1.ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
அ)தோடு ஆ)மோதிரம்
இ)ஆனை ஈ)வயல்
2.ஆ-என்பதன் பொருள் யாது?
அ)காளை ஆ)பசு
இ)மாடு ஈ)எருமை
3.தமிழ் எங்கள் உயிர் எனப்பாடியவர்?
அ)பாரதிதாசன் ஆ)பாரதியார்
இ)கவிமணி ஈ)நாமக்கல் கவிஞர்
4.அம்மானை என்பது யார் விளையாடும் விளையாட்டு?
அ)குழந்தைகள் ஆ)ஆண்கள்
இ)பெண்கள் ஈ)இருவரும்
5.முருகனால் சிறையிடப்பட்டவன் யார்?
அ)திருமால் ஆ)பிரம்மா
இ)சிவன் ஈ)விநாயகர்
6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் என போற்றப்படும் அம்மையார், முதல் போராட்டத்தை துவக்கிய
ஆண்டு?
அ)1883 ஆ)1880
இ)1912 ஈ)1917
7.மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ)மீனாட்சி சுந்தரம் ஆ)ஒட்டக்கூத்தர்
இ)குமரகுருபர் ஈ)குணங்குடியார்
8.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம்?
அ)ஆலப்புழா ஆ)மதுரை
இ)சென்னை ஈ)எர்ணாக்குளம்
9.திருமலை நாயக்கர் மஹால், கலைநயத்தில் எதை ஒத்தது?
அ)அஜந்தா ஆ)மாமல்லபுரம்
இ)தாஜ்மஹால் ஈ)மீனாட்சியம்மன்
கோவில்
10.மதுரை என்ற சொல்லின் பொருள் யாது?
அ)கோவில் ஆ)தேன்
இ)இனிமை ஈ)பழமை
11.நான்மாடக்கூடல் என வழங்கப்படும் நகரம்?
அ)கும்பகோணம் ஆ)சிதம்பரம்
இ)மதுரை ஈ)ஶ்ரீரங்கம்
12.சேரநாடு _________ உடைத்து.
அ)முத்து ஆ)சோறு
இ)பொன் ஈ)வேழம்
13.குமரகுருபரர் பிறந்த ஊர்?
அ)திருவைகுண்டம் ஆ)மதுரை
இ)ஶ்ரீரங்கம் ஈ)திருவாரூர்
14.’கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’-யார் கூற்று?
அ)பரணர் ஆ)கபிலர்
இ)ஔவை ஈ)பாரதியார்
15.காளமேகப்புலவரின் இயற்பெயர் யாது?
அ)பரதன் ஆ)வரதன்
இ)கலியன் ஈ)எத்திராஜலு
16.ராமானுஜம் தின்னைப்பள்ளியில் படித்த ஊர் எது?
அ)கும்பகோணம் ஆ)காஞ்சிபுரம்
இ)மதுரை ஈ)தஞ்சை
17.சோழருக்கு உரிய மாலை?
அ)பனம்பூ ஆ)அத்திப்பூ
இ)வேப்பம்பூ ஈ)முல்லைப்பூ
18.தலபுராணவேந்தர் என அழைக்கப்படுபவர்?
அ)மீனாட்சி சுந்தரம் ஆ)குமரகுருபரர்
இ)சேக்கிழார் ஈ)பரஞ்சோதி முனிவர்
19.’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’-எனப்பாடியவர்?
அ)பரணர் ஆ)கபிலர்
இ)மோசிக்கீரனார் ஈ)ஔவை
20.அம்மை,அப்பன் என்ற சொல் வழங்கும் நாடு?
அ)குமரி நாடு ஆ)கொங்கு
நாடு
இ)நாஞ்சில் நாடு ஈ)தொண்டை நாடு
இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பயணம்@டைம் மெஷின் தொடர்கதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியம் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
பிற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
அனைத்துப்பதிவுகளையும் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!