--------------------------
1-8 -தாய்ப்பால் வாரம்
6. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள்
8. வெள்ளையனே வெளியேறு தினம்
13. சர்வதேச இடதுகைப் பழக்கமுள்ளவர்கள் தினம்
14. பாகிஸ்தானின் சுதந்திர தினம்
15. இந்தியாவின் சுதந்திர தினம்
15. உழைக்கும் பெண்கள் தினம்
22. சென்னை மாநகரம் பிறந்த தினம்
29. தேசிய விளையாட்டு தினம்
========================================================================
முக்கிய நிகழ்வுகள்
1-8-1971 - அப்போலா விண்வெளிக் கலம் நிலவில் இறங்கி ஒரு முக்கிய பாறையைக் கண்டுபிடித்த நாள்.
3-8-1954 - இந்தியாவில் அணுசக்தியைப் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்துவதற்காக அணுசக்தி கமிஷன் அமைக்கப்பட்டது.
5-8-1962 - பிரபல ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ[ மர்மமான முறையில்] இறந்தார்.
6-8-1945 - அமெரிக்க விமானப்படை விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டை வீசியது. (மூன்று நாட்களுக்குப் பிறகு (9-8-1945) நாகசாகி நகரத்தின் மீது மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது.
10-8-1963 - காமராஜர் திட்டம் ( மூத்த அரசியல் தலைவர்கள் பதவியை விட்டு விலகி கட்சிப்பணியாற்றல்) அறிமுகப்படுத்தப்பட்டது.
11-8-1961 - தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி போன்றவை இந்திய யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
11-8-2000 - ஜார்கண்ட் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.
15-8-1947 - இங்கிலாந்து ஆட்சியிலிருந்து இந்திய விடுதலைப் பெற்றது.
பிரதமராக ஜவாஹர்லால் நேருவும் - குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத்தும் பொறுப்பேற்றனர்.
15-8-1972 - இந்தியாவில் தபால் குறீயீட்டு எண் (பின் கோடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
15-8-1982 - இந்தியத் தொலைக்காட்சி தேசிய அளவில் முதல் முறையாக வண்ண ஒளிபரப்பைத் தொடங்கியது.
========================================================================
பிரபல பிறந்த தினங்கள்
--------------------------------------------
01. மீனா குமாரி (இந்தி நடிகை)
02. ஆபிரகாம் பண்டிதர் (தமிழ்க் கவிஞர்)
04. கிஷோர் குமார் (இந்தி நடிகர், பின்னணிப் பாடகர்)
04. பராக் ஒபாமா (அமெரிக்க ஜனாதிபதி)
05. கிருபானந்த வாரியார் (பக்தி சொற்பொழிவாளர்)
05. ராஜா சர் முத்தையா (கல்வியாளர்)
05. வெங்கடேஷ் பிரசாத் (கிரிக்கெட் வீரர்)
07. எம்.எஸ். சுவாமிநாதன் (விஞ்ஞானி)
09. பாப்பா உமாநாத் (தொழிற்சங்கவாதி)
10. வி.வி. கிரி (முன்னாள் குடியரசுத் தலைவர்)
12. விக்ரம் சாராபாய் (விண்வெளி விஞ்ஞானி)
13. ஸ்ரீதேவி (தமிழ், இந்தி நடிகை)
13. ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா முன்னாள் அதிபர்)
15. நெப்போலியன் போனபார்ட் (பிரான்ஸ் அதிபர்)
15. சர் வால்டர் ஸ்காட் (ஆங்கில எழுத்தாளர்)
15. ஸ்ரீஅரவிந்தர் (தத்துவஞானி)
17. கே.பி.சுந்தராம்பாள் (பாடகி)
17. வி.எஸ்.நைபால் (நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்)
18. சந்தீப் பாட்டீல் (கிரிக்கெட் வீரர்)
19. ஆர்வில் ரைட் (ஆகாய விமானம் கண்டுபிடிப்பாளர்)
19. தீரர் சத்தியமூர்த்தி (அரசியல்வாதி)
19. சங்கர் தயாள் சர்மா (முன்னாள் குடியரசுத் தலைவர்)
20. ராஜீவ் காந்தி (முன்னாள் பிரதமர்)
21. ப.ஜீவானந்தம் (கம்யூனிச சிந்தனையாளர்)
25. நித்யஸ்ரீ மகாதேவன் (கர்நாடக இசைப் பாடகி)
26. அன்னை தெரசா (சமூக சேவகி)
27. ஜார்ஜ் பெர்னார்ட்ஷா (ஆங்கில நாடக ஆசிரியர்)
29. தயான் சந்த் (ஹாக்கி வீரர்)
========================================================================
நினைவு தினங்கள்
----------------------------------
1. பால கங்காதர திலகர் (சுதந்திரப் போராட்ட வீரர்)
7. ரவீந்திரநாத் தாகூர் (கவிஞர்)
18. சுபாஷ் சந்திர போஸ் (சுதந்திரப் போராட்ட வீரர்)
19. ஜேம்ஸ் வாட் (நீராவி என்ஜின் கண்டுபிடித்தவர்)
21. பிஸ்மில்லா கான் (ஷெனாய் கலைஞர்)
26. எஸ்.எஸ்.வாசன் (திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர்)
30. கலைவானர்என்.எஸ்.கிருஷ்ணன் (நகைச்சுவை நடிகர்)
_______________________________________________________________________
அனுதாப அலங்காரம்.
-----------------------------------
திங்கட்கிழமை அதிகாலை தில் லியில் இருந்து சென்னை வந்து கொண்டி ருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூ ரில் தீப் பிடித்தது. இந்த விபத்தில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 27 பேர் படுகா யம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்தை உடனே பார்வையிட மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் விபத்து நடந்து 12 மணி நேரம் கழித்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அங்கிருந்து நெல்லூருக்கு ரயிலில் சென்று விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுவிட்டு அதே ரயிலில் சென் னை திரும்பினார்.
அவர் சென்னை வந்தி றங்கும் முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத் தில் உள்ள பிளாட்பார்ம் 6ல் இருந்த குப் பைகள் அகற்றப்பட்டு, வாசனை திரவிய ஸ்ப்ரே அடிக்கப்பட்டது.
அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு கம்ப ளம் விரிக்கப்பட்டது. அத்தனை பேர் கருகிவிட்டார்களே என்று கதிகலங்கி நின்ற மக்கள், ரயில்வேத் துறை அமைச்ச ரின் வருகையையொட்டி நடந்த ஏற்பாடு களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முகுல் ராய் சென்ற சொகுசு பெட்டி யின் விலை மட்டும் ரூ.1.5 கோடி ஆகும். ரயில்வேத் துறைக்கு வருமானத்தை கொடுக்கும் பயணிகள் செல்லும் பணம் செலவிட்டு செல்லும் பெட்டிக ளில் சரிவர வசதிகள் இல்லை.
ஆனால் இலவசமாக சென்றுவரும்அமைச்சர் சென்ற பெட்டியிலோ படுக் கையறை, சமையலறை, ஆலோசனைக் கூடம் என்று ஏகப்பட்ட வசதிகள்.
இதில் கொடுமை என்னவென்றால் அத் தீவிபத்தில் சின்ன காய,தப்பித்த பயணிகளும் அந்த ரெயிலில்தான் வந்தனர்.அவர்களை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை.அவர்களீடம் விசாரிக்கவும் இல்லை.
_______________________________________________________________________
இப்பதிவு, மேலே உள்ள வலைதளத்தில் இருந்து , ஆசிரியரின் அனுமதி பெற்று இங்கு பதிப்பிட படுகிறது. இங்கு வெளியிடுவதை ஆசிரியர் விரும்பவில்லையெனில், இத்தளத்திலிருந்து , எக்காரணமும் இன்றி நீக்கப்படும்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!