TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label Covid19. Show all posts
Showing posts with label Covid19. Show all posts

50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வலியுறுத்தல்

 அனைத்து துறை அரசு பணியாளர்களும், 50 சதவீதம் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்' என, அரசுக்கு, அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.


தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் அனுப்பியுள்ள மனு:கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, வெகு தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நோய் பரவல் தினமும் அதிகரித்து வருகிறது.தலைமை செயலகம்மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர், சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.அவர்கள், மின்சார ரயில்களை நம்பி உள்ளனர்.அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில், கூட்ட நெரிசல் எப்போதும் போல அதிகம் உள்ளது. 


மாநகர பஸ்களிலும், இதே நிலை தான். சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், அரசு ஊழியர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.தற்போது, நுாற்றுக்கும் மேலான தலைமை செயலக பணியாளர்கள், 1,000த்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல துறைகளின் தலைவர் அலுவலகங்களில், இட நெருக்கடி உள்ளது. 


இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக அரசு, 50 சதவீத பணியாளர்களை, சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட்டது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதால், இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தலைமை செயலகம் உள்ளிட்ட, அனைத்து துறை ஊழியர்களை, 50 சதவீதம் என, சுழற்சி முறையில்பணியாற்ற, தமிழக அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Share:

10th Std - Public Exam New Method Mark Entry Form - Download



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு,  அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும்,  வருகைப்பதிவில் 20% சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனை ஆசிரியர்கள் கணக்கிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் பெற்ற மொத்த தேர்ச்சி மதிப்பெண்களை ( 80% + 20 % ) பதிவு செய்யவும்,  மொத்த மாணவர்களின் தேர்ச்சி பட்டியல் படிவமும் இங்கே வழங்கப்பட்டுள்ளது. தேவையுள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.


Model Calculation Method 




10th Promotion Registration Form




Share:

நாடு முழுவதும் மே 3 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -பிரதமர் உரை - COVID19 India Lockdown Increases Upto May 3

நாடு முழுவதும் கோரோனவை தடுப்பதற்காக மே 3 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -பிரதமர் உரை


Stay Home and Stay Safe - Covid19 Corona Virus Effect India Lockdown increases Upto May 03
Screenshot_20200414-101444

Screenshot_20200414-100126

*🎙️ பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை:*

நாடு முழுவதும் கோரோனவை தடுப்பதற்காக மே 3 ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு -பிரதமர் உரை

_*▪️ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்*_

_*▪️ சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கையை உதாரணம்*_

_*▪️ இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது*_

_*▪️ தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது*_

_*▪️ 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா இருந்தது*_

_*▪️ உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது*_
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *