TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

முன்வேதகாலம் (அ) ரிக் வேதகாலம்




கி.மு 2000  முதல் கி.மு 1000

·         சப்தசிந்து பகுதியில் குடியேறிய ஆரியர்களைப்பற்றி குறிப்பிடுகிறது.

·         அஸ்வம் (குதிரை) , கோமாதா (பசு) போன்ற விலங்குகளை முக்கியமாக கருதினர் .

·         ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய ஆறு , சரசுவதி .

·         ‘சப்தசிந்து’ என்ற வார்த்தையை உருவாக்கியவர் , A .C. தாஸ்

·         வேதங்களில் பழமையானது , ரிக் வேதம்

·         இது 10 பாகங்கள் , 1028 பாடல்களை கொண்டுள்ளது .

·         33 கடவுள்களைப்பற்றி கூறுகிறது .

·         முக்கிய கடவுள் , இந்திரன் .

·         இந்திரனைப்பற்றி 250 பாடல்கள் பாடப்பட்டுள்ளது.

·         ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள கடவுள்களுக்கு , கோவில்களோ சிலைகளோ கிடையாது .

·         அக்னி கடவுளைப்பற்றி 200 பாடல்கள் பாடப்பட்டுள்ளது .

·         ரிக்வேதகாலத்தில் சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் (அ) குலம் .

·         குடும்பத்தலைவர் , கிரகபதி என அழைக்கப்படுவார் .

·         தந்தை வழிமுறையைப்பின்பற்றினர் .

·         பல குடும்பங்கள் இணைந்தது , கிராமம்.

·         கிராம தலைவர் , கிராமாணி .

·         பல கிராமங்கள் இணைந்தது , விஸ் .

·         விஸ்-சின் தலைவர் , விசபதி

·         பல விஸ்கள் இணைந்து ஒரு ஜனா உருவாகியது .

·         ஜனாவின் தலைவர் , ராஜன் .

·         அரசனுக்கு நிர்வாகத்தில் உதவி புரிய புரோகிதர் , ராஜகுரு , சேனாதிபதி , சபா (முதியோர்கள் அவை) , சமிதி (பொதுமக்கள் அவை) ஆகியவை இருந்தன .

·         ரிக் வேதத்தின் 10-ம் பாகத்தில் சூளுவ-சூத்திரம் என்ற பாடலில் கணிதத்தை பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

·         ரிக் வேதத்தில் புருஷ-சுகிதம் எனும் பாடலில் வர்ணஜாதி முறை பற்றி கூறப்பட்டுள்ளது .

·         இப்பாடலில் புருஷன் எனும் மனித உடலில் , தலையிலிருந்து பிராமிணனும் , புஜத்திலிருந்து சத்திரியனும் , வயிற்றிலிருந்து வைசியனும் , பாதத்திலிருந்து சூத்திரனும் தோன்றியதாக கூறப்படுகிறுது .

·         ரிக் வேதகாலத்தில் வாழ்ந்த கல்வியில் சிறந்த பெண்மணிகள்.
o   லோபமுத்ரா
o   விஸ்வாரா
o   கோஷா
o   சிகிதா
o   நிவாவரி
o   அமலா

·         பெண்கள் , வாசஸ் என்ற ஆடையும் , ஆதிவாசஸ் எனும் மேலாடையும் , நிவி எனும் இடுப்பில் அணியும் ஆடையையும் அணிந்திருந்தனர் .

·         இயற்கையை வழிபட்டனர்.

·         உருவ வழிபாடு கிடையாது.

·         பெண் கடவுள்கள் , அப்சரா, அதிதி ,உஷாஷ் ,பிரிதிவி , சரசுவதி , ஆரன்பாகினி


ரிக் வேதகால ஆறுகள்
தற்போதைய பெயர்கள்
சிந்து
சிந்து
ஜீலம்
ஷிட்ஜி
ஜெனாம்
அஷ்கினி
ராவி
புருஷினி
பியாஸ்
விபாஸ்
சட்லஜ்
சுடுத்ரி
கோமதி
குமால்
காக்ரா
திரிஷாத்திவேதி




இந்த பதிவை PDF வகையில் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்



தொடர்புடைய பதிவுகள்








விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்









Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *