TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC தேர்வுகளில் , ஜெயிக்கலாம் வாங்க - 3

வணக்கம் நண்பர்களே !!

நம் நண்பர்களின் படிப்பு வெறி எந்தளவிற்கு இருக்கிறது என்பது , என் கடைசி இரண்டு பதிவில்தான் தெரிந்துகொண்டேன் . என் ப்ளாக்கரே , ஸ்தம்பிக்கும் அளவிற்கு படித்துக்கொண்டிருக்கிறார்கள் . இதே வேகத்தை TNPSC பாடங்களை படிப்பதிலும் காட்டினால் , மிகமகிழ்ச்சியடைவேன் . ஏனோ வந்தோம் , இவனின் அறிவுரைகளை கேட்டோம் , சென்றோம் என இருந்துவிடாமல் , உங்களின் ஆலோசனைகளையும் கமெண்ட்டிவிட்டு செல்லுங்கள் . முதலிரண்டு பாகங்களை படிக்காதவர்கள் கீழே கிளிக்கி படித்துவிட்டு , தொடரவும் .

TNPSC தேர்வில் , ஜெயிக்கலாம் வாங்க - 1

TNPSC தேர்வில் , ஜெயிக்கலாம் வாங்க - 2



3. கணிதத்தை கரெக்ட் பண்ண சிலவழிகள்


தேர்வுக்கு படிப்பவர்களை , கன்னத்தில் கைவைத்து கடுப்பாக்குவது , பெரும்பாலும் கணிதமே ! விஜய் படங்களைப்போல் வருமா வராதா என்று நம்மை எண்ணவைத்து , மார்க்கை எண்ணிப்பார்க்கும்போது குறைத்துவிடும் . அப்படிப்பட்ட கடின கணிதத்தை ஒருகை பார்க்க சிலவழிகளை சொல்கிறேன் , முயற்சித்துப்பாருங்கள் .

1.   கணக்கு சத்தியமா எனக்கு வரமாட்டேங்குதுங்க

2.   நோட்ஸ் எதாச்சும் இருந்தா ரெபர் பண்ணுங்க .

3.   ஈஸியா கணக்கு போட ஏதாச்சும் வழிமுறை இருக்கா ?

4.   எப்படி படிக்கறதுனே புரியல . புக்க பார்த்தாலே தூக்கம் தூக்கமா வருது .

5.   கணக்க தவிற மத்த சப்ஜெக்ட் , எனக்கு ஓ.கே ங்க



இதுதான் உங்களில் பெரும்பாலானோர் என்முன் வைக்கும் கருத்து . கேள்விகளுக்கு , ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன் .

1.   கணக்கு ஒரு சப்ஜெக்ட் . அது எப்போதும் நம்மைச்சுற்றி, எல்லாவழியிலும் நிறைந்திருக்கும் .நீங்கள் ஐடி துறையில் சிஸ்டம் அனலிஸ்டாக வேலை செய்திருந்தாலும் , ப்ரோகிராமினூடே , கணக்கு கண்டிப்பாக வரும் . தமிழ் ஆசிரியர் எனில் , ஒவ்வொரு இலக்கியத்திலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ,  இலக்கணத்தில் உள்ள அணிகளின் எண்ணிக்கை என அதிலும் கணிதம் நிறைந்திருக்கும் . நீங்கள் வெறும் பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறீர்கள் என்றாலும் , உங்களின் குடும்பச்செலவினைப்பற்றிய அடிப்படை கணிதமாவது நீங்கள் அறிந்துதான் வைத்திருப்பீர்கள் .வட்டிக்கு பணம் வாங்கும்போது , மாதவட்டி சதவீதத்தை வைத்தே . எவ்வளவு வட்டி என்று கண்டுபிடிக்க முடிகின்ற உங்களால் , சாதாரணமான தனிவட்டி கணிதத்தை கண்டுபிடிக்க முடியாதா ? அப்படி முடியாதென்றால் எதனால் நம்மால் முடியவில்லை என்று யோசித்துள்ளீர்களா ? ரொம்ப சிம்பிள் . வாழ்க்கையில் நாம் உபயோகப்படுத்தும் கணிதத்திற்கு , நாம் ஏற்கனவே பயிற்சி எடுத்துள்ளோம் , நம்மையும் அறியாமல் . அது தொடர்ந்து தொடர்ந்து செய்யப்படும்போது , தானாகவே நமக்குள் அது இடம்கொள்கிறது . இதே மெத்தேட் தான் இங்கும் .தொடர்பயிற்சியின் மூலம் , கணக்கை , ஈஸியாக சமாளித்துவிடலாம் . எனவே , தொடர்பயிற்சியனை மேற்கொண்டால் , எதுவும் சாத்தியமே !!!


2.   கணிதம் படிக்க நோட்ஸ் கேட்பவர்கள் யாரும் பாஸ் செய்வது கடினம் . கையில் நெய்யை வைத்துக்கொண்டு , வெண்ணையை தேடி அலைபவர்களுக்கு சிறந்த உதாரணம் நீங்கள்தான் .அழகாக சமச்சீர் புத்தகங்களை எடுத்து கணக்குகளுக்கு பயிற்சி செய்தாலே பாஸ் ஆகிவிடலாம் . ஒருசில மனோதத்துவ கணக்குகள் மற்றும் புதிர்கணக்குகளை மட்டும் நம் தளத்திலேயே வெளியிட்டுவிடுகிறேன் . மிஞ்சி மிஞ்சிபோனால் அத்தகைய கணக்குகள் 4 – 7 வரை தான் வரும் .மிச்சமிருக்கும் அத்தனை கணக்குகளும் , புத்தகத்தின் மாதிரியிலிருந்துதான் எடுக்கப்படும் . எனவே, சிலபஸ்ஸில் காணப்படும் தலைப்புகளை உள்ளடக்கிய கணக்குகளை பயிற்சியெடுக்க ஆரம்பியுங்கள் . அதுவே எளிமையான , சிறந்த வழி . (புத்தகத்தில் ஒரு சில பயிற்சி கணக்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் தவறாக இருக்கும் . அதையும் கவனத்தில் கொள்க) .


3.   கணக்கு என்றாலே ஈஸி தான் . மனதிலிருந்து கடினம் என்ற வார்த்தையை தூக்கிப்போடுங்கள் . அது ஒரு சப்பை மேட்டர் என்று மனதின் உள் நிறுத்துங்கள் . ஒரு மொக்கைக்கதை சொல்கிறேன் , கேளுங்கள் . என்னுடைய பத்தாம் வகுப்பு வரை , கணிதத்தில் என்னுடைய மதிப்பெண் மிஞ்சி மிஞ்சி போனால் 50 வரும் . 10ஆம் வகுப்பு முதல் இடைத்தேர்வில் 45 மதிப்பெண் . காலாண்டு தேர்வில் 36 தான் . செம காண்டாகி , இது என்னடா பெரிய கணக்கு என்று இரண்டு இரவுகள் விடாமல் , ஒரு நோட்டை எடுத்துவைத்து இருக்கும் அத்தனை பார்முலாவையும் முதலில் மனப்பாடம் செய்தேன் . அடுத்து எ.கா கணக்குகள் அனைத்தையும் போட்டு பார்க்க ஆரம்பித்தேன் . பின் பயிற்சி கணக்குகள் . நம்பினால் நம்புங்கள் , இரண்டு இரவில் எனது கணிதப்புத்தகத்தில் உள்ள அனைத்து கணக்குகளுக்கும் , ஆசிரியர் நடத்தும்முன்பே போட்டுமுடித்துவிட்டேன் . அதன்பின் ஹாட்ரிக் சென்டம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை .( பைனல் தேர்வில் 99 தான் ) . கணக்கில் தண்டமாக இருந்த நானே சென்டம் வாங்கும்போது , உங்களால் முடியாதா என்ன ? இதற்காக நான் செய்த காரியம் , முதலில் என் மனதில் இருந்த கணிதம் பற்றிய தவறான புரிதலை நீக்கியது.  அடுத்தது , முழு முயற்சியுடன் , வெறிகொண்டு பயிற்சியெடுத்தது . கணக்கை யாரும் படிக்க முயற்சிக்காதிர்கள் . அதனால் , நேரம்தான் விரயம் ஆகும் . ஒரு நோட் கொண்டு பயிற்சியெடுங்கள் . அதுவே போதும் . தெருநாய்க்கு உதவினால் , மனிதாபிமானம் , அதே கணக்கிற்கு உதவினால் , கணிதாபிமானம் .


4.   மேலே சொன்னதுதான் , 4வது கேள்விக்கும் விடை .எக்காரணத்தைக்கொண்டும் கணக்கை , போகிறபோக்கில் தெருநாய் அடிபட்டு கிடப்பதை பார்க்கும் பார்வையில் பார்த்துவிட்டு செல்லாதீர்கள் . அதே தெருநாயை , ஹாஸ்பெடலுக்கு தூக்கிச்சென்று , கட்டுப்போட்டு அனுப்ப முயற்சி செய்வதுபோல் , கணக்கை போட்டு பார்க்க முயற்சியுங்கள் .


5.   இந்த கேள்விக்கு எனது பதில் இதுதான் .எக்காலத்திலும் கணக்கை விட்டுவிட்டு மற்ற சப்ஜெக்ட்களை படித்து பாஸ் செய்தவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை .அவர்கள் அப்படி பாஸ் செய்திருந்தாலும் , தெரிந்தோ தெரியாமலோ , கணக்கு பாடம் குருட்டாம்போக்கில் உதவியிருக்கவேண்டும் . 20 மதிப்பெண்களை விட்டுவிட்டு  , வேறெதில் மார்க் வாங்கமுடியும் ? தமிழில் என்னதான் முக்கினாலும் 100 க்கு 90ஐ தாண்டாது . கணக்கு தவிர மற்ற கடின சப்ஜெக்ட்கள் எனப்பார்த்தால் , தாவரவியல் , இந்திய சட்டம் , வணிகவியல் மற்றும் பொருளாதாரம் . இவற்றில் இருந்து வரும் கேள்விகளில் தான் பெரும்பாலோனர் மார்க்கை கோட்டை விடுகிறார்கள் . இதிலிருந்து வரும் 60க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு , நாம் முக்கி விடையளித்தாலும் 40 , தாண்டாது . நடப்பு நிகழ்வுகள் 20 மதிப்பெண்கள் என்றாலும் 15 தான் தொடமுடியும் . எப்படி பார்த்தாலும் 145 – 150 மதிப்பெண்களைத்தான் எடுக்க முடியும் . இதைக்கொண்டு எப்படி வேலை கிடைக்கும் ? எனவே , தயவு செய்து கணக்கை தவிக்கவிட்டு , நீங்களும் ரிசல்ட் சமயத்தில் தவிக்காதிர்கள் .



இதுதவிர , வேறுமுறைகள் வேண்டுமெனில் தரமான நோட்ஸ்களை படிக்கலாம் . அதுகுறித்து , கணிதமேதையும் என் நண்பருமான திரு சக்தியை தொடர்புகொள்ளுங்கள் .  அவருடைய ப்ளாக் ஐடி மற்றும் அவரின் ஈ-மெயில் முகவரி , கீழே கொடுக்கிறேன் . (அவரு முழாண்டுத்தேர்வுல சென்டம் அடிச்சவரு . M.Sc , B.Ed படிச்ச கணித ஆசிரியரும் கூட .)

ஈ - மெயில் முகவரி - sakthe888@gmail.com


ப்ளாக்கர் ஐடி - http://sakthe888.blogspot.in/




எனது ப்ளாக்கில் , என்னால் முடிந்தவரை கணிதப்பதிவுகளை வழங்கி வருகறேன். அதில் ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் கமெண்டினால் மட்டுமே , என்னால் உதவ முடியும் . தொடர்ந்து எழுத முயற்சித்தாலும் , நேரமின்மை வாட்டுவதால் எழுத முடியவில்லை . கணிதம் பற்றிய பதிவுகளை , இனி தான் தொடர்வதாக , நண்பர் திரு. சக்தி என்னிடம் கூறியுள்ளார் . போகிற போக்கில் , அவருக்கு ஒரு மெயில் தட்டுங்கள் . கண்டிப்பாக உதவுவார் .

இந்த பதிவில் ஏதேனும் சந்தேகங்கள் , குறைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் . என்னுடைய பதிவில் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருக்கலாம்ம. அதையும் சுட்டிக்காட்டுங்கள் . போகிற போக்கில் , உங்களுடைய ஆலோசனைகளையும் கூறிவிட்டு செல்லுங்கள் . இப்போதெல்லாம் , சாதாரண திரைப்படங்களை பற்றியே சூப்பர் , அருமை , சமார்னு கமெண்டினால் மாத்திரமே தெரிகிறது . மேலும் , ஏதேனும் கேள்விகள் , இப்பதிவில் விடப்பட்டிருந்தால் , கமெண்டில் தெரிவியுங்கள் . அதற்கும் விடையளித்துவிட்டு செல்கிறேன் . அப்படியே , Google -ன் வழியே என்னை ஃபாலோ செய்துவிட்டு செல்லுங்கள் . பதிவுகளை உடனுக்குடன் படிக்கவும் , என்னை தொடர்புகொள்ளவும் , எளிதாக இருக்கும் .

இப்போதான் பார்த்தேன் . இது என்னுடைய 100 - வது பதிவு !!! (சும்மா ஒரு விளம்பரம்தான்)

அன்புடன்

**** மெக்னேஷ் திருமுருகன்





Share:

1 comment:

  1. எனக்கு கணக்கு கஸ்டமா இருக்கு என்ன பண்ரது

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *