புதுக்கவிதை
புதுக்கவிதைத்
தோற்றம்
·
அமெரிக்க கவிஞர் வால்ட்
விட்மனின் , புல்லின் இதழ்கள் புதுக்கவிதையின்
தோற்றமாக கருதப்படுகிறது .
·
டி.எஸ்.எலியட் எழுதிய பாழ்நிலம்
(THE WASTE LAND) எனும் கவிதைநூல் , நோபல் பரிசு பெற்றது . இது புதுக்கவிதை உலகில்
புதுத்தாக்கத்தினை ஏற்படுத்தியது .
·
வால்ட் விட்மனின் முறையை
பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி , நகரம் என்ற தன் கட்டுரையில் , மகான் என்று அவரைக்
குறிப்பிடுகிறார் .
·
தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக
உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
·
பாரதி எழுதிய புதுக்கவிதை
, ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது .
·
தமிழில் புதுக்கவிதையைத்
தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .
·
தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி
– ந.பிச்சமூர்த்தி .
·
தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை
வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
·
புதுக்கவிதை வளர்ச்சிக்கு
அடிப்படையாக இருந்த இதழ்கள் – எழுத்து , நடை , கலாமோகினி , கசடதபற , வானம்பாடி .
·
வல்லிக்கண்ணன் , ‘புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
·
‘புதுக்கவிதை இலக்கணம்’
எனும் நூலை எழுதியவர் – ராஜேந்திரன் .
ந.பிச்சமூர்த்தி
·
பிறப்பு – 15.08.1900 ,
மறைவு – 04.12.1976 , ஊர் – கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
·
பெற்றோர் – நடேச தீட்சிதர்
, காமாட்சி அம்மாள்
·
இயற்பெயர் – வேங்கடமஹாலிங்கம்
.
·
1924 – 1938 வரை வழக்குரைஞர்
பணி .
·
1938 – 1954 வரை கோவில்
நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார் .
·
பாரதிக்குப்பின் கவிதை மரபில்
திருப்பம் விளைவித்தவை இவரின் படைப்புகளாகும்.
·
1934-ல் மணிக்கொடி இதழில்
வெளிவந்த ‘காதல்’ எனும் கவிதை , தமிழில் வெளியான முதல் புதுக்கவிதையாகும் .
·
இவரது ‘புதுக்குரல்கள்’
எனும் கவிதைத்தொகுதிதான் , தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பாகும் .
·
‘நவ இந்தியா’ எனும் பத்திரிக்கையில்
சிறிதுகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார்.
·
‘கலைமகள்’ எனும் பத்திரிக்கையில்
சிறுகதை ஆசிரியராக அறிமுகமானார்.
·
இவரின் எழுத்துகள்ள ‘சுதேசமித்திரன்’
, ‘சுதந்திர சங்கு’ , ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தன .
சிறப்புப்பெயர்
·
புதுக்கவித இரட்டையர் –
ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)
சிறந்த
கவிதை நூல்கள்
·
காட்டுவாத்து , வழித்துணை
, பூக்காரி , ஆத்தோரான் மூட்டை , கிளக்கூண்டு , கிளிக்குஞ்சு
சிறுகதை
·
மாயமான் , ஈஸ்வர லீலை ,
இரும்பும் புரட்சியும் , பாம்பின் கோவம் , முள்ளும் ரோஜாவும் , கொலுபொம்மை .
சிறந்த
தொடர்கள்
·
நீயன்றி மண்ணுன்டோ விண்ணுன்டோ
ஒளியுண்டோ நிலவுமுண்டோ
·
காமனை எரித்த ருத்ரன் கண்சிமிட்டில்
தணிந்து போவான் .
Nanba unga quits super vro
ReplyDelete