TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

புராணங்கள்




பெரிய புராணம்


·         தனியடியார்கள் 63 பேர் மற்றும் தொகையடியார்கள் 9 பேர் என மொத்தம் 72 சிவனடியார்களைப்பற்றி கூறும் புராணம் – பெரியபுராணம் .
·         இது அடியார்களின் பெருமைப்பற்றி கூறுவதால் பெரிய புராணம் என்றழைக்கப்படுகிறது.
·         தில்லை நடராசப்பெருமான் ‘ உளமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ’ என அடியெடுத்துக்கொடுக்கப்பட்டு பாடப்பட்டது .
·         இப்பாடல் தெய்வமனம் கமழுவதால் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ‘பக்திச்சுவை நனிசொட்ட சொட்டப் பாடிய கவிவளவ’ என சேக்கிழாரைச் சிறப்பித்துள்ளார் .
·         இந்நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம் .
·         இது திருத்தொண்டர் மாக்கதை எனவும் அழைக்கப்படுகிறது .
·         உலகம் , உயிர் , கடவுள் ஆகிய மூன்றனையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரியபுராணம் என திரு.வி.க பாராட்டியுள்ளார் .
·         தமிழில் தோன்றி இரண்டாவது தேசிய காப்பியம்
·         சேக்கிழாரின் இயற்பெயர் அருள்மொழித்தேவர் . இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றினார் . அம்மன்னன் இவருக்கு இட்டபெயர் உத்தமச்சோழபல்லவராயன் .
·         சேக்கிழார் , தொண்டற்சீர்பரவுவார் என்றும் அழைக்கப்படுகிறார் .
·         கல்வெட்டுகள் இவரை ராமத்தேவர் என்று கூறுகிறது .



திருவிளையாடற் புராணம்

·         இது சிவபெருமானின் திருவிளையாட்டைப்பற்றி கூறும் நூல் .
·         முதன்முதலில் இறைவனின் திருவிளையாடலைப்பற்றி கூறிய நூல் – கல்லாடம் . ஆசிரியர் கல்லாடர் .
·         ‘கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே ’ என்பது பழமொழி .
·         முதன்முதலில் திருவிளையாடற்புராணம் பாடியவர் – பெரும்பற்ற புலியூர் நம்பி (13 – ம் நூற்றாண்டு ) . இவர் பாடியது திருவாலவுடையார் திருவிளையாடற் புராணம் . பின்னர் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமே புகழ்பெற்றது . இது சொக்கர் சோமசுந்தர பெருமானின் திருவிளையாடல்களை கூறுகிறது .
·         கந்தபுராணத்தின் ஆலாசியமான்மியத்தை அடிப்படையாகக்கொண்டு திருவிளையாடற்புராணமானது இயற்றப்பட்டது .
·         3 காண்டங்களையும் 64 படலங்களையும் 3363 விருத்தப்பாக்களையும் கொண்டது .

1.    மதுரைக்காண்டம் – 18 படலம்
2.   கூடற்காண்டம் – 30 படலம்
3.   ஆலவாய்க்காண்டம் – 16 படலம்

·         பரஞ்சோதி முனிவரின் தி.வி.புராணத்திற்கு உரையெழுதியவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் .
·         பரஞ்சோதி முனிவர் மதுரையில் தங்கியிருந்தபோது அம்மாநகர மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தி.வி.புராணத்தை இயற்றினார் .இந்நூலை சிவனின் திருக்கோயிலுக்கு எதிரே உள்ள ஆறுகால் பீடத்தில் வடமொழி , தென்மொழிப்புலவர்கள் யாவரும் போற்ற அரங்கேற்றினார் .
·         உடல்முழுவதும் கண்களை உடையவன் – இந்திரன்
·         இறைவனின் பாடலைப்பெற்றுச்சென்றவன் – தருமி
·         பொற்கிழிப்பெறச்சென்ற தருமியைத்தடுத்தவர் – நக்கீரர் .
·         பொற்கிழிப்படலம் இடம்பெற்ற காண்டம் – திருவாலவாய்க்காண்டம் .


கந்தபுராணம்

·         ஆசிரியர் – கச்சியப்பர்
·         இது சைவர்களின் இதிகாசம் என்று பாராட்டப்படுகிறது
·         இதுவே புராணங்களில் மிகப்பெரியது (10000 பாடல்கள்)
·         கட்சியப்பர் , ‘ புராண நன்நாயகம் ’ எனச்சிறப்பிக்கப்படுகிறார் .
·         கண்ணனின் பாலலீலையைக்கூறுவது பாகவதப்புராணம் . அதேபோல் முருகனின் பால லீலையைக்கூறுவது கந்தபுராணம் .


பிறபுராணங்கள்
1.   அரிச்சந்திர புராணம் – வீரகவிராயர்
2.   சேக்கிழார் புராணம் – உமாபதி சிவாச்சாரியார்
3.   கூர்ம புராணம் – அதிவீர ராமபாண்டியன் .
Share:

2 comments:

  1. நல்லதொரு தொகுப்பு...

    எங்கே தமிழ்மணத்தை காணாம்...?

    ReplyDelete
    Replies
    1. அட ! டெம்ப்ளேட் மாத்துனங்ணா . அதான் வரல போல ....

      Delete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *