பொருளாதாரம்
வறுமை
ஓழிப்புத்திட்டங்கள்
நண்பர்களே இந்த
பதிவின்வாயிலாக, இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் ஆண்டுகள்
,சிறப்பம்சங்கள் ஆகியவற்றை விலாவாரியாக பார்க்கலாம்.இதை நன்றாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.ஏனெனில்
பலரும் மதிப்பெண்களை இழப்பது இந்தப்பகுதியில் தான்.கணிதம் கடினம் என எண்ணுபவர்களால்கூட
5 முதல் 10 மதிப்பெண்களை கணிதத்தில் பெற்றுவிட முடியும்.ஆனால், வணிகவியல் மற்றும் பொருளாதாரத்தில்
அப்படியல்ல.இதில் பல திட்டங்கள் வருவதால், முக்கியமான சில திட்டங்களைப்பற்றி மட்டும்
தொடர்பதிவிட திட்டமிட்டுள்ளேன்.
1.சமூக முன்னேற்ற திட்டம்(CDP)-1952
- · COMMUNITY DEVELOPMENT PROGRAM
- · மக்கள் பங்கேற்புடன், கிராம்பபுறங்களை அனைத்து வகையிலும் முன்னேற செய்தல்.
- · இத்திட்டம் படுதோல்வி அடைந்தது.
- · இதற்கு உதவிய நாடு-அமெரிக்கா
2.தீவிர விவசாய முன்னேற்ற திட்டம் (IADB) –(1960-61)
- · INTENSIVE AGRICULTURAL DEVELOPMENT PROGRAM
- · விவசாயிகளுக்கான கடன், உரம், பூச்சிக்கொல்லி , விதை போன்றவற்றை வழங்குதலே இதன் நோக்கம்.
3.தீவிர விவசாய பகுதி திட்டம் (IAAP) – (1964-65)
- · INTENSIVE AGRICULTURAL AREA PROGRAM
- · சிறப்பு அறுவடைகளை மேம்படுத்தலே இதன் நோக்கமாகும்.
4.கடன் உறுதி திட்டம்-1965
- · RBI-ன் கடன் தன்மை கட்டுப்பாட்டு திட்டம்.
5.வீரிய விதைகள் அபிவிருத்தித்திட்டம்-1967
- · HIGH YIELDING VARIETY PROGRAM
- · பசுமைப்புரட்சி திட்டத்தின் அங்கம்
- · புதிய ரக விதைகள் மூலம் , உணவு உற்பத்தியை அதிகரித்தல்.
6.இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் – 1966
- · INDIAN TOURISM AND DEVELOPMENT CORPORATION.
- · நாட்டின் பல இடங்களில் , தங்கும் விடுதிகள் ,பயணியர் மாளிகை அமைத்தல்.
- · “INCREDIBLE INDIA”-இதனுடன் தொடர்புடைய வார்த்தையாகும்.
7.ஊரக மின்வசதி கழகம்-1969
- · ஊரகப்பகுதிகளில் மின்வசதி ஏற்படுத்தல்.
8.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற முன்னேற்ற கழகம்-1970
- · வீட்டுவசதிக்கு கடனுதவி அளித்தல்.
9.முடுக்கிவிடப்பட்ட கிரம குடிநீர் வழங்குதல் திட்டம்-(1972-73)
- · கிராமங்களுக்கு , சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.
10.வறட்சிப்பகுதி முன்னேற்ற திட்டம்-1973
- · DROUGHT PRONE AREA PROGRAM.
- · நிலத்தடி நீர் மேம்பாடு,சுற்றுச்சூழல் மேம்பாடு மூலம் வறட்சியைத்தடுத்தல்.
11.சிறுவிவசாயிகள் முன்னேற்ற முகைமை-(1974-75)
- · SMALL FARMER DEVELOPMENT AGENCY
- · சிறு விவசாயிகளுக்கு கடன், மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அளித்தல்.
12.கட்டளைப்பகுதி தொழில் முன்னேற்ற திட்டம் –(1974-75)
- · COMMAND AREA DEVELOPMENT PROGRAM
- · பெரிய ,நடுத்தர பாசனத்திட்டம் மூலம் நீர்ப்பாசனத்தை உறுதி செய்தல்.
13.இருபது
அம்ச திட்டம்(TPP)- 1975
·
TWENTY POINT PROGRAM
·
பிரதமர் இந்திரா காந்தி மூலம்
அறிவிக்கப்பட்டது.
·
வறுமை ஒழிப்பு, வாழ்க்கை தரம்
உயர்த்தலே இதன் நோக்கமாகும்.
·
இதன் திட்டகாலம்-5வது ஐந்தாண்டு
திட்டம்.
·
இத்திட்டம் 1982, 1986 ஆண்டுகளில்
திருத்தியமைக்கப்பட்டது.
14.வேலைக்கு உணவு திட்டம்(FFW) –(1977-78)
- · FOOD FOR WORK
- · நாட்டின் பொருளாதார முன்னேற்ற வேலைகளில் ஈடுபடும், தொழிலாளர்களுக்கு உணவு வழங்குதல்.
15.அந்தியோதயா திட்டம் –(1977-78)
- · ஏழைகளை,பொருளாதார அடிப்படையில் தன்னிறைவைப்பெற செய்தல்.
-தொடரும்
இந்த பதிவை PDF-ல் டவுன்லோட்
செய்ய இங்கே அழுத்துங்கள்
என்னுடைய
டைம் மெஷின் –கதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
டைம்-மெஷின்-அத்தியாயம்2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
தொடர்பான பதிவுகள்
அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளைப்பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
பிற
TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பிற
TNPSC பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
மாதிரிவினாத்தாள்களை
டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
Very useful. Thank you
ReplyDelete