கிணைந்த நீதித்துறை    ஆ)சுதந்திரமான நீதித்துறை
இ)துணை நீதித்துறை             ஈ)இவற்றில் எதுவுமில்லை

64.புற்றுநோயைத்தோற்றுவிக்கும் வைரஸ்கள்?
அ)மைக்கோ                     ஆ)ஆன்கோஜினிக்
இ)பைட்டோ                     ஈ)விலங்கு வைரஸ்

65.இந்தியத்திட்டக்குழு மனித மேம்பாட்டு அறிக்கையை அறிமுகம் செய்த ஆண்டு?
அ)2000                          ஆ)2001
இ)2010                          ஈ)2012

66.தவறானதை தேர்ந்தெடு.
அ)உலோகங்கள் சிறந்த ஒடுக்கும் காரணிகள்
ஆ) உலோகங்கள் நேர்மின்தன்மை உடையது
இ)எலக்ட்ரானை எளிதில் ஏற்கும்
ஈ)ஓசையை உருவாக்கும் பண்பை பெற்றுள்ளன.

67.ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றி வேலை வாங்குவதை தடை செய்யும் விதி?
அ)Article 42                            ஆ) Article 41
இ) Article 23                           ஈ) Article24

68.மாநிலகட்சி அந்தஸ்தை பெற 8% வாக்குகளைப்பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி சேர்க்கப்பட்ட ஆண்டு?
அ)2010                               ஆ)2011
இ)2012                               ஈ)2013

69.மெக்னேஷ்,ருபேஷ் இருவரும் முறையே 6லட்சம், 7லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்கினர்.1 ஆண்டிற்கு பின் 65000 நஷ்டம் ஏற்பட்டால் மெக்னேஷ்கான இழப்புத்தொகை எவ்வளவு?
அ)30000                              ஆ)35000
இ)40000                               ஈ)28000         

70.500மீ நீளமுள்ள புகைவண்டி 36 வினாடிகளில் 220மீ நீளமுள்ள நடைபாதையை கடக்கிறது எனில் புகைவண்டியின் வேகம் மணிக்கு என்ன?
அ)60கி.மீ                             ஆ)72கிமீ
இ)80 கிமீ                             ஈ)85கிமீ

71.நவீன் ரூ.8000 உடன் தொழில் ஆரம்பித்தான்.6 மாதத்திற்குபின் கவின் குறிப்பிட்ட தொகையுடன் சேர்ந்தான்.இருவரும் 1 ஆண்டு முடிவில் பெறும் லாபங்கள் சமம் எனில் கவின் முதலீடு செய்த தொகை எவ்வளவு?
அ)18000                              ஆ)17500
இ)16000                               ஈ)16500

72.மிதவாதிகளுக்கெல்லாம் மிதவாதி என அழைக்கப்பட்டவர்?
அ)விஜயராகவச்சாரி                   ஆ)ஶ்ரீ சீனிவாச சாஸ்திரி
இ)நடேசன்                            ஈ)ராஜாஜி

73.ராஜபுத்ர அரசர்களில் வலிமையான மரபு ?
அ)பாலர்கள்                                ஆ)சௌகான்கள்
இ)சந்தேலர்கள்                        ஈ)பிரதிகாரர்கள்

74.பொதுநிதி என்பது __________ பற்றி ஆராயும் இயல்
அ)வரவு                              ஆ)செலவு
இ)வரி                                ஈ)அரசின் வரவு செலவு

75.பாலீத்தீன் தயாரிக்க பயன்படுவது
அ)ஈத்தீன்                             ஆ)ஈத்தைன்

இ)மீத்தேன்                           ஈ)ஈத்தேன்


Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *