TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC Group 4 பொதுத் தமிழ் -5.இலக்கண குறிப்பு



 TNPSC பொதுத் தமிழ் -5.இலக்கண குறிப்பு

தரப்பட்டிருக்கும் சொல்லுக்கு சரியான இலக்கணக் குறிப்பை கண்டறிதல்.  சில முக்கியமான இலக்கணக் குறிப்பு வகைகள் 
வினைத்தொகை 
இவ்வகை இலக்கணக்க்குறிப்பில் பகுதி (வார்த்தையின் முதல் பகுதி) வினைசொல்லாக இருக்கும். விகுதி பெயர்ச்சொல்லாக வரும்.

உதாரணமாக் : கனிவாய்அழுதுயர்,அதிர்குரல் 

வினைத்தொகை - இறந்தநிகழ்எதிர் என மூன்று காலங்களுக்கும் பொதுவானது.
உதாரணம் : வளர்மதி -  வளர்ந்த மதி வளர்கின்ற மதிவளரும் மதி (மூன்று காலங்களுக்கும் பொதுவாக உள்ளது)

இவ்விரு விதிகளிலிருந்தே நீங்கள் வினைத்தொகையை எளிதாக கண்டறிந்து கொள்ளலாம். 
பண்புத்தொகை 
இவ்வகை இலக்கணக் குறிப்பில்  கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தையின் முதல் பகுதி குணம்உருவம்நிறம்எண்சுவை போன்ற பண்பினைக் குறிபதாகவும்இரண்டாம் பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.
உதாரணம் :  அருமறைஅரும்பொருள்வெண்கொடை. காரிருள் 

உவமைத்தொகை
இவ்வகை சொற்களில் முதல் பகுதி உவமையைக் குறிப்பதாகவும்இரண்டாவது பகுதி பெயர்ச்சொல்லாகவும் வரும்.
உதாரணம் : மலரடிமதிமுகம்கனிவாய் ( மலர் - உவமைஅடி- (பாதம்) பெயர்ச்சொல்)

ஒரு சொல் உவமைத்தொகையா என கண்டறியமுதல் பகுதிக்கும்பெயர்ச்சொல்லுக்கும் இடையே  போன்றபோல என்கிற கொற்களைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும்சரியான அர்த்தம் கொடுத்தால் அது உவமைத் தொகை ஆகும். (மலர் போன்ற அடிகனி போன்ற வாய் ...)
எண்ணும்மை 
இவ்வகை இலக்கணக்குறிப்பில் இரண்டு வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு வார்த்தைகளிலும் "உம்" என்ற சொல் நேரடியாக தெரிய வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

உதாரணம் : நகையும் உவகையும்கேடும் சாக்காடும் 
இன்னும் சில இலக்கணக்குறிப்புகள் ......
முற்றும்மை :   எல்லார்க்கும்இரண்டும்முப்பழமும் 

உயர்வு சிறப்பும்மை வானினும்நிலத்தினும் ...

இழிவு சிறப்பும்மை தெருவார்க்கும்செயினும்...
பெயரெச்சம் தெளிந்தவிளைந்த

எதிர்மறைப் பெயரெச்சம் ஒழியாதஉயராதசெல்லாத

உரிச்சொற்றொடர் கடிமணம்மாநிலம் ....
சமயம் வாய்த்தால்வரும் பதிவுகளில்,  மேற்கண்ட இலக்கணக்குறிப்புகளையும் விரிவாகப் பார்க்கலாம். 


Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *