TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - உடுமலை நாராயண கவி

உடுமலை நாராயண கவி

·         பிறப்பு – 29.09.1899 , ஊர் – பூவிலைவாடி (திருப்பூர் மாவட்டம்)
·         பெற்றோர் – கிருஷ்ணசாமி , முத்தம்மாள்
·         இயற்பெயர் – நாராயணசாமி
·         முத்துசாமிக் கவிராயரிடம் கல்வி பயின்றார் .
·         சங்கரதாசு சுவாமிகளிடம் யாப்பிலக்கணம் பயின்றார் .
·         கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு , கிந்தனா கதாகலாட்சேபம் எழுதியதால் , கலைவாணரின் குருவாக விளங்கினார் .
·         சீர்திருத்த கருத்துகளை முதன்முதலாக திரைப்படப் பாடலில் புகுத்தினார் .
·         நாட்டுப்புற பாடல் மெட்டுகளை , திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
·         திருக்குறள் கருத்துகளை மிகுதியாக பயன்படுத்தியவர்.
·         கிராமபோன் கம்பனிக்காக பாட்டை எழுதித்தர இயக்குநர் நாராயணன் , இவரை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தினார் .
·         முதன்முதலாக பாடல் எழுதிய திரைப்படம் – சந்திரமோகனா அல்லது சமூகத்தொண்டு.

சிறப்புப்பெயர்

·         பகுத்தறிவுக் கவிராயர்

மறைவு

·         23.05.1981 ல் மறைந்த இவருக்கு மத்திய அரசு 31.12.2008 அன்று 500 காசு அஞ்சல்தலையை வெளியிட்டுள்ளது .
·         உடுமலை பேட்டையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது .

சிறப்புப் பாடல்கள்

·         பெண்களை நம்பாதே ! கண்களே பெண்களை நம்பாதே !
·         காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் , பி.ஏ படிப்பு பெஞ்ச் துடைக்குதாம்.
·         இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள ! இங்கிலிசு படிச்சாலும் இந்த தமிழ்நாட்டுல .
·         குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது ?
·         சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் ; சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்.

·         கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம் , புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்.
Share:

1 comment:

  1. அருமையான பகிர்வு

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *