TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC தேர்வுகளில் ஜெயிக்கலாம் வாங்க – 2



முந்தைய பதிவைப்படிக்காத நண்பர்கள் இங்கே அழுத்தி  படித்துவிட்டு பின்னர் இந்த பகுதியைப்படிக்கவும் . இல்லையெனில் சிங்கம்-2 முதலில் பார்த்துவிட்டு மண்டையைப்பிய்த்து , கதறிக்கொண்டே ஓடியவர்களின் நிலைமை உங்களுக்கு வரலாம் .

2 . தமிழ் இலக்கணம் படிக்கலாம் வாங்க


சென்ற பதிவில் தமிழ் இலக்கியம் மற்றும் உரைநடை ஆகியவற்றை எப்படி படிப்பது என்று பார்த்தோம் . இப்போது தமிழ் இலக்கணத்தை எப்படி கரைத்துக்குடிப்பது என்பதைக்காணலாம் .


கிட்டத்தட்ட தமிழ் இலக்கணமும் ,  மனைவியும்  ஒன்றே தான் . புரிந்துகொண்டவனுக்கு வாழ்வளிக்கும் . புரிந்துகொள்ளமுடியாதவனுக்கு வாழ்வழியும் . 


தமிழ் இலக்கணத்திற்கு நோட்ஸ் வேண்டும் , எனக்கு அதுபுரியவில்லை , இது புரியவில்லை , ‘மா’ முன் நேர் னா என்ன ? உயிரெழுத்துகள் வந்தா வல்லினம் மிகுமா மிகாதா னு உங்கள படுத்தி எடுக்கும் தமிழ் இலக்கணம் என்னைப்பொறுத்தவரை ஒரு 5-ஆம் வகுப்பு மாணவன் போடும் கணக்குப்பாடங்களுக்குச் சமம் .

‘உங்களுக்கென்ன , நீங்க பெரிய ஜீனியஸ். இல்லாமலா  இப்படியொரு வெப்சைட் வச்சி நடத்திட்டு இருக்கிங்க ? உங்களுக்கு இலக்கணம் எல்லாம் அசால்ட்டு’ என்று யாரேனும் நினைத்துக்கொண்டால் , உலகின் மாபெரும் முட்டாளான எனக்கு முன்பு நீங்கள்தான் இருப்பீர்கள் . இரண்டு வருடங்களுக்குமுன் முடித்த (?) என் டிப்ளமோ அரியரையே கிளியர் செய்யாதவன் , நான் . சரி , பதிவிற்குவருவோம் .


நண்பர்களுக்கு கீழ்க்கண்டவாறு தமிழ் இலக்கணம் குறித்த எண்ணங்கள் இருக்கலாம் .

1 . அதெல்லாம் சப்ப பாஸ் . ஒரு டைம் படிச்சாளே போதும் . எங்களுக்கு மாமா முன்னாடி என்ன வரும்னு தெரியும் .

2. அச்சோ !! அந்த கருமமா ? அத படிச்சி நேரத்த வேஸ்ட் பன்றதுக்கு பதிலா FACEBOOK போனா கூட ரெண்டு GK கேள்வி படிக்கலாம் .

3. பரிட்சைக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி பாத்துக்கலாம் .

4. எங்க , சரியான நோட்சே இல்ல . இந்த சமச்சீர்ல ஏதோ நோலன் படம் மாதிரி பிச்சிபிச்சி போட்ருக்கானுங்க . இதப்படிச்சா , தல மட்டுமா சுத்துது , தலபதியுமே சுத்துது .

5. அதுலருந்து வர கேள்விலாம் எனக்கு வேண்டாம் . அதுக்கு பதிலா , நா ஹிஸ்டரில ரெண்டு கேள்வி சேத்து பதில் எழுதிக்கிறேன் .


தமிழ் இலக்கணம் படிக்கும் முறைகள்

·         முதலில் , தமிழ் இலக்கணத்தைப்பொறுத்தவரை , சமச்சீருக்கு முந்தைய தமிழ் பாடபுத்தகங்களான 6 , 7 , 8 ம் வகுப்பு புத்தகங்களை கையில் வைத்துக்கொள்ளுங்கள் .(இல்லாதவர்களுக்கு நான் PDF ல் அப்லோட் செய்துவிட்டு , டவுன்லோட் லிங்க் கொடுக்கிறேன் )

·         அந்த புத்தகங்களில் இலக்கண பகுதிகளை வரிசையே 6 ம் வகுப்பு , 7 ம் வகுப்பு , 8 ம் வகுப்பு என்ற மாத்திரத்தில் படியுங்கள்


·         ஒவ்வொன்றைப்படிக்கும் போதும் , அதைப்பற்றிய முக்கிய குறிப்புகளை , ஒரு புது நோட்டில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள் .

·         எடுத்துக்காட்டுகள் மிக முக்கியம் . ஒவ்வொரு எடுத்துக்காட்டு எழுதிய பின்பும் , அதைப்போலவே நீங்களாகவே ஒரு எடுத்துக்காட்டை எழுத முனையுங்கள் .


·         இலக்கணத்தைப்பொறுத்தவரை , நீங்கள் ஆரம்பித்தபின்பு போர் அடித்தால் மூடிவைத்துவிட்டு சென்றுவிடுங்கள் . ஆனால் , சிறிதுநேரத்திற்குபின் , மீண்டும் போர் அடித்தாலும் இலக்கணப்புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும் . அப்போதுதான் என்ன காரணத்திற்காக நம்மால் படிக்கமுடியவில்லை என்பதனை உணர முடியும் . ( புத்தகத்தை தொறந்தாலே போர் அடிக்குதுங்கனு யாராச்சும் சொன்னா வாழ்க்கை டர்ராயிடும் சார் )

·         இதற்கு இருவேளைகள் படிக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சனி , ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் , மாலை அல்லது காலை நேரத்தில் முயற்சித்துப்பாருங்கள் . ( தயவு செய்து மதிய நேரத்தில் கங்கணம் கட்டி படிப்பேன் என்று திரியாதீர்கள் . அடிக்கும் வெயிலுக்கு , இப்போதெல்லாம் பவர்கட் ஆகாததால் புத்தகம் உங்களுக்கு தலைமூட்டையாகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் )


·         சரியான முறையில் இதை நீங்கள் செய்தால் , இன்னும் இரண்டு மாதங்களில் இலக்கணத்தை முடித்துவிடலாம் . அதன்பின் சமச்சீர் புத்தகங்களில் உள்ள இலக்கணங்களை ஒருமுறைப்பார்த்தாலே , தானாகவே உங்களுக்கு விளங்கும் .எவ்வளவுக்கெவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்களோ , அவ்வளவு வேகமாகவும் எளிமையாகவும் முடித்துவிடலாம் . அந்த புத்தகத்தில் படித்தாலும் விளங்கமாட்டேங்குது என்ற பிரச்சினை வந்தால் , அதன்பின் எனக்கு மெயில் செய்யுங்கள் .




அடுத்து , இந்த தமிழ் இலக்கணத்தை சார்ந்துதான் 100க்கு 30 முதல் 40 கேள்விகள் வருகின்றன . அதுகுறித்துஅறிய , பழைய வினாத்தாள்களை எடுத்துப்பாருங்கள் . பரிட்சைக்கு ஒருவாரம்முன் பார்த்தால் போதும் என்பவர்கள் , அதற்குமுன் தமிழ் இலக்கணத்தை படிக்காமல் இருந்திருந்தால் , தயவுசெய்து பரிட்சைக்கும்முன் எடுத்து படிக்கவேண்டாம் என்று அறிவுருத்தப்படுகிறது . அதையும் மீறி பார்த்தால் , பல குழப்பங்கள் எழுந்து ,நீங்கள் அரைகுறையாக பிற பாடங்களை மேய்ந்து மனப்பாடம் செய்தவையும் குழம்பிப்போக வாய்ப்புகள் உண்டு .


அடுத்த பதிவில்  கணிதத்தை கரெக்ட் செய்யும் ஆலோசனைகளுடன் உங்களை காணவருகிறேன் .  உங்களுக்கு தோன்றும் ஆலோசனைகளையும் கீழே கமெண்ட்டில் பதியுங்கள் .மற்றவர்கள் படிக்க ஏதுவானதாக இருக்கும் .

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .

***** மெக்னேஷ் திருமுருகன்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *