தமிழகம்-முழு பார்வை(கட்சிகள்,சங்கங்கள்,கோயில்களும் கட்டிய அரசர்களும்,போர்கள்,பல்கலைக்கழகங்கள் ,மின்னுற்பத்தி நிலையங்கள்,சிறப்பம்சங்கள் )
இந்த பதிவின் மூலம் தமிழகம் பற்றிய முழுமையான விஷயங்கள் ரத்தினச்சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.படித்து பயனடையவும்.
தமிழகத்தின் சிறப்பம்சங்கள்
தென்னிந்தியாவின் நுழைவாயில் | சென்னை |
தமிழகத்தின் நுழைவாயில் | தூத்துக்குடி |
மலைகளின் ராணி | உதகமண்டலம் |
மலைகளின் இளவரசி | வால்பாறை |
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
ஆயிரம் கோயில்களின் நகரம் | காஞ்சிபுரம் |
முக்கடல் சங்கமம் | கன்னியாகுமரி |
தென்னிந்தியாவின் ஆபரணம் | ஏற்காடு |
தென்னாட்டு கங்கை | காவிரி |
தமிழ்நாட்டின் ஹாலிவுட் | கோடம்பாக்கம் |
தமிழ்நாட்டின் ஹாலந்து | திண்டுக்கல் |
தமிழ்நாட்டின் ஜப்பான் | சிவகாசி |
ஏரிகள் நிறைந்த மாவட்டம் | காஞ்சிபுரம் |
முத்து நகரம் | தூத்துக்குடி |
மலைக்கோட்டை நகரம் | திருச்சி |
நீளமான கடற்கரை | மெரீனா |
நீளமான ஆறு | காவிரி |
உயர்ந்த கோபுரம் | திருவில்லிபுத்தூர் |
உயர்ந்த கொடிமரம் | செயின்ட் ஜார்ஜ் கோட்டை |
மிகப்பெரிய மாவட்டம் | ஈரோடு |
மிகப்பெரிய அணை | மேட்டூர் |
மிகப்பெரிய கோயில் | தஞ்சை பெரிய கோயில் |
மிகப்பெரிய பாலம் | பாம்பன் பாலம் |
மிகப்பெரிய தொலைநோக்கி | காவனூர் |
சென்னையின் பெருமைகள்
மெரீனா கடற்கரை | சென்னையில் உள்ள இந்த கடற்கரை உலகின் நீளமான இரண்டாவது கடற்கரை.இதன் நீளம் 13 கி.மீ.உலகின் நீளமான கடற்கரை ரியோடி ஜெனீவா கடற்கரை ஆகும். |
வைனுபாப்பு தொலைநோக்கி | வேலூர் மாவட்டத்தில் காவனூர் என்ற இடத்தில் உள்ளது .இது ஆசியாவிலேயே மிகப்பெரியது. |
திருவள்ளுவர் சிலை | கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஜனவரி 1, 2000 ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது. |
கோயம்பேடு பேருந்து நிலையம் | சென்னையில் உள்ள இந்த பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியது.இது ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளது.இதன் சிறப்பு.இப்பேருந்து நிலையம்2003 ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவினால் தொடங்கி வைக்கப்பட்டது. |
புழல் மத்திய சிறைச்சாலை | திருவள்ளூர் மாவட்டம் புழலில் கட்டப்பட்டுள்ள இந்த சிறைச்சாலை ஆசியாவிலேயே மிகப்பெரியது.இதன் சிறப்பு ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை சிறையிலடைக்கலாம். |
திருபுரம் | வேலூர் அருகிலுள்ள திருபுரம் என்ற இடத்தில் ரூ.300 கோடி செலவில் தங்கத்தினால் ஆன கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன் முதல் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 24, 2007 அன்று நடந்தது.தமிழகத்தின் தங்க கோயில் என அழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வம் நாராயினி ஆகும். |
தமிழ்நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் பட்டியல்:-
அனல் மின் நிலையங்கள்
மேட்டூர் அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல் மின்நிலையம் (தூத்துக்குடி மாவட்டம்)
எண்ணூர் அனல் மின்நிலையம்
நெய்வேலி அனல் மின்நிலையம்
அணு மின் நிலையங்கள்
கல்பாக்கம் அணு மின் நிலையம்
கூடங்குளம் அணு மின் நிலையம் (கட்டப்பட்டு வருகிறது).
நீர் மின் நிலையங்கள்
குந்தா நீர் மின்நிலையம்
காடம்பாறை நீர்மின்நிலையம்
மேட்டூர் நீர் மின் நிலையம்
பெரியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
சுருளியாறு நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
வைகை நீர் மின்னுற்பத்தி நிலையம் (தேனி மாவட்டம்)
கதவணை மின் நிலையங்கள்
குதிரைக்கல் மேடு கதவணை நீர் மின் நிலையம்
காற்றாலை மின்னுற்பத்தி
கயத்தாறு காற்றாலை மின்னுற்பத்தி (திருநெல்வேலி மாவட்டம்)
ஆரல்வாய்மொழி காற்றாலை மின்னுற்பத்தி (கன்னியாகுமரி மாவட்டம்)
தேனி மாவட்டக் காற்றாலை மின்னுற்பத்தி (தேனி மாவட்டம்)
பாலக்காட்டுக் கணவாய்ப் பகுதியில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள்
சூரிய ஒளி மின்நிலையங்கள்
சிவகங்கையில் உள்ள ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்
சென்னை பல்கலைக்கழகம் | சென்னை | 1857 |
அண்ணாமலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் | சிதம்பரம் | 1929 |
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | மதுரை | 1966 |
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | 1971 |
காந்திகிராமம் பல்கலைக்கழகம் | திண்டுக்கல் | 1976 |
அண்ணா பல்கலைக்கழகம் | சென்னை | 1978 |
தமிழ் பல்கலைக்கழகம் | தஞ்சாவூர் | 1981 |
பாரதியார் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | 1982 |
பாரதிதாசன் பல்கலைக்கழகம் | திருச்சி | 1982 |
அன்னை தெர்சா மகளிர் பல்கலைக்கழகம் | கொடைக்கானல் | 1984 |
ஆழகப்பா பல்கலைக்கழகம் | காரைக்குடி | 1985 |
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | 1987 |
அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | 1988 |
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் | சென்னை | 1989 |
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | திருநெல்வேலி | 1996 |
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் | சென்னை | 1996 |
பெரியார் பல்கலைக்கழகம் | சேலம் | 1997 |
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | சென்னை | 2001 |
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் | வேலூர் |
தமிழகத்தில் நடந்த போர்கள்
திருப்போர்ப்புறம் போர் | சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை /சோழமன்னன் கோச்செங்கனான் |
தலையாலங்கானம் போர் | பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்/சேரமன்னன் இரும்பொறை+சோழமன்னர் பெருநற்கிள்ளி+5 வேளிர், மன்னர் |
புள்ளலூர் போர் | பல்லவ மன்னன் மகேந்திர வர்மன்/சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி |
திருப்புறம்பியம் போர் | சோழ மன்னன் விஜயாலயன்/இரண்டாம் வரகுண பாண்டியன் |
வெள்ளூர் போர் | சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன் |
தக்கோலம் போர் | சோழ மன்னன் முதலாம் பராந்தகன்/ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் |
காந்தளூர்ச் சாலை போர் | ராஜராஜசோழன்/சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் |
காளர்பட்டி போர் | வீரபாண்டிய கட்டபொம்மன்/ஆங்கிலேயர்கள் |
அடையாறு போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
முதல் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
இரண்டாம் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
வந்தவாசிப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
மூன்றாம் கர்நாடகப் போர் | ஆற்காடு நவாப்/பிரெஞ்சுக்காரர்கள் |
ஆம்பூர் போர் | முசஃபா ஜங்+சந்தா சாகிப்+பிரெஞ்சுக்காரர்கள் |
தமிழக கோயில்களும் கட்டிய அரசர்களும்
மண்டகப்பட்டு மும்மூர்த்தி கோயில் | முதலாம் மகேந்திர வர்மன் |
சித்தன்ன வாசல் சமணக் கோயில் | முதலாம் மகேந்திர வர்மன் |
மகாபலிபுரம் பஞ்ச பாண்டவர் ரதங்கள் (ஒற்றைக்கால் ரதங்கள்) | முதலாம் நரசிம்ம வர்மன் |
மகாபலிபுரம் கடற்கோயில் | இரண்டாம் நரசிம்ம வர்மன் |
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் | இரண்டாம் நரசிம்ம வர்மன் |
காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில் | இரண்டாம் பரமேசுவர வர்மன் |
திருவதிகை சிவன் கோயில் | இரண்டாம் பரமேசுவர வர்மன் |
கூரம் கேசவ பெருமாள் கோயில் | இரண்டாம் நந்திவர்மன் |
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (தஞ்சை பெரிய கோயில்) | முதலாம் ராஜராஜன் |
கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில்(கங்கை கொண்ட சோழபுரம்) | முதலாம் ராசேந்திரன் |
ஜெயங்கொண்ட சோழீச்சுரம் கோயில் | முதலாம் ராஜாதிராஜன் |
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் | இரண்டாம் ராஜராஜன் |
கும்பகோணம் சூரியனார் கோயில் | முதலாம் குலோத்துங்கன் |
திருமலை நாயக்கர் மஹால் | திருமலை நாயக்கர் |
புது மண்டபம் | திருமலை நாயக்கர் |
மதுரை மீனாட்சி கோயில் | நாயக்கர்கள் |
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுரம் | திருமலை நாயக்கர் |
மங்கம்மாள் சத்திரம் | ராணி மங்கம்மாள் |
தமிழகத்தில் தோன்றிய சங்கங்கள்
சங்கங்கள் | தோன்றிய வருடம் | தோற்றுவித்தவர்கள் |
இந்து இலக்கிய சங்கம் | 1830 | ------------- |
சென்னை சுதேசி இயக்கம் | 1852 | லட்சுமி நரசு செட்டி |
இந்து முன்னேற்ற மேன்மை | 1853 | சீனிவாசப் பிள்ளை |
மத்திய தேசிய முகமதிய சங்கம் | 1883 | ------------- |
மதராஸ் மகாஜன சபை | 1884 | அனந்தசார்லு ரெங்கைய நாயுடு |
சுயாட்சி இயக்கம் | 1916 | அன்னிபெசன்ட் அம்மையார் |
நெல்லை தேசாபிமான சங்கம் | 1908 | வ.உ.சிதம்பரனார் |
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் | 1916 | டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார் |
தமிழகத்தில் தோன்றிய அரசியல் கட்சிகள்
கட்சிகள் | தோன்றிய ஆண்டு | தோற்றுவித்தவர்கள் |
நீதிக்கட்சி | 1916 | டி.எம்.நாயர்,தியாகராஜ செட்டியார் |
திராவிடர் கழகம் | 1944 | தந்தை பெரியார் |
தி.மு.க | 1949 | அறிஞர் அண்ணாத்துரை |
அ.இ.அதி.மு.க | 1972 | எம்.ஜி.ஆர் |
பா.ம.க | 1990 | டாக்டர் ராமதாஸ் |
ம.தி.மு.க | 1994 | வை.கோ |
தே.மு.தி.க | 2005 | விஜயகாந்த் |
இந்த பதிவு http://www.madhumathi.com என்ற வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.அவ்வுரிமையாளர் ஆட்சேபித்தால் என் வலைப்பூவிலிருந்து நீக்கப்படும்.மேலும் அந்த வலைத்தளத்தில் பல விஷயங்கள் கிடைப்பதால் வாசகர்கள் படித்துப்பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!