TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் : ஏழாம் வகுப்பு - 1 | Samacheer Kalvi Notes 7th Std

ஆறாம் வகுப்பு பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

1.வாழ்த்து

·         ‘பண்ணினை’ – எனத்துவங்கும் பாடலை இயற்றியவர் – திரு.வி.க .
·         போற்றி – வாழ்த்துகிறேன் .
·         ஊர் – காஞ்சிபுரம் (மா) , துள்ளம் (தற்போது தண்டலம்)
·         தொழிலாளர் நலத்திற்கும் , பெண்கள் முன்னேற்த்திற்கும் பாடுபட்டவர் – திரு.வி.க .
·         பெற்றோர் – விருத்தாசலனார் , சின்னம்மையார் .
·         காலம் – 26.08.1883 – 17.09-1953
·         நூல்கள் –
1.   பெண்ணின் பெருமை
2.   மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்
3.   தமிழ்த்தென்றல்
4.   உரிமை வேட்கை
5.   முருகன் அல்லது அழகு
6.   பொதுமை வேட்டல்
7.   நாயன்மார் வரலாறு
·         பொதுமை வேட்டல் – மொத்த தலைப்பு – 44 (முதல் தலைப்பு – தெய்யவநிச்சயம் , இறுதி தலைப்பு - போற்றி) , பாடல்கள் – 340.
·         திரு.வி.க. பணிபுரிந்த பள்ளி – வெஸ்லி பள்ளி , ராயப்பேட்டை , சென்னை .

3.செம்மொழித்தமிழ்


·         ‘எளிதில் பேசவும் , பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது , தென்மொழியாகிய தமிழ் ஒன்றே’ – என்றவர் – வள்ளலார் .
·         ‘தமிழ்மொழி அழகான சித்திர வேலைபாடமைந்த வெள்ளித்தட்டு . அதில் வைக்கப்பட்டிருக்கும் தங்க ஆப்பிள் திருக்குறள் . தமிழ் என்னை ஈர்த்தது . திருக்குறள் என்னை இழுத்தது ’ – என்றவர் – டாக்டர் கிரௌவல் .
·         ‘உலகின் மிகப்பழமையான நிலப்பகுதியான குமரிக்கண்டத்திலிருந்து தமிழ் தோன்றியது’ – எனக்கூறும் நூல் – தண்டியலங்காரம் .


·         ‘தமிழ் , பிறமொழித்துணையில்லாமல் தனித்து இயங்கவல்லது மற்றும் தழைத்தோங்க வல்லது ’ என்றவர் – கால்டுவெல் .
·         ‘எல்லாச்சொற்களும் பொருள் குறித்தனவே’ எனக்கூறும் நூல் – தொல்காப்பியம் .
·         தமிழ் மெல்லோசை உடைய மொழி
·         தமிழில் இடுகுறிப்பெயர்கள் குறைவு
·         ‘கலிப்பா’ வேறுமொழியில் இல்லை
·         அம்மை , அப்பன் என்று வழங்கிய நாடு – குமரி நாடு .

4.ஊரும் பேரும்

·         ‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு – பாபிலோன் .
·         அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் – ஆர்க்காடு (ஆர் - அத்தி)
·         முல்லை நில ஊர் – காட்டூர்
·         குறிஞ்சி நில ஊர் – மலையூர் .
·         மருத நில ஊர் – மருதூர் .
·         நெய்தல் நில ஊர் – கடலூர் .
·         தென்னைமரம் சூழ்ந்த ஊர் – தெங்கூர் .
·         தெற்கே அமைந்த ஊர் – தென்பழஞ்சி , வடக்கே அமைந்த ஊர் – வடபழஞ்சி .
·         நாயக்கர்கள் , தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆண்டனர் .
·         12 வயதிலேயே , மற்போர் , சிலம்பு எனகற்று , புலியை வீழ்த்தியவர் – புலித்தேவன் .

7.புறநானூறு


·         ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ எனப்பாடியவர் – மோசிக்கீரனார் .
·         புறம் என்றால் – மரஞ்செய்தலும் அரஞ்செய்தலும் .
·         மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை .
·         தானை – படை , கீரன் – குடிப்பெயர் .

8.முதுமொழிக்காஞ்சி

·         ஆசிரியர் – கூடலூர்க்கிழார் .(ஐங்குறுநூறைத்தொகுத்தவர்)
·         இந்நூலின் வேறுபெயர் – அறவுரைக்கோவை
·         ‘சிறந்த பத்தை தன்னகத்தே கொண்ட நூலின் பெயர்’ – முதுமொழிக்காஞ்சி .
·         இந்நூல் காஞ்சித்திணையில் ஒன்று . 10 அதிகாரம் மற்றும் 100 பாடல்களை கொண்டது .
·         ‘உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியம்பும் நூல்’ – முதுமொழிக்காஞ்சி .
·         ஆர்கலி – நிறைந்த ஓசையை உடைய கடல் . பேதை –அறிவுநுட்பம் .

·         ‘தமிழ்ப்படித்தால் அறம்பெருகும்’ என்றவர் -  பெருஞ்சித்திரனார் . 



இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *