TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சித்தர்கள்




·          ‘சித்’ எனும் வடமொழிச்சொல்லில் இருந்து தோன்றியது சித்தர்கள் .
·          ‘சித்’ என்றால் அறிவு என்று பொருள் .
·         சித்துகளைச்செய்பவர்கள் சித்தர்கள் .
·         ‘சித்து’ –களானது எட்டு வகைப்படும் . எனவே அட்டமாசித்து என அழைக்கப்படும் .

1.   அனிமா – உடலை சிறிதாக்குதல்  .
2.   மகிமா – உடலைப்  பெரிதாக்குதல் .
3.   கிரிமா – உடலை மலைப்போல் ஆக்குதல் .
4.   லகிமா – பஞ்சுபோல் லேசாக்குதல் .
5.   பிராப்தி – எதையும் நினைத்தவுடன் அடைதல் .
6.   பிரகாமியம் – பிற உடலில் புகுந்து வெளியேறுதல் .
7.   ஈசத்துவம் – படைத்தல் , காத்தல் , அழித்தல் போன்ற செயல்கள்
8.   வசித்துவம் – வசியம் செய்தல் .

·         கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள் . கண்டு உணர்ந்தவர்கள் சித்தர்கள் எனத் தேவாரம் கூறுகிறது .
·         சித்தர்கள் 18 பேர் என்று கூறுவது மரபு . ஆனால் இந்த எண்ணிக்கை வரையறுத்துக் கூறப்படவில்லை .
·         மக்கள் இலக்கியம் என போற்றப்படுவது சங்க இலக்கியம் அல்லது சித்தர் பாடல்கள் .
·         இந்த சித்தர் பாடல்கள் நேரடியாக ஒரு பொருளையும் மறைமுகமாக ஒரு பொருளையும் உணர்த்தும் .

எகா- சரஸ்வதி எனும் சொல் வல்லாரைக்கீரையையும் , கல்விக்கடவுளையும் குறிக்கும் .

1.   அகத்தியர்
·         சித்தர்களின் தலைவர்
·         சித்தமருத்துவ முறையை வகுத்தவர்
·         இவர் பாடிய பாடல்கள் ஞானப்பாமாலை என்று அழைக்கப்படுகிறது .

2.   பட்டிணத்தார்

3.   பத்திரகிரியார்

·         இவர் துளுவ நாட்டு மன்னர் .

4.   சிவாக்கியார்

5.   பாம்பாட்டிச் சித்தர்

·         இவர் வாழ்ந்த இடம் கொங்குநாட்டு மருதமலை
·         ‘நாகர்குடி மேலிருக்கும் நல்ல பாம்பே’ என்ற பாடலை இயற்றியவர் .

6.   இடைக்காட்டுச்சித்தர்

7.   அகப்பேய்ச்சித்தர்

·         பேயாக அலைந்த மனதைப்பற்றி பாடியவர் .

8.   குதம்பைச்சித்தர்
·         குதம்பை எனும் காதணி அணிந்த பெண்ணை விழித்துப்பாடியமையால் இப்பெயரினைப் பெற்றார் .

9.   காடுவெளிச்சித்தர்
·         உருவழிபாடு செய்யாமல் வெட்டவெளியை வழிபட்டவர் .
·         ‘நந்தவனத்தில் ஒர் ஆண்டி’ எனும் பாடலை இயற்றியவர் .

10. அழுகுணிச்சித்தர்
11. கொங்கணச்சித்தர்
12. பீர் முகமது
13. மதுரை வாலைச்சாமி
14. சடைமுனி
15. திருமூலர்
16. ரோமரிஷி
17. கருவூரார்

18. இராமலிங்க அடிகளார்  
Share:

2 comments:

  1. சித்தர்களின் சிறப்பினை அறியப் பெற்றோம் நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *