TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

வைணவமும் தமிழும்


  •  வைணவக்கடவுளைப்போற்றி பாடுவது மங்களாசாசனம் செய்தல் எனப்படும். இதைப்பாடியவர்கள் ஆழ்வார்கள்.
  • இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர் ஆவார்கள்.
  • இப்பாடல்களின் தொகுப்பு நாலாயிரந்திவ்விய பிரபந்தம் எனப்படும்.
  • இப்பாடல்களைத்தொகுத்தவர் நாதமுனிகள்.
  • இதற்கு உரையெழுதியவர் பெரியவாய்ச்சான் பிள்ளை ஆவார் . இவர் வியாக்கியான சக்கிரவர்த்தி என்று புகழப்படுகிறார்.
  •  நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தின் வேறுபெயர்கள் -  தீந்தமிழ்ப்பனுவல், அருந்தமிழ் பனுவல், திராவிட சாகரம்.

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள்
நூல்கள்
பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி ,
திருச்சந்த விருத்தம்
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு ,
பெரியாழ்வார் திருமொழி
ஆன்டாள்
திருமொழி () நாச்சியார் திருமொழி , திருப்பாவை
திருப்பாணாழ்வார்
அமலநாதிப்பிரான்
நம்மாழ்வார்
திருவாய்மொழி , திருவாசிரியம் , திருவிருத்தம் , பெரியதிருவந்தாதி
மதுரகவி ஆழ்வார்
கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கையாழ்வார்
பெரியதிருமடல் , சிறிய திருமடல் , குறுந்தாண்டகம் , பெருந்தாண்டகம் , பெரிய திருமொழி , திருவெழுங்கூற்றறிக்கை
தொண்டரடி பொடியாழ்வார்
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி
குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி , முகுந்தமாலை (வடமொழிநூல்)

  ·         பொய்கை , பூதம் , பேய் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என      அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூவரும் சந்தித்த இடம் திருக்கோவிலூர் .

ஆழ்வார்கள்
வேறுபெயர்கள்
திருமழிசையாழ்வார்
சக்கரத்தாழ்வாழ்வார் , பக்திசாகரர் , திராவிட ஆச்சாரியார்
பெரியாழ்வார்
விஷ்னுசித்தர் , பட்டர்கிராம் , வேயர்கோண்
ஆன்டாள்
சூடிக்கொடுத்த சுடர்கொடி , வைணவம் தந்த செல்வி , நாச்சியார்
நம்மாழ்வார்
சடகோபன் , பராங்குசன் , தமிழ்வேதம் செய்த மாறன் , குருகைக்காவலன்
திருமங்கையாழ்வார்
கலியன் , கலிநாடன் , அருள்மாரி, மங்கையர்கோன் , மங்கையர் வேந்தன்
தொண்டரடி பொடியாழ்வார்
விப்பி நாராயணன்
குலசேகர ஆழ்வார்
கொல்லிக்காவலன் , கூடல்நாயகன்ன , கோழிக்கோ


ஆழ்வார்களின் சிறப்புகள்

பெரியாழ்வார்
  • இவர் பிள்ளைத்தமிழின் முன்னோடி ஆவார். பிள்ளைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
  • மாணிக்கம் கட்டி எனும் இவருடை பாத்துப்பாட்டு, தமிழின் மிகத்தொன்மையான தாலாட்டுப்பாடலாகும்.
          ஆண்டாள்
  •    வில்லிப்புத்தூரில் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  •      பெரியாழ்வாரின் வளர்ப்புமகள். பெரியாழ்வார் இவருக்கு இட்ட பெயர் கோதை
  •    இவர் பூமகள் ஆம்சமாக பிறந்தவர்.
  •            பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை . இது பாவைப்பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
  •    திருப்பாவையின் பாக்கள் முப்பதும் பொற்சக கலிப்பா வகையைச்சார்ந்தது.
  •   வேதம் அனைத்திற்கும் வித்தாவது திருப்பாவை என ராமானுஜர் கூறுகிறார் திருப்பாவையின் மீதுள்ள ஆர்வத்தால் இவர் திருப்பாவை ஜீயர் எனப்புகழப்படுகிறார் 
  • . ஆன்டாள் எழுதிய திருப்பாவை, நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக உள்ளது .
  •    இவர் திருமாலை மணம் செய்வதாக கனாக்கண்டு பாடிய வாரணம் ஆயிரம் என்ற பாடல், இன்றும் தென்கலை வைணவர்களின்ன திருமணத்தின்போது தவறாமல் பாடப்படுகிறது.
  •    இறைவனுக்கும் ஆன்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் () ஸ்ரீரங்கம்
  •    பாவை என்பதன் இலக்கணக்குறிப்பு இருமடி ஆகுபெயர்.
     நம்மாழ்வார்
  •    இவர் இயற்றிய நான்கு நூல்களும் வேதங்களின் சாரம் என்று புகழப்படுகிறது. 
  •   இவரின் திருவாய்மொழி ,திராவிடவேதம் என்றும் தமிழ்மறை ஆதிரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது .

     மதுரகவி ஆழ்வார் 
  •            இவர் திருமாலைப்பாடாமல், தம்குருநாதரான நம்மாழ்வாரை பற்றி பாடியவர்.

       திருமங்கை ஆழ்வார்
  •    இவரின் திருவெழுங்கூற்றறிக்கை, சொல்லணியில் அமைத்துப்பாடப்பட்ட நூலாகும்.
  • .   மடல் எனும் சிற்றிலக்கிய வகையைத்தொடங்கியவர்.
  •      திருடனாக இருந்து ஆழ்வாராக மாறியவர்.
       குலசேகர ஆழ்வார்
  •    இவர் சேரமன்னர் மரபில் வந்த ஆழ்வார்.
  •      திருவாஞ்சிக்களத்தில் , கி.பி9 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  •    இவர் கௌத்துவமணியின் அம்சமாக பிறந்தவர்.
  •    நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல்கள் முதல் ஆயிரத்தில் உள்ளது.
  •    இவர் இயற்றிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக்கொண்டது.
  •   இவர் திருவரங்கத்தில், 3வது மதிலைக்கட்டியதால், அவ்வீதிக்கு குலசேகரன் வீதி எனப்பெயர் உண்டாயிற்று .
  •   இவரின் மிகப்பெரிய தாலாட்டுப்பாடலாக இப்போது கிடைத்திருப்பது மண்ணுப்புகழ் என்ற பத்துப்பாட்டு .
  •    மலையில் ஏதேனும் ஒரு பொருளாக இருக்க விரும்பியவர் .

Share:

Related Posts:

3 comments:

  1. Finally online Result & Cut off Marks information of RRB Group D Chandigarh Result available and you can check latest updates.

    ReplyDelete
  2. I am agree with the author and for more information you can also get the f95zone updates

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

934141

Contact Form

Name

Email *

Message *