நாமக்கல் கவிஞர் . வெ. ராமலிங்கம் பிள்ளை
·
பிறப்பு – 19 – 10 – 1888 .
·
பிறந்த ஊர் – மோகனூர் ,
நாமக்கல் மாவட்டம் .
·
பெற்றோர் – வெங்கட்ராமன்
, அம்மணி அம்மாள் .
·
வளர்ப்புத்தாய் – பதுல்லா
பீவி எனும் இஸ்லாமிய பெண் .
·
நாமக்கல் கவிஞர் ஓவியக்கலையிலும்
திறமை பெற்று விளங்கினார் . இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் – ராமகிருஷ்ண பரமஹம்சர்
.
·
இவர் , அரியணையில் அமர்ந்திருக்கும்
ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்கு பாரதமாதா முடிசூட்டுவது போல படம்வரைந்து தங்கப்பதக்கம் பெற்றார்
.
·
மேலும் திருச்சி மாவட்ட
காங்கிரஸின் செயலாளர் ஆகவும் கரூர் மற்றும் நாமக்கல் வட்டார காங்கிரஸில் தலைவராகவும்
பணியாற்றினார் .
·
1932-ம் ஆண்டு நடைபெற்ற
உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு அதன் வழிநடை பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி’
என்ற பாடலை பாடினார் .
·
தமிழக அரசின் முதல் அரசவைக்
கவிசராக விளங்கினார் .
·
சாகித்திய அகாதமியில் தமிழ்ப்
பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார் .
·
மேலும் தமிழக சட்ட மேலவை
உறுப்பினராகவும் இருந்தார் .
·
இராமலிங்கம்பிள்ளை , கோவிந்தராசு
ஐயங்காருடன் இணைந்து ‘லோகமித்ரன்’ என்ற இதழை நடத்தினார் .
சிறப்புப்பெயர்கள்
·
ஆஸ்தான கவிஞர் , காந்தியக்கவிஞர்,
நாமக்கல் கவிஞர், காங்கிரஸ் கவிஞர் , ஆட்சிமொழி காவலர் .
எழுதிய
நூல்கள்
·
அவனும் அவளும் , இலக்கிய
இன்பம் , சங்கொலி , தமிழன் இதயம் , கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி, தமிழ்வேந்தன் , தமிழ்த்தேர்
, அன்பு செய்த அற்புதம் , திருக்குறள் – புது உரை .
·
மலைக்கள்ளன் – மர்மச்சுவை
நிறைந்த நாவல்
·
என் கதை – சுய சரிதை .
நாமக்கல்
கவிஞர் மறைவு
·
இவர் 24 – 08 – 1972 அன்று
மறைந்தார் .
·
நாமக்கல்லில் உள்ள இவரது
இல்லம் , நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
·
தமிழ்நாடு அரசின் தலைமைச்
செயலகத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது .
·
நடுவணரசு பத்ம்பூசன் விருது
வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .
புகழுரை
·
திலகர் விதைத்த வித்து பாரதியாக
உரைத்தது
காந்தி தூவிய விதை நாமக்கல்ல
கவிஞராக தோன்றியது
- ராஜாஜி
நாமக்கல்
கவிஞரின் கவிதைகள்
·
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
( தமிழன் இதயம் என்ற நூலில்
இடம்பெற்ற பாடல் இது )
·
சத்தியம் நம்மில் குறைந்ததால்
பல சங்கடங்கள் வந்து நிறைந்தது.
·
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
.
·
புரட்சி வேண்டும் புரட்சி
வேண்டும்
·
தமிழனென்று சொல்லடா , தலைநிமிர்ந்து
நில்லடா
·
கூட்டுறவில் சேருங்கள் கூடிவாழ
பழகுங்கள் .
·
பாட்டாளி மக்களது பசிதீர
வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீரவேண்டும்
·
அன்பும் ஆர்வமும் அடக்கமும்
சேர்ந்தும்
உண்மை தன்மையையும் உறுதியும்
மிகுந்தும்
·
கலையென்ற கடலுக்கு கரைகண்ட
புனையா
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற
துணையாம் .
·
காந்தியை மறக்காதே என்றும்
காந்தியை இழக்காதே
·
காந்தியம் நம் உடைமை – அதைக்காப்பது
நம் கடமை
·
இந்திய நாடிது என்னுடை நாடே
என்று தினந்தினம் நீயதைப்
பாடே
·
காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!