TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் இலக்கணம் - சொல் - 1

சொல்

ஒர் எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது , சொல் எனப்படும்

வேறுபெயர்கள் – பதம் , மொழி , கிளவி

சொல் , 4 வகைப்படும்
1.   பெயர்ச்சொல்
2.   வினைச்சொல்
3.   இடைச்சொல்
4.   உரிச்சொல்

பெயர்ச்சொல்

பெயரை உணர்த்தும் சொல் , பெயர்ச்சொல் ஆகும் .

பொருள் , இடம் , காலம் , சினை (உறுப்பு), குணம் (பண்பு) , தொழில் என்ற ஆறில் எதாவது ஒன்றை உணர்த்தும் வகையில் இருக்கும் . இந்த ஆறும் , பொருளாது ஆறு (அ) பொருள் முதலாறு என்றும் அழைப்பர் .

பொருட்பெயர்
மனிதன் , பசு , மயில் , புத்தகம்
இடப்பெயர்
சேலம் , ஈரோடு ,நாமக்கல் ,
காலப்பெயர்
மணி, நாள் , மாதம் , வருடம்
சினைப்பெயர்
கை ,கால் , மூக்கு , கண்
பண்புபெயர்
நீளம் , இனிமை ,வெண்மை, வட்டம்
தொழிற்பெயர்
படித்தல் , எழுதல் , உண்ணல்

மூவகை மொழி

(மொழி = சொல்)

இது ,
1.   தனிமொழி
2.   தொடர்மொழி
3.   பொதுமொழி

என மூவகைப்படுத்தலாம் . நன்கு புரிந்து கொள்க . மொழி எத்தனை வகைப்படும் என்றால் , 3 என்பதுதான் விடை . சொல் என்றால் மாத்திரமே 4 வகைப்படும் என்று விடையளிக்கவேண்டும் .

தனிமொழி

ஒரு சொல் , தனித்து நின்று பொருளை உணர்த்தல் .
எ.கா
மனிதன் , நிலம்

தொடர்மொழி
ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் வந்து ,ஒன்று (அ) பல பொருளை உணர்த்தல் .
எ.கா
நிலங்கடந்தான்

இதில் , நிலம் என்ற சொல்லும் , கடந்தான் என்றான் சொல்லும் வருகிறது.  இதன்மூலம் இரு சொற்கள் வந்து ¸நிலத்தை கடந்தான் எனும் பொருளை தருகிறது .


பொதுமொழி
தனிமொழிக்கும் , தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது .

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் , தொடர்ந்து நின்று, வேறொரு பொருளையும் உணர்த்துவது .

எ.கா
தாமரை
இச்சொல் , தாமரை எனும் மலரைக்குறிக்கிறது . அதுவே தா + மரை என்று பிரியும்போது , தாவுகின்ற மான் என்று குறிக்கிறது .

வினைச்சொல்

ஒரு பொருளின் வினை (செயல்)யை உணர்த்தும் சொல் .

முடிவு பெற்ற வினைச்சொல் , முற்று எனவும் ; முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் என்றும் வழங்கப்படும் .




முற்று இரண்டு வகைப்படும் = 1. தெரிநிலை வினைமுற்று , 2, குறிப்பு வினைமுற்று

எச்சம் இரண்டு வகைப்படும் = 1. பெயரெச்சம் , 2. வினையெச்சம்

Share:

1 comment:

  1. குயிலின் கூவல் இனிது .
    இனிது எவ்வகைச் சொல் ?

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *