TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் – எட்டாம் வகுப்பு – 3 | Samacheer Kalvi 8th Std Notes



ஆறாம் வகுப்புப்பாடத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்
ஏழாம் வகுப்புப்பாடத்தைப் படிக்க இங்கே அழுத்துங்கள்
எட்டாம் வகுப்பு பாடத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


16. பாரதத்தாய்
·         ‘வந்தே மாதரம் ’ பாடலை இயற்றியவர் -  பக்கிம் சந்திர சட்டர்ஜி
·         ‘வந்தே மாதரம் ’ இடம்பெறும் நூல் – ஆனந்த மடம் .
·         திரு.வி.க - வால் ‘தற்கால ஔவை ’ எனப்பாராட்டப்பட்டவர் – அசலாம்பிகை அம்மை
·         அசலாம்பிகை அம்மை இயற்றிய நூல்கள் –
1.   ஆத்திச்சூடி வெண்பா
2.   திலகர் புராணம்
3.   குழந்தை சுவாமிகள் பதிகம்
4.   ராமலிங்கசுவாமிகள் சரிதம்
5.   காந்தி புராணம் .

17.இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்
·         ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி  - வேலுநாச்சியார் .
·         வேலுநாச்சியாரின் பெற்றோர் – செல்லமுத்து சேதுபதி , சக்கந்தி
·         கணவர் – சிவகங்கை முத்துவடுகநாதர்
·         1780-ல் ஐதர் அலியுடன் இணைந்து சிவகங்கையை மீட்டார் .
·         அஞ்சலையம்மாள் , கடலூர் முதுநகரில் 1890 – ல் பிறந்தார் .
·         ‘குடும்ப சொத்தையும் குடியிருந்த வீட்டையும் போராட்டத்திற்காக விற்றவர் ’ – அஞ்சலையம்மாள் .
·         அஞ்சலையம்மாளின் மகள் – அம்மாக்கண்ணு ,
·         அம்மாக்கண்ணிற்கு காந்தியடிகள் இட்ட பெயர் – லீலாவதி .
·         வை.மு.கோதைநாயகி , ருக்மணி , லட்சுமிபதி முதலிய நண்பிகளோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் – அம்புஜத்தம்மாள் .
·         ‘சிறையிலிருந்போது மனம்தளராது , தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக்கொடுத்தவர் ’ – அம்புஜத்தம்மாள் .
·         ‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ – அம்புஜத்தம்மாள் .
·         ‘தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனம் ’ – சீனிவாச காந்தி நிலையம் .
·         ‘நான் கண்டபாரதம் ’ எனும் நூலை எழுதியவர் – அம்புஜத்தம்மாள்
·         ‘பெற்றதாயும் பொன்னாடும்
நன்னிலவானினும் நனிசிறந்தனவே’ – பாரதியார் .

20 .  காவடிச்சிந்து
·         காவடிச்சிந்தின் ஆசிரியர் – அண்ணாமலையார்
·         இவர் சென்னிக்குளம் , திருநெல்வேலியில் 1861 –ல் பிறந்தார் .
·         இவர் எழுதிய நூல்கள்
1.   காவடிச்சிந்து
2.   வீரை அந்தாதி
3.   கோமதி அந்தாதி
4.   வீரைப்பிள்ளைத்தமிழ்
·         கலாபம் – தோகை , விவேகன் – ஞானி , வாவி – பொய்கை

21.விக்கிரமச்சோழன் உலா
·         ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
·         சோழ அரசரால் கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர் – ஒட்டக்கூத்தர்
·         வேறுநூல்கள் –
1.   மூவருலா
2.   தக்கையாகுப்பரணி
·         விக்கரமச்சோழனின் தலைநகரம் – கங்கை கொண்ட சோழபுரம்
·         ‘குடகுமலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத்தந்தவன் ’ – காவேரன் .
·         96 விழுப்புண் பெற்ற சோழன் – விசயாலயன்
·         ‘தில்லைக்கு பொன்வேய்ந்தவன் ’ – முதலாம் பராந்தகன்
·         ’48 சிற்றூர் , மலைநாடு வென்றவன் ’ – முதலாம் ராசராசன் .
·         ‘கடாரம் கொண்டான் , சேர கப்பற்படையை முழுமையையும் அழித்தவன் ’ – ராசேந்திரன் .
·         சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து 3 முறை போரிட்டு வென்றவன் – ராசாதி ராசன் .
·         ஆயிரம் யானைகளை கொப்பத்துப்போரில் வென்றவன் – ராசேந்திரன் .
·         மணிகளால் பாம்பணை அமைத்த சோழன் – ராசமகேந்திரன் .
·         மலரின் 7 வகைப்பருவம்
1.   அரும்பு
2.   மொட்டு
3.   முகை
4.   மலர்
5.   அலர்
6.   வீ

7.   செம்மல் 
Share:

3 comments:

  1. முந்தைய தளத்தில் சொன்னது போல் இதிலிலும் செய்யவும்...

    ReplyDelete
    Replies
    1. பண்ணிடேறன் ணா !!! கருத்துக்கு நன்றி அண்ணா

      Delete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *