TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts

தமிழ் இலக்கணம் - சொல் - 2

சென்ற பகுதியில் வினைச்சொல்லின் வகைகள் பார்த்தோம் . இப்பதிவில் , அவற்ளைப்பற்றிய , விளக்கங்களை எ.காவுடன் காணலாம் .

முற்று

·         ஒரு பொருள் செய்த தொழிலை குறித்துவந்த, முற்று பெற்ற சொல் .

·         திணை , பால் , எண் , இடம் , ஆகியவற்றுடன் காலத்தையும் காட்டும் .

·         பெயர்ச்சொல்லுக்கு துணை நின்று , வாக்கியத்தின் பொருளை முடித்துக்காட்டுவது வினைமுற்று .

எ.கா

புலவர் பாடினார் .

மேலே உள்ள வாக்கியத்தில் , புலவர் என்பது பெயர்ச்சொல் என்று அறிவீர்கள் . அதை முடிவு செய்யும் பொருட்டு ‘பாடினார்’ என்ற வினைச்சொல் வருகிறது .



முற்று இரண்டு வகைப்படும்
1.   தெரிநிலை வினைமுற்று
2.   குறிப்பு வினைமுற்று.

தெரிநிலை வினைமுற்று

·         செய்பவன் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் என ஆறையும் உணர்த்துவது  , தெரிநிலை வினைமுற்றாகும் .

·         மேலே உள்ளவற்றில் , சில குறைந்து வந்தாலும் , காலம் மட்டும் தெளிவாக காட்டப்படும் .

எ.கா
எழிலரசி மாலை தொடுத்தாள் .

இதில் ,
செய்பவன்
எழிலரசி
கருவி
நார் , பூ ,கை
நிலம்
அவளின் இருப்பிடம்
செயல்
தொடுத்தல்
காலம்
இறந்த காலம்
செயபொருள்
மாலை


இதில் கருவி என்பது நார் , பூ , கை என்பது மறைந்து வந்துள்ளது . அவளின் இருப்பிடமும் உணர்த்தப்படவில்லை . ஆனால் , வேலை நடந்த காலம் , இறந்த காலம் என்று தெளிவாக தெரிகிறது .


குறிப்பு வினைமுற்று

·         செய்பவனை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி , பிறவற்றை குறிப்பால் உணர்த்தும் .

·         இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது .

·         6 வகைப்பெயர்களில் வரும் .

புகழேந்தி பொன்னன்
பொருட்பெயர்
வேலவன் மதுரையான்
இடப்பெயர்
நடராஜன் திருவாதிரையான்
காலப்பெயர்
வள்ளல் செங்கண்ணன்
சினைப்பெயர்
ராமன் இனியன்
பண்புபெயர்
அஜித் நடிகன்
தொழிற்பெயர்


இது மட்டுமின்றி இன்னும் ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்றும் பாடப்பகுதியில் உள்ளன . அதையும் , ஒரு லைன் பார்த்துவிடலாம் .



ஏவல் வினைமுற்று

·         முன்னிலை இடத்தாரை , ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டு ஏவுவது , ஏவல் வினைமுற்றாகும் ..

·         இது எதிர்காலம் காட்டும் .

·         ஒருமை-பன்மையை உணர்த்தும் .


எ.கா –

நீ படி .

(ஒருமையில் படிக்கவேண்டும் என்று கட்டளையிடுதல்)

நீர் வாரும்

(பன்மையில் வரவேண்டும் என்று கட்டளையிடுதல்)


வியங்கோள் வினைமுற்று

க , இய , இயர் எனும் விகுதிகளை பெற்று  , வாழ்த்துதல் , வைதல் , விதித்தல் , வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுகள் .
இவை , மூவிடங்கள் (தன்மை , முன்னிலை , படர்க்கை) மற்றும் ஐம்பால் (ஆண், பெண் , ஒன்றன் , பலவின் , பலர்)களிலும் வரும் .

எ.கா

வாழ்க = வாழ் + க
வாழிய = வாழ் + இய
வாழியர் = வாழ் + இயர்

அடுத்து ,

வாழ்க = வாழ்த்துதல்
ஒழிக = வைதல்
செல்க = விதித்தல்
ஈக = வேண்டல்




உடன்பாட்டு (ம) எதிர்மறை

·         அனைத்து வினைமுற்றுகளும் , உடன்பட்டோ , எதிர்த்தோ வருதல் .

·         தொழில் நிகழ்ந்நால் உடன்பாட்டு வினைமுற்று .

·         தொழில் நிகழவில்லையெனில் , எதிர்மறை வினைமுற்று .

எ.கா
உடன்பாட்டு
எதிர்வினை
தெரிநிலை
தொடுத்தான்
தொடுத்திலன்
ஏவல்
செல்வீர்
செல்லாதீர்
வியங்கோள்
சொல்லுக
சொல்லற்க


அவ்வளவு தான் நண்பர்களே !  வினைமுற்று முடிந்தது . அடுத்த பகுதியில் எச்சம் பற்றி பார்க்கலாம்



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
Share:

தமிழ் இலக்கணம் - சொல் - 1

சொல்

ஒர் எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது , சொல் எனப்படும்

வேறுபெயர்கள் – பதம் , மொழி , கிளவி

சொல் , 4 வகைப்படும்
1.   பெயர்ச்சொல்
2.   வினைச்சொல்
3.   இடைச்சொல்
4.   உரிச்சொல்

பெயர்ச்சொல்

பெயரை உணர்த்தும் சொல் , பெயர்ச்சொல் ஆகும் .

பொருள் , இடம் , காலம் , சினை (உறுப்பு), குணம் (பண்பு) , தொழில் என்ற ஆறில் எதாவது ஒன்றை உணர்த்தும் வகையில் இருக்கும் . இந்த ஆறும் , பொருளாது ஆறு (அ) பொருள் முதலாறு என்றும் அழைப்பர் .

பொருட்பெயர்
மனிதன் , பசு , மயில் , புத்தகம்
இடப்பெயர்
சேலம் , ஈரோடு ,நாமக்கல் ,
காலப்பெயர்
மணி, நாள் , மாதம் , வருடம்
சினைப்பெயர்
கை ,கால் , மூக்கு , கண்
பண்புபெயர்
நீளம் , இனிமை ,வெண்மை, வட்டம்
தொழிற்பெயர்
படித்தல் , எழுதல் , உண்ணல்

மூவகை மொழி

(மொழி = சொல்)

இது ,
1.   தனிமொழி
2.   தொடர்மொழி
3.   பொதுமொழி

என மூவகைப்படுத்தலாம் . நன்கு புரிந்து கொள்க . மொழி எத்தனை வகைப்படும் என்றால் , 3 என்பதுதான் விடை . சொல் என்றால் மாத்திரமே 4 வகைப்படும் என்று விடையளிக்கவேண்டும் .

தனிமொழி

ஒரு சொல் , தனித்து நின்று பொருளை உணர்த்தல் .
எ.கா
மனிதன் , நிலம்

தொடர்மொழி
ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் வந்து ,ஒன்று (அ) பல பொருளை உணர்த்தல் .
எ.கா
நிலங்கடந்தான்

இதில் , நிலம் என்ற சொல்லும் , கடந்தான் என்றான் சொல்லும் வருகிறது.  இதன்மூலம் இரு சொற்கள் வந்து ¸நிலத்தை கடந்தான் எனும் பொருளை தருகிறது .


பொதுமொழி
தனிமொழிக்கும் , தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது .

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் , தொடர்ந்து நின்று, வேறொரு பொருளையும் உணர்த்துவது .

எ.கா
தாமரை
இச்சொல் , தாமரை எனும் மலரைக்குறிக்கிறது . அதுவே தா + மரை என்று பிரியும்போது , தாவுகின்ற மான் என்று குறிக்கிறது .

வினைச்சொல்

ஒரு பொருளின் வினை (செயல்)யை உணர்த்தும் சொல் .

முடிவு பெற்ற வினைச்சொல் , முற்று எனவும் ; முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் என்றும் வழங்கப்படும் .




முற்று இரண்டு வகைப்படும் = 1. தெரிநிலை வினைமுற்று , 2, குறிப்பு வினைமுற்று

எச்சம் இரண்டு வகைப்படும் = 1. பெயரெச்சம் , 2. வினையெச்சம்

Share:

தமிழ் இலக்கணம் – எழுத்து -2 | Tamil Illakkanam Notes


முதல் பகுதியைப்படிக்க , இங்கே அழுத்துங்கள்




4. ஒற்றளபெடை

ஒற்று + அளபெடை

ஒற்றெழுத்து , தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து , நீண்டு ஒலித்தல் . இதைப்பற்றி அறிந்து கொள்ள தேவையில்லை . அப்படியே நான் விளக்கி கூறினாலும் , குழப்பம் தான் வரும் .

5. குற்றியலுகரம்

குறுமை + இயல் + உகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம் , அரைமாத்திரயாக ஒலிப்பது , குற்றியலுகரம் எனப்படும் .

க , ச , ட , த , ப , ற எனும் வல்லின எழுத்துகளுடன் , ‘உ’கரம் இணைந்து  , கு , சு , டு , து, பு, று எனும் வார்த்தைகள் தோன்றும் . இந்த எழுத்துகள் , தனிநெடில் உடனோ ,பல எழுத்துகளை தொடர்ந்து , கடைசியில் வந்தாலோ , அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம் , அரைமாத்திரயளவே ஒலிக்கும் .

எ.கா – 1 .தனிநெடிலுடன் வரும் போது ,

காசு – இவ்வார்த்தைச்சொல்லி பார்த்தால் , காஸ்+உ என்றே நாம் உச்சரிப்போம் .’சு’க்கு பதில் , ‘உ’ என்றுதான் கடைசியில் வரும் .

எ.கா – 2 . பல எழுத்துகள் சேர்ந்து வருதல் .

பந்து  - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .

இன்னும் புரியவில்லையெனில் , CASTLE எனும் ஆங்கில வார்த்தையை எவ்வாறு நாம் உச்சரிப்போம் ? கேஸில் என்று தானே ! அவ்வார்த்தையில் வரும் T ஆனது , மறைந்து வருகிறதல்லவா ? அதேபோல் தான் , இதுவும் . (இது சும்மா ஒரு எ. கா வுக்கா . ஒரிஜினல் இலக்கணம் வேறுமாதிரி வரும்)


குற்றியலுகரம் , ஆறு வகைப்படும் .

எ.கா
வகை
நாடு
நெடில்தொடர் குற்றியலுகரம்
எஃகு
ஆய்ததொடர் ‘’
வரகு
உயிர்த்தொடர்
பத்து
வன்தொடர்
பந்து
மென்தொடர்
மார்பு
இடைத்தொடர்



6. குற்றியலிகரம்

குறுமை + இயல் + இகரம் .

மேலே பார்த்தவாறு இதுவும் ஒன்றே தான் .’உ’கரத்திற்கு பதில் ‘இ’கரம் , அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .

எ. கா

நாடு + யாது = நா(ட் + உ) + யாது  = நாடியாது
இவ்விடத்தில் , வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் . செம குழப்பமா இருக்கா ? குற்றியலுகரம் , இகரமாக திரிவது தான் குற்றியலிகரம் .


7. ஐகாரக்குறுக்கம்

ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது , ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே , ஐகாரக்குறுக்கம் . என்னடா இது ? ஒன்றரையாவும் குறையுது , ஒன்னாவும் குறையுதுனு பாக்குரிங்களா ?

ரொம்ப சிம்பிள் . ஒரு வார்த்தையின் முதல் சொல்லாக ‘ஐ’ வந்தால் , ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்ம.
எ.கா – ஐந்து . இந்த இடத்துல , ‘ஐ’ங்ற சொல்ல , இரண்டு விநாடி நம்மால சொல்ல முடியுமா ? முடியாது . சும்மா , நீங்களே சொல்லிப்பாருங்க  .

வார்த்தையின் நடுவே வரும்போது , ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
எ.கா  - வளையல் . இத சொல்லும்போது , ‘ஐ’ங்றது , அடங்கிப்போயிருக்கும் .

8. ஔகார குறுக்கம்

இது முதல் சொல்லாகத்தான் , ஒரு வார்த்தையில் வரும் . அப்படி வரும் போது , இரண்டு ஆத்திரையிலிருந்து , ஒன்றரையாக குறைந்து ஒலிக்கும் . அவ்வளவு தான் .

9. மகரக்குறுக்கம்

 ‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .

10 .ஆய்த குறுக்கம்
‘ஃ’ ஆய்த எழுத்து , தம்க்குரிய அரை மாத்திரையிலிந்து , கால் மாத்திரையாக ஒலித்தல் .

எ.கா
கல் + தீது = கஃறீது
இதை சொல்லிப்பாருங்கள் .அக்கு என்று தனியாக இருக்கும் போது அழைக்கப்படும் ஆயுத எழுத்து , மேலே உள்ள வார்த்தையுடன் படிக்கும்போது ஹ என்று SILENT ஆக இருக்கும் .




குறுக்கம் என்றாலே , சுருக்குதல் என்று பொருள் . நமது சிலபஸ்ஸில் , எழுத்து பற்றிய சிலபஸ் இல்லையெனினும் , இதை முதலில் லைட்டாக அறிந்து கொண்டால்தான் , பின்னால் வரும் இலக்கணங்களை , வெயிட்டாக படிக்கமுடியும் . சும்மா , ஒரு டைம் படிங்க . அடுத்து வரும் , சொல் இலக்கணம் , நமக்கு சிலபஸ்ஸில் உள்ளது .


=============================================================================



தொடர்புடைய பதிவுகள்




நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .



Share:

தமிழ் இலக்கணம் - எழுத்து - 1



வணக்கம் நண்பர்களே !! தமிழ் இலக்கணம் பற்றிய பதிவினை எழுதுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க , இம்மாதத்தில் , தமிழ் இலக்கணம் பற்றிய அனைத்துப்பதிவுகளையும் வெளியிடலாம் என்றுள்ளேன். சிலபஸ்ஸில் உள்ளபடி பார்த்தால் , பல இலக்கணவகைகள் புரியாமல் போய்விடலாம் என்பதால் , தமிழ் இலக்கணம் முழுமையும் என்னால் முடிந்தவரை சிறியதாகவும் எளிமையாகவும் விளக்க முயற்சிக்கிறேன் .


தமிழ் இலக்கணம் 5 வகைப்படும் என்று அனைவரும் அறிவீர் . அவையாவன ,
1.   எழுத்து
2.   சொல்
3.   பொருள்
4.   யாப்பு
5.   அணி
இந்த பகுதியில் , எழுத்து இலக்கணத்தை பார்க்கலாம் .

எழுத்து

முதலெழுத்து

‘அ’ – முதல் ‘ஔ’  வரையுள்ள உயிரெழுத்துகள் 12-ம் , ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துகள் 18 – ம் ஆன 30 எழுத்துகளும் , முதலெழுத்துகளாகும் . இந்த 30 எழுத்துகளும் சேர்ந்து , 216 உயிர்மெய் எழுத்துகள் உருவாக காரணமாக இருப்பதால் , இவை முதலெழுத்துகள் என்றழைக்கப்படுகின்றன .


மாத்திரை

எழுத்துகள் ஒலிக்கப்படும் , கால அளவு மாத்திரை எனப்படும் . இயல்பாக நாம் கண்ணிமைக்கும் நேரம்  மற்றும் கைநொடிக்க ஆகும் நேரமே ஒரு மாத்திரை எனப்படும் .

1.  உயிரெழுத்துகள்

உயிரெழுத்துகளை , குறில் , நெடில் என இருவகையாக பிரிக்கலாம் .

குறில்
நெடில்




குறில்

குறுகிய ஓசையினை உடைய எழுத்துகள் .

ஒரு மாத்திரை கால அளவில் ஒலிக்கும்

நெடில்

நீண்ட ஓசையினை உடையது .

இரண்டு மாத்திரை நேரத்தில் ஒலிக்கும் .


2.  மெய்யெழுத்துகள்

மெய்யெழுத்துகளில் , வன்மையான ஓசையினை உடைய எழுத்துகள் வல்லினம் என்றும்  , மென்மையான ஓசையையுடைய எழுத்துகள் , மெல்லினம் என்றும் , இவற்றிற்கு இடைப்பட ஓசையை உடையவை இடையினம் என்றும் அழைக்கப்படுகின்றன .ஒவ்வொரு வல்லின எழுத்திற்கும்  , அடுத்து வரும்  மெல்லின எழுத்து , அதன் இனவெழுத்து எனப்படும் .

‘க்’ என்பதன் இனவெழுத்து ‘ங்’
‘ச்’ என்பதன் இனவெழுத்து ‘ஞ்’

மெய்யெழுத்துகள் , ஒவ்வொன்றும் அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் .

மெய்யெழுத்துகள் – 18
க ச ட த ப ற
வல்லினம்
ங ஞ ண ந ம ன
மெல்லினம்
ய ர ல வ ழ ன
இடையினம்


3.  சார்பெழுத்துகள்

முதலெழுத்துகளை சார்ந்து வரும் , அதே நேரத்தில் முதலெழுத்துகளின் திரிபு மற்றும் விகாரத்தின் காரணமாக பிறக்கும் எழுத்துகளை , சார்பெழுத்துகள் என்பர் .

இவை பத்து வகைப்படும் .

சார்பெழுத்துகள்
1.   உயிர்மெய்
6.   குற்றியலிகரம்
2.   ஆயுதம்
7.   ஐகாரக்குறுக்கம்
3.   உயிரளபெடை
8.   ஔகாரக்குறுக்கம்
4.   ஒற்றளபெடை
9.   மகரக்குறுக்கம்
5.   குற்றியலுகரம்
10. ஆயுதக்குறுக்கம்

1.  உயிர்மெய்

ஒரு உயரெழுத்தும் , மெய்யெழுத்தும் சேர்ந்து பிறப்பவை உயிர்மெய் .

12 உயிரெழுத்துகளும் , 18 மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து , மொத்தம் 216 உயிர்மெய்யெழுத்துகள் தோன்றும் .

5 உயிர்க்குறில் , 18 மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து , 90 உயிர்மெய்க்குறிலும் , 7 உயிர்நெடில் , 18 மெய்யெழுத்துகளுடன் இனைந்து 126 உயிர்மெய் நெடிலும் பிறக்கின்றன .

எ.கா –

உயிர்க்குறில் = அ , இ , உ , எ , ஒ
மெய்யெழுத்து = க் – ன்

குறில் + மெய்யெழுத்து = க , ங , ச ,…. , கி , ஙி ,… ,கு ,ஙு , … கெ , ஙெ


உயிர்நெடில் = ஆ , ஈ, ஊ ,ஏ ,ஐ, ஓ ,ஔ
நெடில் + மெய்யெழுத்து = கா ,ஙா …. ,கீ , ஙீ ,…, கூ , ஙூ ,,,,. கே , ஙே


6 வல்லின மெய்யெழுத்துகளுடன் , 5 உயிர்க்குறில் இணைந்து 30 வல்லின உயிர்மெய்க்குறிலும் , அதே 6 வல்லின மெய்யுடன் , 7 உயிர்நெடில் எழுத்துகள் சேர்ந்து 42 வல்லின உயிர்நெடில் எழுத்துகளும் பிறக்கின்றன .

எ.கா

வல்லின எழுத்துகள்  = க ச ட த ப ற

உயிர்க்குறில் = அ , இ , உ, எ, ஒ

குறில் + வல்லினம் = க , கி , கு , கெ , கொ , ச , சி, சு ,செ …


இதே போன்று இடையினம் மற்றும் மெல்லின எழுத்துகளுடன் , உயிர்க்குறிலும் , உயிர்நெடிலும் இணையும் .


உயிர்மெய்யெழுத்து்களை பிரித்தால் ,

க = க் + அ

முதலில் மெய் (க்) யும் , அடுத்து உயிரும் (அ) , அமையும் . இதை ,மெய்யுயிர் என்று அழைப்பதே முறையாகும் . ஆனால் , உயிரெழுத்தின் சிறப்பு காரணமாக  , உயிர்மெய் என்று அழைக்கப்படுகிறது .


2.  ஆய்தம்

மூன்று புள்ளிகளாக எழுதப்படும் ஆய்த எழுத்திற்கு அஃகேனம் , தனிநிலை , புள்ளி , ஒற்று என்று வேறு பெயர்களும் உண்டு . தனக்குமுன்னர் ஒரு உயிர்க்குறிலையும் , பின்னர் ஒரு வல்லினமெய்யையும் பெற்றே இது உச்சரிக்கப்படும் .

எ.கா

அஃது = அ (உயிர்க்குறில்) + ஃ (ஆய்தம் ) + து (த்+உ , த் என்பது வல்லினம் . அதனுடன் ‘உ’ எனும் உயிர் இணைந்து வந்துள்ளதால் , வல்லின உயிர்மெய் ஆகின்றது .)

3.  உயிரளபெடை

படிக்கும்போது உயிரளபடை என்று யாரும் படிக்காதீர்கள் .இது ‘பெடை’ .

உயிர் + அளபெடை . அளபெடை என்றால் , நீண்டு ஒலித்தல் என்று பொருள் .

உயிரெழுத்துகளில் , நெட்டெழுத்துகள் ஏழும் , தமக்குரிய இரண்டு மாத்திரைகளில் (குறில் = 1 மாத்திரை  , நெடில் = 2 மாத்திரை) இருந்து நீண்டு ஒலிக்கும் நிகழ்வு , உயிரளபெடை ஆகும் .

முதலெழுத்து , இடையெழுத்து , கடையெழுத்து என்று , மூவகை இடங்களில் , இவை நடைபெறும் .

எ.கா –

1.   ஓஒதல் வேண்டும் .
இதில் ,’ ஓதல் ‘ என்று வந்திருக்கவேண்டும் . இவ்விடத்தில் ‘ஓ’ எனும் உயிர்நெடில் எழுத்து , தனக்குரிய இனவெழுத்தான  ‘ஒ’ என்று தொடர்ந்து வந்து அளபெடுத்துள்ளது . மேலும் , வார்த்தையின் தொடக்கத்திலேயே அளபெடுத்துள்ளதால் , இது முதல் எழுத்துஅளபெடுக்கும் வகையறா ஆகும் .


2.   கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சான்றாய்
இதில் , வார்த்தையின் நடுவில் ‘தூ (த் + ஊ)’ எனும் உயிர்மெய் நெடில் , தன் இனவெழுத்தான ‘உ’ வுடன் இணைந்து அளபெடுத்து வருகிறது . வார்த்தைகளின் நடுவில் அளபெடுத்து வரும்காரணத்தினால் , இவை இடையெழுத்து அளபெடுத்துவரும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும் . இதேபோல் , கடையெழுத்து அளபெடுத்து வருவதையும் எ. காவுடன் விளக்கலாம் .

உயிரளபெடையானது , மூன்று வகைப்படும் .

1.   இசைநிறையளபெடை
செய்யுளின் ஓசை குறையுமிடத்து , குறைந்த ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல் .
உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்
2.   இன்னிசையளபெடை
ஓசை குறையவில்லை எனினும் , இனிமைக்காக அளபெடுத்தல்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய்
3.   சொல்லிசையளபெடை
பெயர்ச்சொல்லை , வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.
உரனசைஇ உள்ளம் துணையாக . (இதில் உரனசை என்பது விருப்பம் எனும் பெயர்ச்சொல்லாகும் . அதனுடன் இ என்பது இணைந்து விரும்பி என்று வினைச்சொல்லாக பொருள் தரும்பொருட்டு , அளபெடுத்துள்ளது)


இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்தவும்


தொடர்புடைய பதிவுகள்


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .

Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *