TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் - ஆறாம் வகுப்பு - 1 | Samacheer Kalvi Notes

சமச்சீர் 6 – 10 வகுப்பு வரை பயிற்சி வினாக்கள்


வணக்கம் நண்பர்களே ! வெகுநாட்களுக்குப்பின் உங்களைச்சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் . இனிமேல் நம் தளத்தில் தினம் ஒரு பதிவு ஏற்றப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . இம்மாதம் முழுக்க , முடிந்தவரை சமச்சீர் புத்தகங்களில் உள்ள , பயிற்சி வினாக்கள் அனைத்தையும் பதிவாய் மாற்றித்தருகிறேன் .  இது ஒரு Hint மாதிரிதான் . ஏற்கனவே உங்களுக்குத்தெரிந்த  விஷயங்களைத்தவிர்த்து , கவனிக்காமல் விட்ட சில கேள்விகளை மட்டும் தொகுத்துள்ளேன் . ஏற்கனவே நம் தளத்தில் , தமிழ் பதிவுகள் படித்தவர்கள் , தமிழ் பாடபுத்தகங்கள் படித்தவர்களுக்கு , இந்த HINT METHOD புரியும் என்று நினைக்கிறேன் . புதிதாய் படிப்பவர்களுக்கு , கொஞ்சம் குழப்பம் வரும் . அப்படி ஏதாவது குழம்பியது என்றால் , கமெண்ட் மூலம் தெரிவியுங்கள் . புதிதாய் இந்த தளத்திற்கு வருபவர்கள் , இங்கேஅழுத்தி , முந்தைய பதிவுகளை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் .

ஆறாம் வகுப்பு சமச்சீர் முக்கியகேள்விகள்


1.   வாழ்த்து



Ø  திருவருட்பிரகாச வள்ளலார் , புறட்சித்துறவி என அழைக்கப்படுபவர் – இராமலிங்க அடிகளார் .
Ø  பெற்றோர் – ராமையா , சின்னம்மை
Ø  நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் , திருவருட்பா .
Ø  பிறந்த ஆண்டு – 05.10.1823
Ø  மறைந்த ஆண்டு – 30.1.1874
Ø  இவர் ஒரு சித்தர் .


2.   திருக்குறள்


·         வள்ளுவர் காலம் – கி.மு 31 .
·         வழக்கு – வாழ்க்கைநெறி
·         என்பு – எலும்பு
·         திருக்குறளில் உள்ள இயல் – 9
·         மொத்த எழுத்து – 42,194
·         திருக்குறளில் பயன்படுத்தாத வார்த்தை – ஔ
·         இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல்.

3.   உ.வே.சா



·         ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் – 1. கீழ்த்திசை சுவடிகள் நிலையம் . 2. அரசு ஆவணக்காப்பகம் , 3. உலகத்தமிழர் ஆராய்ச்சி நிறுவனம் – இம்மூன்றும் சென்னையில் உள்ளது . 4. சரஸ்வதி மஹால் – தஞ்சை .
·         குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் பூக்கள் – 99
·         குறிஞ்சிக்கோமான் , புலனழுக்கற்ற அந்தணாளன் – கபிலர் .
·         உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் (உத்தமதானபுரம்)
·         உ.வே.சா தந்தை – வேங்கடசுப்பையா .
·         உ.வே.சா இயற்பெயர் – வேங்கடரத்திணம் .
·          உ.வே.சா  காலம் – 19.02.1855 – 28.04.1942
·         உ.வே.சா  பதிப்பித்த நூல்கள்
§  எட்டுத்தொகை
§  பத்துப்பாட்டு
§  சீவகசிந்தாமணி (உ.வே.சா பதிப்பித்த முதல்நூல்)
§  சிலப்பதிகாரம்
§  மணிமேகலை
§  வெண்பா -13
§  புராணங்கள் – 12
§  உலா – 9
§  கோவை – 6
§  தூது – 6
§  அந்தாதி – 3
§  பரணி – 2
§  மும்மணிக்கோவை – 2
§  இரட்டை மணிமாலை – 2
§  இதர – 2
·         உ.வே.சா நினைவில்லம் – உத்தமதானபுரத்தில் உள்ளது
·         உ.வே.சாவை பாராட்டிய வெளிநாட்டினர் – ஜீ.யூ.போப் , ஜூலியன் வின்சோன் .

உ.வே.சா நூலகம் - பெசன்ட் நகர்


·         உ.வே.சா அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு  - 2006
·         காகிதத்தில் உருவங்கள் செய்யும் முறை – ஓரிகாமி
·         அரவிந்த் குப்தா எழுதிய நூல் – டென் லிட்டில் பிங்கர்ஸ்.
·         முயற்சி திருவினையாக்கும் என்றவர் – திருவள்ளுவர் .
·         சேய் – தூரம் ,  செய் – வயல் .


Ø  பாரதி



·         வன்மை – கொடை , உழுபடை – விவசாயம் செய்ய பயன்படும் கருவி
·         ‘வெள்ளிப்பனியின் மீது எழுதுவோம் ’ – பாரதி
·         காலம் – 11.12.1882  - 11.09.1929
·         ‘தீர்க்கதரிசி’ எனப்படுபவர் – பாரதி
·         பாரதிக்கு பிடித்த ஆங்கில கவிஞர் – ஷெல்லி
·         பாரதிக்கு பிடித்த நூல் – காளிதாசரின் சாகுந்தலம்
·         சுதேச மித்தரனில் துணையாசிரயராய் பணியாற்றிய வருடம் -1904
·         பாரதி துவங்கிய தமிழ் மாத இதழ் – இந்தியா (1907)
·         பாரதி துவங்கிய ஆங்கிலமாத இதழ் – பாலபாரதி (1907)


பறவைகள்


வேடந்தாங்கல் சரணாலயம்

·         பட்டாசு வெடிக்காத ஊர் – கூத்தன்குளம் (திருநெல்வேலி)
·         நிலம் , அதிக உப்புநீர் , கடும் வெப்பம் ஆகிய மூன்றிலும் வாழும் பறவை – பூநாரை
·         நம் நாட்டில் 2400 வகை பறவைகள் உள்ளன.
·         பறவைகள் 5 வகையாக பிரிக்கலாம் .
·         சமவெளிப்பறவைகள் – மஞ்சள் சிட்டு , செங்காகம் , கடலைக்குயில் , பனங்காடை ,
·         நீர்நிலை பறவைகள் – கொக்கு , தாலைக்கோழி, கவளக்காலி , ஆற்றுவள்ளன் , முக்குளிப்பான் , நாரை , அரிவாள் மூக்கன் , கரண்டிவாயன்.
·         மலைவாழ்ப்பறவைகள் – இருவாச்சி , செந்தலைப்பூங்குருவி, மிஞ்சிட்டு , கருஞ்சின்னான் , நீலகிரி , நெட்டைக்காலி , பொன்முதுகு , மரங்கொத்தி, சின்னக்குறுவான் , கொண்டை உழரான் , இருசாளிப்பருந்து .
·         தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள்
1.   வேடந்தாங்கள்
2.   கரிக்களி (காஞ்சி)
3.   சித்திரக்குடி
4.   கஞ்சிரங்குளம்
5.   மேல் செவ்வனூர்(ராம்நாடு)
6.   பழவேற்காடு
7.   உதயமார்த்தாண்டம் (திருவாரூர்)
8.   வடுவூர் (தஞ்சை)
9.   கரைவெட்டி (பெரம்பலூர்)
10. வேட்டங்குடி (சிவகங்கை)
11. வெள்ளேடு (ஈரோடு)
12. கூந்தன்குளம்

13. கோடியக்கரை (நாகை)

இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Share:

4 comments:

  1. மிக அருமை நண்பரே, நன்றி... செய்யுள் வரிகளும் இடம் பெற்றிருந்தால் தாங்கள் தொகுப்பு நிறைவடைந்திருக்கும்.. இருப்பினும் பாராட்டக்கூடிய செயலே... நன்றி நன்றி

    ReplyDelete
  2. இதேபோல் சமூகவியல் போடுங்க நண்பா

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *