முதல் பகுதியைப்படிக்க , இங்கே அழுத்துங்கள்
4. ஒற்றளபெடை
ஒற்று + அளபெடை
ஒற்றெழுத்து ,
தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து , நீண்டு ஒலித்தல் . இதைப்பற்றி அறிந்து கொள்ள தேவையில்லை
. அப்படியே நான் விளக்கி கூறினாலும் , குழப்பம் தான் வரும் .
5. குற்றியலுகரம்
குறுமை + இயல்
+ உகரம்
ஒருமாத்திரையளவு
ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம் , அரைமாத்திரயாக ஒலிப்பது , குற்றியலுகரம் எனப்படும் .
க , ச , ட , த
, ப , ற எனும் வல்லின எழுத்துகளுடன் , ‘உ’கரம் இணைந்து , கு , சு , டு , து, பு, று எனும் வார்த்தைகள்
தோன்றும் . இந்த எழுத்துகள் , தனிநெடில் உடனோ ,பல எழுத்துகளை தொடர்ந்து , கடைசியில்
வந்தாலோ , அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம் , அரைமாத்திரயளவே ஒலிக்கும் .
எ.கா – 1 .தனிநெடிலுடன்
வரும் போது ,
காசு – இவ்வார்த்தைச்சொல்லி
பார்த்தால் , காஸ்+உ என்றே நாம் உச்சரிப்போம் .’சு’க்கு பதில் , ‘உ’ என்றுதான் கடைசியில்
வரும் .
எ.கா – 2 . பல
எழுத்துகள் சேர்ந்து வருதல் .
பந்து - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’
+ உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே
வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .
இன்னும் புரியவில்லையெனில்
, CASTLE எனும் ஆங்கில வார்த்தையை எவ்வாறு நாம் உச்சரிப்போம் ? கேஸில் என்று தானே
! அவ்வார்த்தையில் வரும் T ஆனது , மறைந்து வருகிறதல்லவா ? அதேபோல் தான் , இதுவும்
. (இது சும்மா ஒரு எ. கா வுக்கா . ஒரிஜினல் இலக்கணம் வேறுமாதிரி வரும்)
குற்றியலுகரம்
, ஆறு வகைப்படும் .
எ.கா
|
வகை
|
நாடு
|
நெடில்தொடர் குற்றியலுகரம்
|
எஃகு
|
ஆய்ததொடர் ‘’
|
வரகு
|
உயிர்த்தொடர்
|
பத்து
|
வன்தொடர்
|
பந்து
|
மென்தொடர்
|
மார்பு
|
இடைத்தொடர்
|
6. குற்றியலிகரம்
குறுமை + இயல்
+ இகரம் .
மேலே பார்த்தவாறு
இதுவும் ஒன்றே தான் .’உ’கரத்திற்கு பதில் ‘இ’கரம் , அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும்
.
எ. கா
நாடு + யாது =
நா(ட் + உ) + யாது = நாடியாது
இவ்விடத்தில்
, வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு
மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் . செம குழப்பமா இருக்கா ? குற்றியலுகரம்
, இகரமாக திரிவது தான் குற்றியலிகரம் .
7. ஐகாரக்குறுக்கம்
ஐ என்பதற்கு இரண்டு
மாத்திரை . அது , ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே
, ஐகாரக்குறுக்கம் . என்னடா இது ? ஒன்றரையாவும் குறையுது , ஒன்னாவும் குறையுதுனு பாக்குரிங்களா
?
ரொம்ப சிம்பிள்
. ஒரு வார்த்தையின் முதல் சொல்லாக ‘ஐ’ வந்தால் , ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்ம.
எ.கா – ஐந்து .
இந்த இடத்துல , ‘ஐ’ங்ற சொல்ல , இரண்டு விநாடி நம்மால சொல்ல முடியுமா ? முடியாது . சும்மா
, நீங்களே சொல்லிப்பாருங்க .
வார்த்தையின் நடுவே
வரும்போது , ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
எ.கா - வளையல் . இத சொல்லும்போது , ‘ஐ’ங்றது , அடங்கிப்போயிருக்கும்
.
8. ஔகார குறுக்கம்
இது முதல் சொல்லாகத்தான்
, ஒரு வார்த்தையில் வரும் . அப்படி வரும் போது , இரண்டு ஆத்திரையிலிருந்து , ஒன்றரையாக
குறைந்து ஒலிக்கும் . அவ்வளவு தான் .
9. மகரக்குறுக்கம்
‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால்
மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .
10 .ஆய்த குறுக்கம்
‘ஃ’ ஆய்த எழுத்து
, தம்க்குரிய அரை மாத்திரையிலிந்து , கால் மாத்திரையாக ஒலித்தல் .
எ.கா
கல் + தீது = கஃறீது
இதை சொல்லிப்பாருங்கள்
.அக்கு என்று தனியாக இருக்கும் போது அழைக்கப்படும் ஆயுத எழுத்து , மேலே உள்ள வார்த்தையுடன்
படிக்கும்போது ஹ என்று SILENT ஆக இருக்கும் .
குறுக்கம் என்றாலே , சுருக்குதல் என்று பொருள் . நமது சிலபஸ்ஸில் , எழுத்து பற்றிய சிலபஸ் இல்லையெனினும் , இதை முதலில் லைட்டாக அறிந்து கொண்டால்தான் , பின்னால் வரும் இலக்கணங்களை , வெயிட்டாக படிக்கமுடியும் . சும்மா , ஒரு டைம் படிங்க . அடுத்து வரும் , சொல் இலக்கணம் , நமக்கு சிலபஸ்ஸில் உள்ளது .
குறுக்கம் என்றாலே , சுருக்குதல் என்று பொருள் . நமது சிலபஸ்ஸில் , எழுத்து பற்றிய சிலபஸ் இல்லையெனினும் , இதை முதலில் லைட்டாக அறிந்து கொண்டால்தான் , பின்னால் வரும் இலக்கணங்களை , வெயிட்டாக படிக்கமுடியும் . சும்மா , ஒரு டைம் படிங்க . அடுத்து வரும் , சொல் இலக்கணம் , நமக்கு சிலபஸ்ஸில் உள்ளது .
=============================================================================
தொடர்புடைய பதிவுகள்
|
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும் உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!