TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பக்தி இலக்கியம் பகுதி -2


பக்தி இலக்கியம் பகுதி -2
இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
திருநாவுக்கரசர்:-
Ø  திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் எனும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றியவர்.
    Ø  இயற்பெயர்           -          மருள்நீக்கியார்
Ø  பெற்றோர்            -          புகழனார்,மாதினியார்
Ø  தமக்கை              -          திலகவதியார்
Ø இவர் சமண சமயம் சார்ந்து தருமசேனர் எனும் பெயர் பெற்றார்.
Ø  இவர் காலம் 7-ம் நூற்றாண்டு
Ø  இவர் கடுமையான சூளை நோய்(வயிற்றுவலி) காரணமாக தம் தமக்கையிடம் வந்து திருநீறு பூச குணமானார்.அன்று முதல் இவர் சைவர் ஆனார்.
Ø  இவர் சைவத்திற்கு மாறியதை அறிந்த மகேந்திரவர்ம பல்லவன் பல தீங்கு இழைத்தான்.பின்னர் அவனே சைவர் ஆனார்.
Ø  இறைவன் முன் தன்னை தாசனாக பாவித்துக்கொண்டார்.அதனால் இவரது நெறி தசமார்க்கம் (அ) தொண்டு நெறி
Ø  என் கடன் பணி செய்து கிடப்பதே”என்று கோவில் தோறும் உளமாற பணி செய்தார்ழ
Ø  வேறு பெயர்கள் -     ஆளுடைய அரசு,அப்பர்(கூறியவர்-ஞானசம்பந்தர்),வாகீசர்,சைவ உலகின் செந்நாயிறு,தாண்டக வேந்தர்
Ø  இவர் பாடியது 4900 பதிகங்கள்.கிடைத்தது 3066 பாடல்களே.இதுவே 4,5,மற்றும் 6 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
Ø  இறைவன் இவரை ஆட்கொண்ட இடம்-திருவதிகை
Ø  இறைவனடி சேர்ந்த இடம் –திருப்புகழூர்
Ø  இவர் பாடல் அமைப்பு –கெஞ்சுதமிழ்
Ø  இவர் செய்த அற்புதம்
அப்பூதி அடிகளின் மகனை அரவு தீண்ட அவ்விடத்தை ‘ஓன்று கொலாம்’ எனும் பதிகம் பாடி நீக்கினார்.
மூவர் முதலிகளில் அதிக காலம் வாழ்ந்தவர்.
Ø  பாடல்கள்
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்”
“ஆரியன் கண்டாய் தமிழைக்கண்டாய்”
“நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம்”
“ஈசன் எந்தன் இணையடி நிழலே”
“சிவபெருமானே! உனையும் உணர்வேண் நன்காய்”
“நாமார்க்கும் குடியெல்லாம் நமனை அஞ்சோம்”(இப்பாடல் பாரதியை அச்சமில்லை அச்சமில்லை எனப்பாட வைத்தது)

அப்பர் (அ) சுந்தரர்
Ø  பிறப்பு                -          திருநாவலூர்
Ø  இயற்பெயர்           -          ஆரூரார்
Ø  பெற்றோர்            -          கடையனார்,இசைஞானியார்
Ø  தன்னை அடிமை எனக்கூறிய இறைவனை பித்தா எனக்கோவித்துக்கொண்டவர்.பின் இறைவன் ஆட்கொண்ட பிறகு இறைவனே தன்னை பித்தா எனப்பாடுமாறு வேண்டியதால்“பித்தா பிறைசூடி பெருமாளே அருளானார்” எனப்பாடினார்.
Ø  இவர் வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்திலே வாழ்ந்தார்.
Ø  இறைவனுக்கு இவர் தோழர் ஆனதால் தம்பிரான் தோழர் என்றழைக்கப்பட்டார்.
Ø  திருவாரூர் கோவிலில் திருத்தொண்டர் தொகைப்பாடினார்.இதன் முதல் வரி “தில்லைவாழ் அந்தணர்தம்”.
Ø  வேறுபெயர்
ஆளுடைய நம்பி,திருநாவலூரார்,வன்தொண்டர்,ஆலால சுந்தரனார்.
Ø  இவருடைய நெறி சகமார்க்கம்(அ) தோழர்
Ø  இறைவன் இவரை ஆட்கொண்ட இடம் – திருவெண்ணெய் நல்லூர்
Ø  இறைவனடி சேர்ந்த இடம் – கைலாயம்
Ø  இவரின் பாடல் அமைப்பு – மிஞ்சு தமிழ்
Ø  இவர் நிகழ்த்திய அற்புதம்
திருப்புகழூரில் செங்கல்லை பொன்னாக்கினார்
அவினாசியில் முதலைவாயிலிருந்து பிள்ளையைக்காப்பாற்றினார்
திருவையாற்றில் காவிரிநீர் பெருக்கை அடக்கி வழிவிட பதிகம் பாடினார்.
Ø  பாடல் வரிகள்
“இறைவன் ஏழிசையாய் இசைப்பவனாய் உள்ளான்”
“பொன்னாற் மேனியை பூங்கொடியாய்”

மாணிக்க வாசகர் :-
Ø  ஊர்             -          திருவாதவூர்
Ø  காலம்          -          9-ம் நூற்றாண்டு
Ø  இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்து தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டம் பெற்றார்.
Ø  இறைவன் இவர் பொருட்டு நரியை பரி ஆக்கினார்.வைகை நதியைப்பெருக்கெடுத்து ஓட வைத்தார்.பிட்டுக்கு மண் சுமந்தார்.
Ø  இவர் எழுப்பிய ஆவுடையார் கோவில்,திருப்பெருந்துறை(புதுக்கோட்டை)யில் உள்ளது.
Ø  இவர் எழுதிய திருவாசகம்(சைவ வேதம்) 658 பாடல்கள் கொண்டது.
Ø  இந்நூலை G.U.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Ø  இவர் திருவெம்பாவை(மார்கழி மாதத்தில் பாடுவது) எனும் நூலை எழுதியுள்ளார்.இதன் முதல்வரி “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”.இது 400 பாடல்கள் உடையது.
Ø  இறைவன் இவரிடம் “பாவைப்பாடிந வாயால் கோவைப்பாடுக” என வேண்டியதால் திருக்கோவைப்பாடினார்.
Ø  வேறுபெயர்
அழுது அடியடைந்த அன்பர்,ஆளைடைய அடிகள்,உத்தம சீலன்,பேரரையன்
Ø  திருவாசகத்தின் வேறு பெயர்
தமிழ்வேதம்,சைவ வேதம்,அழகிய வாய்மொழி,
Ø  இவரின் நெறி சற்குரு மார்க்கம்
Ø  இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் – திருப்பெருந்துறை
Ø  இறைவனடி சேர்ந்த இடம் – சிதம்பரம்
Ø  “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விட புலமை,உழைப்பு,துன்பம் பொறுத்தல்,இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்பவர் யாரும் இல்லை” என G.U.போப் பாராட்டியுள்ளார்.
Ø  பாடல் வரிகள்
“உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்”
“தென்னாடுடைய சிவனே போற்றி”
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி”
“அம்மையே யப்பா ஒப்பில்லா மணியே”

என்னுடைய பயணம்@டைம் மெஷின்-கதையைப்படிக்க  இங்கே அழுத்துங்கள்

என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *