TNPSC மாதிரி வினாத்தாள்,பாடங்கள் ,ஆன்லைன் தேர்வுகள்,வேலைவாய்ப்புத்தகவல்கள்

Monday, 26 May 2014

TNPSC பாட விவரங்கள்,Tamil தமிழ் இலக்கியம்


              1.தமிழ் இலக்கியம்


*சங்க கால இலக்கியங்கள்*

    தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் ஒரு பொற்காலம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய பாடல்களை வீரயுகப்பாடல்கள்,தேசிய இலக்கியங்கள்,திணை இலக்கியங்கள்,சங்க இலக்கியங்கள் என்பர்.இவை தொல்காப்பியத்திற்கு இலக்கியங்களாய் துணை நிற்கின்றன.


*பதிணென்மேல் கணக்கு நூல்கள்:

        -பத்துப்பாட்டு
        -எட்டுத்தொகை= பத்துப்பாட்டு:

“முருக பொருநாறு பானிரென்டு முல்லை
பெருகு வளமதுரை காஞ்சி – மருவின்ப
கோல நெடுநெல்வாடை கோல்குறிஞ்சி-பட்டிணப்பாலை
கடா தொடும் பத்து”

-அகப்பாடல் = 3

1.முல்லைப்பாட்டு -நட்பூதனார்
2.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
3.பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்


-புறப்பாடல்=1(அ)6

1.மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்
2.திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
3.பொறுநர் ஆற்றுப்படை - கபிலர்
4.சிறுபானாற்றுப்படை –நல்லூர் நத்தத்தனார்
5.பெரும்பானாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
6.கூத்தறாற்றுப்படை –பெருங்கௌசிகனார்

-அகமும் புறமும் தழுவியது=1

1.நெடுநெல்வாடை – நக்கீரர்

முக்கிய பத்துப்பாட்டு நூல்கள்-;


1. முல்லைப்பாட்டு –நட்பூதனார்

* பத்துப்பாட்டு நூல்கள்களில் மிகச்சிறியது.
* பாட்டுடை தலைவன் பெயர் குறிப்பிடப்படாமல் பாடியது.
* 103 பாடல்கள் உடையது.
* வேறுபெயர்- நெஞ்சாற்றுப்படை

2. குறிஞ்சிப்பாட்டு –கபிலர்

* செங்காந்தல் பூ முதல் எருக்கம்பூ முடிய 99 மலர் பற்றி பாடும் நூல்.
* 261 அடிகளை உடையது.
* வேறுபெயர்- 1.குறிஞ்சிப்பாட்டு 2.காப்பியப்பாட்டு 3.உளவியல் பாட்டு

3.பட்டினப்பாலை – கடியலூர் உருத்திரங்கண்ணனார்

*பட்டினம்-காவிரிப்பூம்பட்டினம்.
*பாலைத்திணையை பாடும் நூல்.
*301 அடிகளை உடையது.

4.திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

*தலைவன் முருகன்

*நீண்ட பக்திப்பாடல்.

*11ம் திருமுறையில் சேர்க்கப்பட்டது.
*317 அடிகளை உடையது.

(((முருகனின் அறுபடை வீடுகள்;

1,திருப்பரங்குன்றம் 2.திருவேரகம்(சுவாமி மலை)
3. திருசீரலைவாய்(திருசெந்தூர்) 4.குன்றுதோடல்(திருத்தணி)
5. திருஆவிணன்குடி(பழனி) 6.பழமுதிர்சோலை))))

5.கூத்தறாற்றுப்படை –பெருங்கௌசிகனார்

*தலைவன்=நன்னல் செய் நன்னன்.
*மிகப்பெரிய ஆற்றுப்படை நூல்
* வேறுபெயர்- மலைபடுகடாம்
* 488 அடிகளை உடையது.
* சிவனை காரி உண்டி கடவுள் என்கிறது.

6.மதுரைக்காஞ்சி – மாங்குடி மருதனார்

*பான்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை உணர்த்தும் பொருட்டு பாடப்பட்டது.
*பத்துப்பாட்டில் பெரிய நூல்.
*நாளங்காடி(பகல் கடை),அல்லங்காடி(இரவு கடை) பற்றி கூறும் நூல்.
*782 அடிகள் உடையது.
* வேறுபெயர்- முக்கூடல் தமிழ், தூடல் காஞ்சி, புறப்பாட்டு.


7.நெடுநெல்வாடை – நக்கீரர்

*காலத்தால் பருவத்தால் பெயர் பெற்ற நூல்.
*188 அடிகள் உடையது.
*வேறுபெயர் – புனையா ஒவியம், சிற்பப்பாட்டு.

POINTS:-

1.பட்டிணப்பாலை,மதுரைக்காஞ்சி – வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா
2.மற்ற 8 ம் – ஆசிரியப்பா
பத்துப்பாட்டை எழுதியோர் 8 பேர்;
நக்கீரர் – நெடுநெல்வாடை, திருமுருகாற்றுப்படை

கடியலூர் உருத்திரங்கண்ணனார் – பட்டினப்பாலை, பெரும்பானாற்றுப்படை


Share:

4 கருத்துகள்:

 1. எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளன. திருத்திக்கொள்ளலாமே.

  ReplyDelete
  Replies
  1. நான் முதன்முதலில் கணினியில் தமிழில் எழுதப்பழக ஆரம்பித்ததே இந்த வலைத்தளத்தின் வாயிலாகதான் என்பதால் ஆரம்பத்தில் இந்த மாதிரியான பிழைகள் ஏற்பட்டது உண்மை தான் நண்பரே!இப்பொழுது நான் பிழைகளின்றி எழுதவும் முயற்சித்து ஓரளவு பிழையில்லாமல் எழுதி வருகிறேன் என எண்ணுகிறேன்.இருப்பினும் சந்திப்பிழைகள் என் பதிவில் நிறைய இருப்பது உண்மை தான்.அச்சந்திப்பிழைகளின்மேல் நான் கவனம் செலுத்தினால் என்னால் ஒரு நாளைக்கு ஒரு பதிவைக்கூட உருப்படியக இடமுடியாது தோழரே!!தங்களின் விமர்சனத்திற்கு நன்றி.நான் இனிவரும் காலங்களில் இது போன்ற பிழைகள் ஏற்படா வண்ணம் கவனித்துப்பதிவிடுகிறேன்.மேலும் பழைய பதிவுகளை மீண்டும் பிழைநீக்குக்கூடிய விரைவில் வெளியிடுகிறேன் நண்பரே!!!

   Delete
 2. Super very important point's

  ReplyDelete
 3. Super very important point's

  ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Display Ads

Email-ல என் பதிவுகளை இலவசமா பெற

Labels

Blog Archive