·
பாரதிதாசன் 29-04-1891 ல்
புதுவையில் பிறந்தார் .
·
இயற்பெயர் கனகசுப்புத்தினம்
; பெற்றோர் – கனகசபை , இலக்குமி அம்மாள் .
·
பாரதிதாசன் தன் 16-வது வயதில்
புதுவை கால்வே கல்லூரி (அ) அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் .
இதற்கு முன்னர் நிரவி அரசு பள்ளியில் பணியாற்றினார் .
·
தன் இனத்தையும் மொழியையும்
பாடாத கவிஞன் வேரில்லாத மரம் , கூடில்லாத பறவை என்று பாடிய ரஷ்யநாட்டுக் கவிஞர் இரசூல்
கம்சதேவ் போலவே பாரதிதாசனும் விளங்குகிறார் .
·
பாரதியார் மீது கொண்ட பற்றின்
காரணமாக , தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார் .
·
பாரதிதாசன் இளம்வயதிலேயே
பிரெஞ்ச் , தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார் .
·
புதுவையில் வெளியான ஏடுகளில்
கிறுக்கன் , கிண்டல்காரன் , பாரதிதாசன் எனப் பல புனைப்பெயர்களில் இவர் எழுதிவந்தார்
.
·
இயற்கையை வர்ணித்துப் பாடுவதில்
இணையற்ற கவிஞர் – பாரதிதாசன் .
·
தன்நண்பர்கள் முன்னால் பாடு
என பாரதியார் கூற ,
‘எங்கெங்கு காணினும் சக்தியடா
– தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா’ என்று
பாடினார் .
இந்த பாடலை , பாரதியார்
, ஶ்ரீசுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் பாடியது
எனக் குறிப்பிட்டு , சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார் .
·
பாரதிதாசனை பின்தொடர்ந்த
கவிஞர்கள் தங்களைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அழைத்துக்கொண்டனர் . உதாரணம்
– வாணிதாசன் , முடியரசன் , சுரதா, கம்பதாசன்
.
·
பிற்காலத்தில் சிறகடித்த
வானம்பாடிகளுக்கு எல்லாம் முதலெழுத்தும் , தலையெழுத்தும் பாரதிதாசனே ஆவார் .
·
குடும்பக் கட்டுப்பாடு பற்றி
, இந்தியாவிலேயே முதன்முதலாக பாட்டு எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும் .
·
பாரதிதாசன் 1929 –ம் ஆண்டு
குடியரசு , பகுத்தறிவு போன்ற பெரியாரின் ஏடுகளில்
பாடல் , கட்டுரை எழுத ஆரம்பித்தார் .
·
பாரதிதாசன் 1931-ல் புதுவை
முரசு என்ற ஏட்டினை ஆரம்பித்தார் .
·
பாரதிதாசன் குயில் என்ற
இலக்கிய இதழை நடத்திவந்தார் .
·
1938 – ல் பாரதிதாசனின்
முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தது .
·
செக் மொழியில் பாரதிதாசன்
பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
·
பாரதிதாசன் 1946 , ஜூன்
29 ல் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
. ( விழாத்தலைமை – சோமசுந்தர பாரதியார் )
·
பாரதிதாசன் 1954- ஆம் ஆண்டு
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
பாரதிதாசன்
சிறப்புப்பெயர்
1. பாவேந்தர் , 2. புரட்சிக்கவி
(அழைத்தவர் - அண்ணா) , 3. புதுமைக்கவிஞர் , 4. பகுத்தறிவுக்கவிஞர் , 5. இயற்கைக் கவிஞர்
, 6. புதுவைக்குயில் , 7. தமிழ்நாட்டின்
ரசூல் கம்சதேவ் , 8. பூங்காட்டுத்தும்பி ( அழைத்தவர் - வாணிதாசன்) .
பாரதிதாசன்
மறைவு
·
21-04-1964 ல் இயற்கை எய்தினார்
.(இடம் – அரசு மருத்துவமனை , சென்னை)
·
தமிழ்நாடு அரசு 1990-ல்
பாரதிதாசன் படைப்புகளை நாட்டுடமையாக்கியது .
பாரதிதாசன்
எழுதிய நூல்கள்
·
பாண்டியன் பரிசு , எதிர்பாராத
முத்தம் , சேரதாண்டவம் , சஞ்சீவ பருவதத்தின் சாரல் , இளைஞர் இலக்கியம் , வீரத்தாய்
, நல்லதீர்ப்பு , தமிழச்சியின் கத்தி , சௌமியன் , குறிஞ்சித்திரட்டு .
·
காதல் நினைவுகள் , காதலா
? கடமையா ? , இரணியன் , இசையமுது , மணிமேகலை வெண்பா , கண்ணகி புரட்சிக் காப்பியம்
, படித்த பெண்கள் , தமிழியக்கம் .
·
பிசிராந்தையார் – சாகித்திய
அகாதமி பெற்ற நாடகம் .
·
குடும்ப விளக்கு – கற்ற
பெண்ணின் சிறப்பு .
·
இருண்ட வீடு – நகைச்சுவை
நூல் .
·
அழகின் சிரிப்பு – இயற்கை
.
பாரதிதாசன்
புகழுரை
·
மன்னவருக்கு மன்னன் மகாகவிஞன்
பேரறிஞன் தன்னெறி இல்லாத தமிழ்
- கண்ணதாசன்
·
அவர்தம் பாடல்களை படிக்கின்ற
அந்நியனும் தமிழனாகிவிடுவான்
- சிதம்பரச்செட்டியார்
·
பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில்
ஒரு உண்மையான கவி
- கு.ப.ராசகோபாலன்.
·
அறிவுக்கோயிலைக்கட்டி ,
அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்.
- புதுமைப்பித்தன்
பாரதிதாசன்
கவிதைவரிகள்
இன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
|
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
(புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்)
|
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தமக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளே !
|
இனிமைத்தமிழ் எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்தாள் நல்லமுது .
|
எளியநடையில் தமிழ்நூல்கள் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதல் வேண்டும் .
|
தமிழெங்கள் பிறவிக்குத் தாய் .
|
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் .
|
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
|
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே !
|
தமிழே நீ ஒரு பூக்காடு நானோர் தும்பி
|
எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நகர்கிற திந்தவையம்
|
கொலை வாளினை எடடா – மிகு
கொடியோர் செயல் அறவே
|
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்
முதல் அமைச்சராய் வரவேண்டும் .
|
தமிழுக்கு அமுதென்று பேர்
|
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே
|
ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள அனைவரும் நானிடவும் வேண்டும்
|
தமிழின் விந்தையை எழுத தரமோ !
|
உள்ளே தொட்டால் உசிரில் இணைக்கும் தெள்ளு தமிழ்
|
தமிழென்று தோல்தட்டி ஆடு – நல்ல
தமிழ்வெல்க வென்று தினம்பாடு
|
செந்தமிழ் நடுந்தேனே செயலினை
மூச்சினை உனக்கு அளித்தேனே !
|
தமிழைப் பழித்தவனைத் தாய்த்தடுத்தாலும் விடாதே
|
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
|
இருட்டறையில் உள்ளதடா உலகம்
|
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடுசாய்ப்போம் .
|
பொதுவுடைமைக் கொள்கையை திசையெங்கும் சேர்ப்போம் .
|
மதம் , மனிதனின் மாற்றுச்சட்டை
|
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே !
|
பாரடா உன் மானிட சமூகத்தை
|
கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்
|
பெண்களுக்கு கல்வி வேண்டும் – குடித்தனம் பேணுதற்கே !
|
அகரமுதலி ஒன்றை நாளும் படித்துவருவாய்
நிகரில்லாத சொற்கள் நினைவில் பெறுவாய்
|
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே !
|
தமிழே ஆதி தாயே வாழ்க
|
மானிட சமுத்திரம் நாளொன்றுக்கு
பிரிவில்லை எங்கும் பேதமில்லை
|
சாவிலும் தமிழ்ப்படித்து சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும் .
|
Use full brother tq
ReplyDelete👌
ReplyDeleteThank You and I have a tremendous provide: Where To Remodel House home interior renovation
ReplyDelete