TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

வயது பற்றிய கணக்குகள்



வணக்கம் நண்பர்களே!
இந்த பதிவின்வாயிலாக, இரண்டு பேரின் வயது,மற்றும் அதன் விகிதங்களைக் கணக்கிடும் முறையை,என்னால் முடிந்தவரை விளக்குகிறேன்.படித்துவிட்டு,வழக்கம்போல் எனக்கென்ன என்று செல்லாமல்,கடைசியில் நான் கேட்டு இருக்கும் கணக்குகளுக்கு,கமெண்ட் மூலம் விடையளித்துவிட்டு செல்லுங்கள்.அல்லது,உங்களுக்கு புரியாத கணக்குகளைப்பற்றிய சந்தேகங்களை கேளுங்கள்.வெறுமனே நீங்கள் படித்துவிட்டு செல்வதால் ஒரு உபயோகமும் இல்லை.மேலும்,வெறும் ப்ளாக் ஹிட்ஸ்காக இந்த தளத்தை நான் ஆரம்பிக்கவில்லை.உங்களுக்கு புரிகிறதா,இல்லையா என்பதை என்னால் யூகிக்கமுடியவில்லை.இதனால் ப்ளாக்கை இழுத்து மூடிவிட்டு செல்லலாம் என்று கூட தோன்றுகிறது.சரி,கணக்கிற்கு செல்லலாம்.
எ.கா-1

கார்த்திக் மற்றும் ஜெய்யின் வயது விகிதங்கள் 4:3.இவ்விருவரின் வயதுகளையும் கூட்டினால் 35 ஆண்டுகள்.எனவே,ஆறு ஆண்டுகளுக்குப்பின் இவர்களின் வயது விகிதங்கள் என்ன?

விடை-
கார்த்திக்கின் வயது = 4X எனக்கொள்க.
இதே போல்,
ஜெய்யின் வயதையும் =3Xஎன்க.

இப்போது,இருவரின் வயதுகளையும் கூட்டினால்,35 ஆண்டுகள் என கணக்கில் கொடுத்துள்ளார்கள்.எனவே,

4X + 3X =35
அதாவது,
7X = 35
X= 35 / 7 = 5
X=5
ஃ கார்த்திக்கின் வயது = 4X =4(5) = 20 ஆண்டுகள்.
அதே போல்,ஜெய்யின் வயது = 3X = 3(5) = 15 ஆண்டுகள்.
மேலே நாம் கண்டது,இவர்கள் இருவரின் தற்போதைய வயது.ஆனால்,கணக்கில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு,இவர்களின் வயது விகிதம் என்ன என கேட்டுள்ளார்கள்.

எனவே,இப்போதைய வயதுடன் ஆறு ஆண்டுகளை நாம் சேர்த்தால் முறையே

கார்த்திக்கின் வயது = 20+6 =26
ஜெய்யின் வயது = 16+6 =21

எனவே இவற்றின் விகிதம்   26 : 21

எ.கா -2
5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 20 ஆண்டுகள்.உறவினர் ஒருவரின் வயதை சேர்க்கும்போது, சராசரி 10 ஆண்டுகள் கூடுகிறது எனில்,அந்த உறவினரின் வயது என்ன?

விடை-
குடும்பத்தின் சராசரி வயது = 20 ஆண்டுகள்.
மொத்த உறுப்பினர்கள் = 5 பேர்.

எனில் அக்குடும்பத்திள் உள்ளவர்களின் வயதின் கூடுதல் = 20*5 =100

6வதாக வரும் உறவினரின் வயதை சேர்க்கும்போது,அக்குடும்பத்தின் சராசரி 10 அதிகரிக்கிறது.

அதாவது,6வது ஆளுடன் சேர்த்து குடும்பத்தின் சராசரி = 20 + 10 =30
6 பேருடன் சேர்த்து குடும்பத்தின் மொத்த வயது = 30 * 6 =180

ஃ அந்த உறவினரின் வயது = 6 பேர் கூடுதல் வயது – 5 பேர் கூடுதல் வயது
ஃ  = 180 – 100
=80
அவரின் வயது =80 ஆண்டுகள்.


எ.கா-3
A என்பவர் B-யை விட 10 ஆண்டுகள் மூத்தவர்.2 ஆண்டுகளுக்கு முன்பு A-யின் வயது B-யின் வயதேக்காட்டிலும் இருமடங்கு என்றால்,B-யின் தற்போதைய வயது என்ன?

விடை –

A என்பவர் B-யைக்காட்டிலும் 10 ஆண்டுகள் மூத்தவர்.
ஃ A = B+10
இரண்டு ஆண்டுகளுக்கு முன் A-யின் வயது B-யை விட இருமடங்கு அதிகம்
ஃ A - 2  = 2 (B - 2)
அதாவது,
A – 2 = 2B – 4
இப்போது , A  என்று இருக்கமிடத்தில் ,மேலே கண்டவாறு A=B+10ஐ அப்ளை செய்யலாம்.
ஃ B + 10 – 2 = 2B – 4
B + 8 = 2B – 4
B + 12 = 2B
2B – B = 12
அதாவது,
B –ன் தற்போதைய வயது 12 ஆண்டுகள்.


எ.கா – 4
A,B-யின் தற்போதைய வயது விகிதம் 3 : 5.  6 ஆண்டுகளுக்குப்பின்,வயது விகிதம் 2 : 3 என மாறினால்,A-யின் தற்போதைய வயது என்ன?

விடை –
A-யின் தற்போதைய வயது = 3X என்க
B-யின் தற்போதைய வயது = 5X என்க.
6 ஆண்டுகளுக்குப்பின் இவர்களின் வயது விகிதம்,

அதாவது 3 : 5 என்பதை 3/5 எனவும் எழுதலாம்.

இப்போது கணக்கில் 6 ஆண்டுகளுக்குப்பின் அவர்களின் விகிதம் = 2 : 3 எனக்கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே,



இதைப்பெருக்கினால்,

3(3X + 6) = 2 (5X + 6)
என வரும்.

9X + 18   =   10X + 12
X = 6
ஃ A-யின் தற்போதைய வயது = 3X
=3(6) = 18

ஃA-யின் தற்போதைய வயது = 18 ஆண்டுகள்.

பயிற்சிக்கணக்குகள்

1.தந்தை மற்றும் மகனின்  தற்போதைய வயதுகளின் கூடுதல் 45 ஆண்டுகள்.5 ஆண்டுகளுக்கு முன் ,தந்தை மற்றும் மகனின் வயதைப்பெருக்கினால்,தந்தையின் தற்போதைய வயதினைப்போல் 4 மடங்கு இருக்கும்.எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன?

2.10 ஆண்டுகளுக்கு பின்பு A-யின் வயது 10 ஆண்டுகளுக்கு முன்பு B-யின் வயதைப்போல இருமடங்கு,தற்போது A, B-யைவிட 9 வயது மூத்தவர் எனில் Bயின் வயது என்ன?

3.சித்து வயது, மது வயதை விட இருமடங்கு.10 ஆண்டுகளுக்கு முன்பு,சித்து வயது மது வயதைவிட 4 மடங்கு எனில், சித்து, மதுவின் தற்போதைய வயது என்ன?


இந்த பதிவை PDF முறையில் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

தொடர்புள்ள பதிவுகள்-

கணிதம்-தனிவட்டி பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
கணிதம்-ஆட்கள் ,வேலை பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
கணிதம்-பகுதி1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்

கணிதம்-பகுதி2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய கெட்டவார்த்தை-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Share:

19 comments:

  1. 3 question answer is = 30:15

    ReplyDelete
  2. Sir ur blog is very usefull to us so
    Dnt think to close it

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Type-2 (இம்மாதிரியான கணக்குகளை எடுத்துக்காட்டு உடன் விளக்கவும்)

    இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *