TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் இலக்கணம் - சொல் - 2

சென்ற பகுதியில் வினைச்சொல்லின் வகைகள் பார்த்தோம் . இப்பதிவில் , அவற்ளைப்பற்றிய , விளக்கங்களை எ.காவுடன் காணலாம் .

முற்று

·         ஒரு பொருள் செய்த தொழிலை குறித்துவந்த, முற்று பெற்ற சொல் .

·         திணை , பால் , எண் , இடம் , ஆகியவற்றுடன் காலத்தையும் காட்டும் .

·         பெயர்ச்சொல்லுக்கு துணை நின்று , வாக்கியத்தின் பொருளை முடித்துக்காட்டுவது வினைமுற்று .

எ.கா

புலவர் பாடினார் .

மேலே உள்ள வாக்கியத்தில் , புலவர் என்பது பெயர்ச்சொல் என்று அறிவீர்கள் . அதை முடிவு செய்யும் பொருட்டு ‘பாடினார்’ என்ற வினைச்சொல் வருகிறது .



முற்று இரண்டு வகைப்படும்
1.   தெரிநிலை வினைமுற்று
2.   குறிப்பு வினைமுற்று.

தெரிநிலை வினைமுற்று

·         செய்பவன் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் என ஆறையும் உணர்த்துவது  , தெரிநிலை வினைமுற்றாகும் .

·         மேலே உள்ளவற்றில் , சில குறைந்து வந்தாலும் , காலம் மட்டும் தெளிவாக காட்டப்படும் .

எ.கா
எழிலரசி மாலை தொடுத்தாள் .

இதில் ,
செய்பவன்
எழிலரசி
கருவி
நார் , பூ ,கை
நிலம்
அவளின் இருப்பிடம்
செயல்
தொடுத்தல்
காலம்
இறந்த காலம்
செயபொருள்
மாலை


இதில் கருவி என்பது நார் , பூ , கை என்பது மறைந்து வந்துள்ளது . அவளின் இருப்பிடமும் உணர்த்தப்படவில்லை . ஆனால் , வேலை நடந்த காலம் , இறந்த காலம் என்று தெளிவாக தெரிகிறது .


குறிப்பு வினைமுற்று

·         செய்பவனை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி , பிறவற்றை குறிப்பால் உணர்த்தும் .

·         இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது .

·         6 வகைப்பெயர்களில் வரும் .

புகழேந்தி பொன்னன்
பொருட்பெயர்
வேலவன் மதுரையான்
இடப்பெயர்
நடராஜன் திருவாதிரையான்
காலப்பெயர்
வள்ளல் செங்கண்ணன்
சினைப்பெயர்
ராமன் இனியன்
பண்புபெயர்
அஜித் நடிகன்
தொழிற்பெயர்


இது மட்டுமின்றி இன்னும் ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்றும் பாடப்பகுதியில் உள்ளன . அதையும் , ஒரு லைன் பார்த்துவிடலாம் .



ஏவல் வினைமுற்று

·         முன்னிலை இடத்தாரை , ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டு ஏவுவது , ஏவல் வினைமுற்றாகும் ..

·         இது எதிர்காலம் காட்டும் .

·         ஒருமை-பன்மையை உணர்த்தும் .


எ.கா –

நீ படி .

(ஒருமையில் படிக்கவேண்டும் என்று கட்டளையிடுதல்)

நீர் வாரும்

(பன்மையில் வரவேண்டும் என்று கட்டளையிடுதல்)


வியங்கோள் வினைமுற்று

க , இய , இயர் எனும் விகுதிகளை பெற்று  , வாழ்த்துதல் , வைதல் , விதித்தல் , வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுகள் .
இவை , மூவிடங்கள் (தன்மை , முன்னிலை , படர்க்கை) மற்றும் ஐம்பால் (ஆண், பெண் , ஒன்றன் , பலவின் , பலர்)களிலும் வரும் .

எ.கா

வாழ்க = வாழ் + க
வாழிய = வாழ் + இய
வாழியர் = வாழ் + இயர்

அடுத்து ,

வாழ்க = வாழ்த்துதல்
ஒழிக = வைதல்
செல்க = விதித்தல்
ஈக = வேண்டல்




உடன்பாட்டு (ம) எதிர்மறை

·         அனைத்து வினைமுற்றுகளும் , உடன்பட்டோ , எதிர்த்தோ வருதல் .

·         தொழில் நிகழ்ந்நால் உடன்பாட்டு வினைமுற்று .

·         தொழில் நிகழவில்லையெனில் , எதிர்மறை வினைமுற்று .

எ.கா
உடன்பாட்டு
எதிர்வினை
தெரிநிலை
தொடுத்தான்
தொடுத்திலன்
ஏவல்
செல்வீர்
செல்லாதீர்
வியங்கோள்
சொல்லுக
சொல்லற்க


அவ்வளவு தான் நண்பர்களே !  வினைமுற்று முடிந்தது . அடுத்த பகுதியில் எச்சம் பற்றி பார்க்கலாம்



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *