TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

·         பிறப்பு – 29.09.1912 , மறைவு – 18.12.1998
·         ஊர் – சின்னமனூர் , தேனி மாவட்டம்
·         ‘சுதந்திரசங்கு’ எனும் இதழில் எழுதத்தெடங்கினார் .
·         ‘தினமணி’க்கதிரில் பிரபல எழுத்தாளர் துனிலனுக்கு உறுதுணையாக பணியாற்றினார் .
·         1958-ல் , ‘எழுத்து’ இதழை தொடங்கினார் .

சிறந்த நூல்கள்

·         நீ இன்று இருந்தால் , மாற்று இதயம் , சரசாவின் பொம்மை , மணல்வீடு , அறுபது , வெள்ளை , வாடிவாசல் , ஜீவனாம்சம் .
·         சுதந்திர தாகம் (சாகித்திய அகாதமி விருது வென்ற நூல்)

சிறப்புப்பெயர்


·         புதுக்கவிதையின் புரவலர்
Share:

தமிழ் அறிஞா்கள் - ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதை

புதுக்கவிதைத் தோற்றம்

·         அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனின் , புல்லின் இதழ்கள்  புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகிறது .
·         டி.எஸ்.எலியட் எழுதிய பாழ்நிலம் (THE WASTE LAND) எனும் கவிதைநூல் , நோபல் பரிசு பெற்றது . இது புதுக்கவிதை உலகில் புதுத்தாக்கத்தினை ஏற்படுத்தியது .
·         வால்ட் விட்மனின் முறையை பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி , நகரம் என்ற தன் கட்டுரையில் , மகான் என்று அவரைக் குறிப்பிடுகிறார் .
·         தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
·         பாரதி எழுதிய புதுக்கவிதை , ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது .
·         தமிழில் புதுக்கவிதையைத் தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
·         புதுக்கவிதை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த இதழ்கள் – எழுத்து , நடை , கலாமோகினி , கசடதபற , வானம்பாடி .
·         வல்லிக்கண்ணன் , ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
·         ‘புதுக்கவிதை இலக்கணம்’ எனும் நூலை எழுதியவர் – ராஜேந்திரன் .


ந.பிச்சமூர்த்தி

·         பிறப்பு – 15.08.1900 , மறைவு – 04.12.1976 , ஊர் – கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
·         பெற்றோர் – நடேச தீட்சிதர் , காமாட்சி அம்மாள்
·         இயற்பெயர் – வேங்கடமஹாலிங்கம் .
·         1924 – 1938 வரை வழக்குரைஞர் பணி .
·         1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார் .
·         பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரின் படைப்புகளாகும்.
·         1934-ல் மணிக்கொடி இதழில் வெளிவந்த ‘காதல்’ எனும் கவிதை , தமிழில் வெளியான முதல் புதுக்கவிதையாகும் .
·         இவரது ‘புதுக்குரல்கள்’ எனும் கவிதைத்தொகுதிதான் , தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பாகும் .
·         ‘நவ இந்தியா’ எனும் பத்திரிக்கையில் சிறிதுகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார்.
·         ‘கலைமகள்’ எனும் பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக அறிமுகமானார்.
·         இவரின் எழுத்துகள்ள ‘சுதேசமித்திரன்’ , ‘சுதந்திர சங்கு’ , ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தன .

சிறப்புப்பெயர்

·         புதுக்கவித இரட்டையர் – ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

சிறந்த கவிதை நூல்கள்

·         காட்டுவாத்து , வழித்துணை , பூக்காரி , ஆத்தோரான் மூட்டை , கிளக்கூண்டு , கிளிக்குஞ்சு

சிறுகதை

·         மாயமான் , ஈஸ்வர லீலை , இரும்பும் புரட்சியும் , பாம்பின் கோவம் , முள்ளும் ரோஜாவும் , கொலுபொம்மை .

சிறந்த தொடர்கள்

·         நீயன்றி மண்ணுன்டோ விண்ணுன்டோ ஒளியுண்டோ நிலவுமுண்டோ

·         காமனை எரித்த ருத்ரன் கண்சிமிட்டில் தணிந்து போவான் .
Share:

தமிழ் அறிஞா்கள் - மருதகாசி

மருதகாசி

·         பிறப்பு – 13.02.1920 , ஊர் – மேலக்குடிக்காடு , திருச்சி
·         பெற்றோர் – ஐயம்பெருமாள் உடையார் , மிளகாயி அம்மாள்
·         குடந்தையில் தேவிநாடக சபையின் நாடகங்களுக்கு பாடல் எழுதி வந்தார்
·         இவர் ஆசிரியர் – ராஜகோபால ஐயர் .
·         சேலம் மாடர்ன் தியேட்டர் தயாரித்த , மாயாவதி என்ற திரைப்படத்திற்கு தனது முதல் திரையிசைப் பாடலுக்கு ‘’பெண் என்ற மாயப்பேயாம்’ என்ற பாடலை எழுதினார் .
·         ஜகம்புகழும் புண்ணிய கதை  ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .
·         துணைவன் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருதினைப் பெற்றார் .
·         ‘மருதமலை மாமணியே முருகைய்யா’  எனும் இவரின் பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது .

சிறப்புப்பெயர்

·         திரைக்கவித்திலகம் ,
·         மாடர்ன் தியேட்டரின் இரட்டைக் கவிஞர்கள் – மருதகாசி , க.மு.ஷெரிப் .

மறைவு

·         29.11.1989ல் மறைந்த இவரது பாடல்கள் , மே 2007 ல் அரசுடைமை ஆக்கப்பட்டது.

சிறந்த தொடர்கள்

·         ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை
·         நெத்தி வியர்வை சிந்தினோமே முத்து முத்தாக

அது நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக.
Share:

தமிழ் அறிஞா்கள் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

·         பிறப்பு – 13.04.1930 , ஊர் – செம்படுத்தான்காடு , தஞ்சை மாவட்டம் .
·         பெற்றோர் – அருணாசலனார் , விசாலாட்சி .
·         இவர் இயற்றி வந்த கருத்துசெறிவு மிக்க பாடல்களை , ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது.
·         இவர் முதன்முதலில் திரையிசைப் பாடல் எழுதிய திரைப்படம் – படித்த பெண்
·         முதல் திரையிசைப்பாடல் – நல்லதை சொன்னால் நாத்திகனா ?
·         விவசாய இயக்கத்தை கட்டி வளர்க்க தீவிரமாக பாடுபட்டார் .

சிறப்புப்பெயர்

·         மக்கள் கவிஞர் , பொதுவுடைமை கவிஞர் .

மறைவுa

·         8.10.1959 ல் மறைந்தார் .
·         மணிமண்டபம் ,  பட்டுக்கோட்டையில் உள்ளது .
·         எனது வலதுகை என்று பாரதிதாசனால் புகழப்பட்டார் .
·         அவர் கோட்டை , நான் பேட்டை (கூற்று – உடுமலை நாராயண கவி)

சிறந்த தொடர்கள்

·         செய்யும் தொழிலே தெய்வம்
·         தூங்காதே தம்பி தூங்காதே
·         வசதி இருக்கின்றவன் தரமாட்டான் ; அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான் .
·         சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா !
·         உச்சிமலையில் ஊறும் அருவிகள் ஒரு மலையில் கலக்குது

ஒற்றுமையில்லாத மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது .
Share:

தமிழ் அறிஞா்கள் - உடுமலை நாராயண கவி

உடுமலை நாராயண கவி

·         பிறப்பு – 29.09.1899 , ஊர் – பூவிலைவாடி (திருப்பூர் மாவட்டம்)
·         பெற்றோர் – கிருஷ்ணசாமி , முத்தம்மாள்
·         இயற்பெயர் – நாராயணசாமி
·         முத்துசாமிக் கவிராயரிடம் கல்வி பயின்றார் .
·         சங்கரதாசு சுவாமிகளிடம் யாப்பிலக்கணம் பயின்றார் .
·         கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு , கிந்தனா கதாகலாட்சேபம் எழுதியதால் , கலைவாணரின் குருவாக விளங்கினார் .
·         சீர்திருத்த கருத்துகளை முதன்முதலாக திரைப்படப் பாடலில் புகுத்தினார் .
·         நாட்டுப்புற பாடல் மெட்டுகளை , திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
·         திருக்குறள் கருத்துகளை மிகுதியாக பயன்படுத்தியவர்.
·         கிராமபோன் கம்பனிக்காக பாட்டை எழுதித்தர இயக்குநர் நாராயணன் , இவரை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தினார் .
·         முதன்முதலாக பாடல் எழுதிய திரைப்படம் – சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு.

சிறப்புப்பெயர்

·         பகுத்தறிவுக் கவிராயர்

மறைவு

·         23.05.1981 ல் மறைந்த இவருக்கு மத்திய அரசு 31.12.2008 அன்று 500 காசு அஞ்சல்தலையை வெளியிட்டுள்ளது .
·         உடுமலை பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது .

சிறப்புப் பாடல்கள்

·         பெண்களை நம்பாதே ! கண்களே பெண்களை நம்பாதே !
·         காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் , பி.ஏ படிப்பு பெஞ்ச் துடைக்குதாம்.
·         இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள ! இங்கிலிசு படிச்சாலும் இந்த தமிழ்நாட்டுல .
·         குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது ?
·         சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் ; சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்.

·         கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம் , புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்.
Share:

தமிழ் அறிஞா்கள் - கண்ணதாசன்

கண்ணதாசன்

·         பிறப்பு – 24.06.1927 , ஊர் – சிறுகூடல்பட்டி (சிவகங்கைமாவட்டம்)
·         பெற்றோர் – சாத்தப்பன் , விசாலாட்சி .
·         இயற்பெயர் – முத்தையா
·         வளர்ப்புத் தாய் , தந்தை – தெய்வானை , நாராயணன் .
·         கங்கை – காவிரி திட்டம் குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்னபே தெளிவுபடுத்திய கவிஞர்.
·         பாரதிகண்ட கனவுத்திட்டமான சேது சமுத்ததிர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடிய கவிஞர் .
·         இவரை திரைப்பட உலகினுக்கு அறிமுகப்படுத்தியவர் – ராம்நாத் .
·         கண்ணதாசன் எழுதிய முதல் திரைஇசைப்பாடல் – ‘கலங்காதிரு மனமே’ (கன்னியின் காதல் திரைப்படம்)
·         இறுதியாக எழுதிய திரை இசைப்பாடல் ‘கண்ணே கலைமானே’ (திரைப்படம் - மூன்றாம்பிறை)
·         கண்ணதாசன் கவிதைகள் எனும் நூல் வெளிவந்த ஆண்டு 1959 .

பரிசும் பாராட்டும்

·         இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது 1969
·         தமிழக அரசின் அரசவைக் கவிஞர் 1978
·         அண்ணாமலை அரசர் நினைவுப்பட்டம் 1979
·         சேரமான் காதலி எனும் நாவலுக்கு 1979-ல் சாகித்திய அகாதமி .
·         கவியரசு என்று அழைக்கப்பட்டார் .
·         தன் இறப்பிற்காக இரங்கற்பா பாடியவர்
·         இயற்றமிழ் கவிஞர் என்றழைக்கப்பட்டார் .
·         சிறுகூடல்பட்டியில் தோன்றிய பாட்டுப்பறவை .
·         காதல் , தத்துவம் பாடுவதில் வல்லவர் .

சிறந்த நூல்கள்

·         அர்த்தமுள்ள இந்துமதம் , ஆட்டணந்தி ஆதிமந்தி
·         மாங்கனி , தைப்பாவை , தேர் திருவிழா ,
·         கல்லக்குடி மாகாவியம் , வேளங்குடித் திருவிழா
·         ஆயிரம்தீவு அங்கையற் கன்னி, சிவகங்கைச் சீமை
·         ராச தண்டனை (கம்பர் – அம்பிகாபதி வரலாற்றைக் கூறும் நூல்)
·         சேரமான் காதலி (சாகித்ய அகாதமி)
·         ஏசு காவியம் (இறுதியாக எழுதிய நூல்)

வாழ்க்கைச் சரிதம்

·         எனது வசந்தகாலம்
·         வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.வில் இணைந்தது வரை)
·         மனவாசம் (காங்கிரஸ் கட்சியில் இருந்த காலம்)
·         எனது சுயசரிதம் (வனவாசத்தில் விடுபட்ட பகுதி)

மறைவு

·         அமெரிக்கவாழ் தமிழர்கள் அழைப்பை ஏற்று டெட்ராய்டு நகர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொண்ட போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகாகோ நகர மருத்துவ மனையில் 17.10.1981-ல் மரணம் அடைந்தார் .
·         மணிமண்டபம் – காரைக்குடி .

சிறந்த தொடர்கள்

·         உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
·         செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசைத்தொடுப்பேன் .
·         போற்றுவார் போற்றட்டும் ; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்.
·         சாவே ! உனக்கு ஒருநாள் சாவு வந்து சேராதா ? (நேருவின் மறைவுக்கு பாடிய பாடல்)
·         வீடுவரை உறவு , வீதிவரை மனைவி
·         ஆடையின்றி பிறந்தோம்
ஆசையின்றி பிறந்தோமா ?
·         மாற்றம் எனது மானிட தத்துவம்
·         நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
·         எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

இல்லாமை இல்லாத நிலை வேண்டும
Share:

தமிழ் அறிஞா்கள் - சுரதா

சுரதா

·         பிறப்பு – 23.11.1921
·         பிறந்த ஊர் – பழையனூர் , நாகை மாவட்டம் .
·         பெற்றோர் – திருவேங்கடம் , செண்பகம்
·         இயற்பெயர் – ராசகோபாலன்
·         சுரதாவின் ‘தேன்மழை’ எனும் நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையினால் வழங்கப்படும் பரிசை வென்றுள்ளது .
·         தமிழக அரசு வழங்கும் பாரதிதாசன் நினைவுப் பரிசினை முதன்முதலாக வென்றவர் – சுரதா .
·         உவமைகளைத் தன் கவிதைகளினூடே கையாளுவதில் வல்லவர் .
·         இலக்கண பெரும்புலவர் சீர்காழி அருணாசல தேசிகர் , மெய்யக்கோனார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.

நடத்திய இதழ்கள்

·         காவியம் , இலக்கியம் ,ஊர்வலம் , சுரதா .

சிறப்புப்பெயர்கள்

·         உவமைக்கவிஞர் (அழைத்தவர் – ஜெகசிற்பியன்)
·         புரட்சிக்கவிஞரின் புதிய குரல் .

சிறந்த நூல்கள்

·         தேன்மழை , சாவின் முத்தம் , சுவரும் சுண்ணாம்பும் , துறைமுகம் , பட்டத்து அரசி , வார்த்தை வாசல் , முன்னும் பின்னும் , எச்சில் இரவு

சிறந்த கவிதைகள்

·         உரைநடையின் சிக்கனந்தான் கவதை (சிக்கனம் எனும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ள இப்பாடல் , 8வது உலகத் தமிழ்மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ளது)
·         கற்றவர்முன் தாம்கற்ற கல்வியைக் கூறல் இன்பம்
·         முல்லைக்கோர் காடு போலும் முத்துக்கோர் கடலே போலும் (மறைமலை அடிகளைப் பற்றி குறிப்பிடும் பாடல்)
·         தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய் பாடல் செய்தவர் (திருவள்ளுவரைப் பற்றிக் குறிக்கும் பாடல்)
·         தடைநடையே அவர் எழுத்தில் இல்லை
வாழைத்தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு ( பாரதிதாசனை குறிக்கும் பாடல் )
·         வேற்றுமையை வினைச்சொற்கள் ஏற்பதில்லை

வேறுபாட்டைத் தமிழ்ச்சங்கம் ஏற்பதில்லை .
Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *