TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் - ஏழாம் வகுப்பு - 5 | Samacheer Kalvi 8th Std Notes Tamil

சமச்சீர் ஏழாம் வகுப்பு – தமிழ் தொடர்ச்சி

ஆறாம் வகுப்புத்தமிழ் பாடத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .

ஏழாம் வகுப்பு , பதிவு 1 –ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் .

ஏழாம் வகுப்பு , பதிவு 2 –ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் .

ஏழாம் வகுப்பு , பதிவு 3 –ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் .

ஏழாம் வகுப்பு , பதிவு 4 –ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் .



36. தமிழகத்தின் அன்னிபெசன்ட்


·         ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள ’ என பல சாதனைகள் புரிந்தவர் – மூவலூர் ராமாமிர்தம்  அம்மையார்.
·         அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப்பாராட்டப்பட்டவவர் -  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
·         பிறந்த ஆண்டு – 1883
·         தந்தை –கிருஷ்ணசாமி
·         கணவர் – சுயம்பு
·         முதல் போராட்டம்  - 1917 , மயிலாடுதுறையில்
·         1938 ல் , மொழிப்போர் பேரணியில் பங்கேற்று ,உறையூரிலிருந்து சென்னை வரை , 42 நாட்கள் 597 மைல்கள் பயணித்தார் .
·         இவரின் பெயரால் தமிழக அரசு , திருமண உதவித்திட்டம் கொண்டுவந்த ஆண்டு – 1989 .
·         ‘கதர் அணிந்தவர் உள்ளே வரவேண்டும்’ என்றுதன் வீட்டின் முன் எழுதி தொங்கவிட்டவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் .

39 . அம்மானை

·         அம்மானை என்பது , பெண்கள் விளையாடுவது . ஒரு காய் விளையாட்டு .
·         ‘திருச்செந்திற் கலம்பகம்’ எனும் நூலின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர் (அ) ஈசான தேசிகர் .
·         இவரின் தந்தை – தாண்டவ மூர்த்தி , ஆசிரியர் – மயிலேறும் பெருமாள்
·         இவருடைய குரு - திருவாவாடுதுறை அம்பலவாண தேசிகர்
·         நான்முகனை சிறையிலிட்டவர் – முருகன்
·         வரை- மலை , முழவு – முத்தளம் , மதுகரம் – தேன் உண்ணும் வண்டு

40.தமிழக விளையாட்டுகள்


·         பழமைவாய்ந்த ஆடவர் விளையாட்டுகள்
1.   மற்போரிடல்
2.   ஏறுதழுவுதல்
3.   வேட்டையாடுதல்
4.   மூழ்கி மணல் எடுத்தல்
·         முல்லைநில விளையாட்டு – ஏறுதழுவுதல்
·         தமுக்கம் (யானைப்போர் காண்பதற்கான திடல்) மணடபத்தைக்கட்டியவர் -  திருமலை நாயக்கர் .
·         தமிழரின் தற்காப்புக் கலை – சிலம்பாட்டம்

42. பகு , பகாப்பதம்
·         ஒரெழுத்து ஒருமொழி மொத்தம் – 42 (எகா – பை ,தீ, தா, ஈ,)
·         பகாபதம் எ.கா – மண் , கல் , நீர் , சொல்
·         பகாப்பதம் இருவகைப்படும் –
1.   பெயர் பகாப்பதம்
2.   வினைப்பகாபதம்
·         பகுபத உறுப்புகள் – 6
1.   பகுதி
2.   விகுதி
3.   சந்தி
4.   சாரியை
5.   இடைநிலை
6.   விகாரம்
·         தொடர் , 4 வகைப்படும்
1.   செய்தித்தொடர்
2.   வினாத்தொடர்
3.   கட்டளைத்தொடர்
4.   உணர்ச்சித்தொடர்
·         ‘வலக்கை கொடுப்பது , இடக்கைக்கு தெரிய்ககூடாது என வாழ்ந்தவர் ’ – மு.வ .
·         ‘இயல்வது கரவேல் , ஈவேது விலக்கேல்’ – ஔவை .


44. உழவின் சிறப்பு


·         ஆசிரியர் – கம்பர்
·         தந்தை – ஆதித்தன்
·         நூல்கள் – கம்பராமாயணம் ,  ஏரெழுபது , சிலையெழுபது , சரஸ்வதி அந்தாதி , திருக்கை வழக்கம் .
·         மேழி – கலப்பை , ஆழி – மோதிரம்  , காரளார் – மேகத்தை ஆழ்பவர் ,

45. ஓவியக்கலை



·         தமிழர் வளர்த்த நுண்கலையின் வரிசையில்  முதலில் இருப்பது – ஓவியக்கலை
·         தமிழ்நாட்டில் 25 , க்கும் மேற்பட்ட குகை ஓவியங்கள் உள்ளன .
·         சங்க காலத்துக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் , ஓவியத்தை ‘கண்ணெழுத்து’ என்று அழைத்தனர் .
·         ‘எழுத்து’ – ஓவியம்  (பரிபாடல் , குறுந்தொகை)
·         நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் – தொல்காப்பியம்
·         ஓவியத்தின் வேறுபெயர்கள்
1.   ஓவு
2.   ஓவம்
3.   சித்திரம்
4.   படம்
5.   படாம்
6.   வட்டிகைச்செய்தி
·         ஓவியரின் வேறுபெயர்கள்
1.   கண்ணுள் வினைஞர்
2.   சித்திரக்காரர்
3.   வித்தக வினைஞர்
4.   வித்தகர்
5.   கிளவி வல்லோன்
·         ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவார்’ – நச்சிரனார்க்கினியர் .
·         ஆண் ஒவியர் – சித்திராங்கதன் , பெண் ஓவியர் – சித்திரசேனா என்றும் அழைக்கப்பட்டனர்.
·         இறைநடனம் புரியும் இடம்  -சித்திரசபை
·         நாடகமேடையில் இருக்கும் திரைச்சீலையின் ஓவியத்தை – ஓவிய எழினி என்பர்
·         ‘ சித்திரக்காரப்புலி ‘ என்றழைக்கப்படுபவர் – மகேந்திரவர்மன் .
·         மகேந்திரவர்மன் , உரை எழுதிய ஓவியதூல் – தட்சிண சித்திரம்
·         சித்தன்ன வாசல் ஓவியங்களை வரைந்தவர் – இளம்கௌதமன் .

இத்துடன் ஏழாம் வகுப்பு பாடங்கள் முடிந்தன .  அடுத்த பதிவில் , 8 – ம் வகுப்பு பாடங்களை பார்க்கலாம் .


Share:

1 comment:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *