TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - பாரதியாா்


        பாரதியார்

·         பிறந்த தேதி – 11-12-1882 .

·         பிறந்த ஊர் – எட்டையபுரம் , தூத்துக்குடி மாவட்டம் .

·         இயற்பெயர் – சுப்ரமணியம் .

·         பெற்றோர் – சின்னச்சாமி , இலக்குமி அம்மையார் .

·    1893 –ல் எட்டையபுரம் சமஸ்தான புலவர்களால் பாராட்டப்பட்டு கலைமகள் எனும் பொருள் தரும் ‘பாரதி’ எனும் சிறப்புப் பட்டம் பெற்றார் .

·     சிறிதுகாலம் எட்டையபுர சமஸ்தானத்தில் அரசவைக் கவிஞராக விளங்கினார்.

·     1898 – 1902 வரை காசியில் வாழ்ந்தார் .

·     1904 – ல் மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேக பானு’ எனும் இதழில் வெளியானது.

·      மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

·      தமிழ் , ஆங்கிலம், இந்தி , சமஸ்கிருதம் , வங்காளம் , ப்ரெஞ்ச் , அரபு ஆகிய மொழிகளில் புலைமை பெற்றுவிளங்கினார் .

·         ‘சென்னை ஜனசங்கம்’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார் .

·         கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் – பாரதி .

·         தம்  பாடல்களுக்குத் தாமே மெட்டமைத்த கவிஞர் – பாரதி

·         ‘கேளிச்சித்திரம்’ எனும் படம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியைச்சாரும் .

·         அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் சாயலில் பாரதி வசனக்கவிதை எழுதினார் .

·         மகாத்மா காந்தியின் பெருமையை முதன்முதலில் உணர்ந்து போற்றிய கவிஞர் பாரதி .

பாரதியின் பத்திரிக்கைப் பணி

·         சுதேசமித்திரன் எனும் நாளிதழில் ஆசிரியராக பணியாற்றினார் .

·         விஜயா என்ற இதழை வெளியிட்டார் .

·         சக்ரவர்த்தினி எனும் மாத இதழை , சீனிவாச்சாரியரோடு இணைந்து வெளியிட்டார் .

·         இந்தியா எனும் வார இதழில் ஆசிரியராக பணியாற்றினார் .

·         சூரிய உதயம் , கர்மயோகி, தர்மம் என்ற இதழ்களிலும் ஆசிரியராக பணியாற்றினார் .

·         கர்மயோகி எனும் பத்திரிக்கையை அரவிந்தர் என்பவர் உதவியுடன் வெளியிட்டார் .

·         பால பாரத் ,  யங் இந்தியா என்ற ஆங்கில இதழில் ஆசிரயராக பணியாற்றினார் .

பாரதியின் சிறப்புப் பெயர்கள்

·         தேசியகவி , விடுதலைக்கவி , மகாகவி (அழைத்தவர் வ.ராமசாமி ஐயங்கார்), சீட்டுக்கவி , மக்கள்கவி , தற்காலத் தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி , புதுக்கவிதையின் தந்தை , ஷெல்லிதாசன் , ஞானரதம், பாட்டுக்கொரு புலவன் (அழைத்தவர் - கவிமணி).

·         பைந்தமிழ் தேர்ப்பாகன் , செந்தமிழ்த் தேனி , சிந்துக்குத் தந்தை , குவிக்கும் குவி கவிதைக்குயில் .

·         இந்நாட்டினை கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு .

·         நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா .

·         காடுகமலும் கற்பூர சொற்கோ .

·         கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல் .

·         திறம்பாட வந்த அமரவன்
புதிய அறம்பாட வந்த அறிஞன் .

·         தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் , பாரதியால் தகுதி பெற்றதும் ( கூறியவர் - பாரதிதாசன்)

பாரதியாரைப் பற்றி பிற கவிஞர்கள் புகழுரை

·         தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ
-    பாரதிதாசன்
·         பாரதியை நினைத்துவிட்டாலும்
சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்
-    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை

·         பாரதியார் ஒரு அவதார புருஷர் . அவர் நூலை தமிழ்வேதமாக கொள்வார்களாக
-    பரலி நெல்லையப்ப அப்பர் .

பாரதியாரின் நூல்கள்

·         பாரதியாரின் முப்பெரும்படைப்புகள் – 1.கண்ணன் பாட்டு , 2.குயில் பாட்டு , 3. பாஞ்சாலி சபதம் .

·         பாஞ்சாலி சபதம் 2 பாகங்களையும் , 5 சருக்கங்களையும்  412 பாடல்களையும் கொண்டுள்ளது .

·         பாரதியின் சிறுகதை நூல்கள் – 1. பூலோக ரம்பை , 2.நவதந்திர கதைகள் , 3.திண்டிம சாஸ்திரி , 4.ஆறில் ஒரு பங்கு , 5.சொர்ண குமாரி .

·         பாரதியின் உரைநடை நூல்கள் – 1.தராசு , 2.ஞானரதம் , 3.சந்திரிகையின் கதை.

·         பாரதியாரின் பிறநூல்கள் – 1.பாப்பா பாட்டு , 2.முருகன்பாட்டு , 3.அக்னிகுஞ்சு , 4.புதிய ஆத்திச்சூடி , 5.விநாயகர் நாண்மணிமாலை , 6.சீட்டுக்கவி , 7.முரசு, 8.சுதேசகீதங்கள் , 9.செந்தமிழ்நாடு , 10.இவர் பாரத நாடு .

·         பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்கியவர் – ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

·         பாரதியின் பாடல்களை முதன்முதலாக வெளியிட்டவர் – கிருஷ்ணசாமி ஐயங்கார் .

பாரதியார் மறைவு

·         பாரதியார் 1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள்  மறைந்தார் .

·         எட்டையபுரத்திலும் , திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இல்லம்  நினைவு இல்லமாகவும் , எட்டையபுரத்தில் மணிமண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு உள்ளது .

·         மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலை 11-12-1999 ல் பஞ்சாப் முதல்வர் தர்பார சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .

பாரதியின் கவிதைகள்

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் மொழிபெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
காக்கைக் குருவி எங்கள் ஜாதி – நீல்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அந்நியர் வந்து புகழென்ன நீதி
பாருக்குள்ளே நல்லநாடு நாமிருக்கும் நாடு
நமது என்றறிந்தோம் .
முப்பதுகோடி முகமுடையால் – உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
சுதந்திரம் அடைந்துவிட்டோம் என
காசிநகர்ப்புலவன் பாடும் உரைதான் காஞ்சியில்
கேட்பதற்கோர் கருவி செய்வோம்
வங்கத்தில் ஓடும் நீரின்மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் .
வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல
இனிதாவது எங்கும் காணோம் .
செந்தமிழ்ழ நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
தேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும் .
பாரதபூமி பழம்பெரும்பூமி – நீரதன்
புதல்வர் இந்நினைவகற்றாதீர் .
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் .
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே
நமக்குத் தொழில் கவிதை , நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் .
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் – இங்கு
வாழும் மனிதர்க் கெல்லாம் .
உழவு்ககும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
எல்லோரும் ஓர் குலம் , எல்லோரும் ஒரே இனம் .
தமிழ்த்திருநாடு தன்னைப்பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடுடடி பாப்பா .
ஏழை என்றும் அடிமை என்றும்
எவரும் இல்லை ஜாதியில் .
சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது
சொல்புதிது சோதிமிக்க நல்கவிதை .
நெஞ்சு பொருக்குதில்லையே – இந்த
நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் ,
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
மாதர்தமை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் .
பக்தி செய்வீர் ஜகத்தீரே
பயனுண்டு பக்தியினால்
நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு
நல்லதோர் வீணை செய்து
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
எண்ணிய மொழிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
நாடும் மொழியும் நமதிரு கண்கள்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்  என்றொரு
மணியாரம் படைத்த தமிழ்நாடு .
கல்வியில் சிறந்த தமிழ்நாடு – புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு  - தமிழ்
கண்டதோர் வைகை பொருநை நதி .
தண்ணீர்விட்டா வளர்த்தோம் ; கண்ணீரால் காத்தோம் .
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .
வந்தேமாதரம் என்போம் – எங்கள்
மாநிலத்தாயை வணங்கு என்போம் .
உன்கண்ணில் நீர்வழிந்தால்
என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி .
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும் .
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே .
தையலைப் போற்று
ஊண்மிகு விரும்பு



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *