TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC பொது தமிழ் – சிற்றிலக்கியம்


TNPSC பொது தமிழ்தமிழ் இலக்கியம்
இங்கு சிற்றிலக்கியம் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

சிற்றிலக்கியம்

குற்றாலக் குறவஞ்சி
·         ஆசிரியர்திரிகூடராசப்பக் கவிராயர்
·         குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.
·         இந்நூல் ஓசை நயம்மிக்க பாடல்கள் ஆகும்.
குற்றாலக் குறவஞ்சி
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே! – திரிகூட ராசப்பக் கவிராயர்
முக்கூடற்பள்ளு
ஆசிரியர் குறிப்பு:
·         இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் என்னயினாப் புலவர் என சிலர் கூறுவர்.
·         சந்தநயம் அமைந்த பாக்களைக் கொண்ட இந்நூலில் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கை ஆங்காங்கே காணலாம்.
முக்கூடற்பள்ளு – (நர்வளம்இளைய பள்ளி)
தத்தும் பாய்புணல் முத்தம் அடைக்கும்
சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும்
கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சாறயர் சித்ரம் படைக்கும்
நிதியெல் லாந்தன் பதியில் கிடைக்கும்
மத்தம் சூடும் மதோன்மத்த ரான
மருதசீர் மருதூர் எங்கள் ஊரே.
அம்மானை
ஆசிரியர் குறிப்பு
·         திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூலை இயற்றியவர் ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ஆவார்.
·         ஈசான தேசிகர் என்பது அவரது சிறப்புப் பெயராகும்
·         தாண்டவமூர்த்தி என்பவர்க்கு மகனாக பிறந்தார்.
·         இவர் மயிலேறும் பெருமாள் என்பாரிடம் கல்வி கற்றார்.
·         இவர் திருவாடுதுஐற ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிக மூர்த்திக்கு தொண்டராய் இருந்தார்.
·         ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
நூல் குறிப்பு
·         திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
·         கலம்பகம்கலம் + பகம் எனப் பிரியும், கலம்பன்னிரண்டு, பகம்ஆறு ஆக பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.
·         பல்வகையான பா வகைகளும் கலந்திருந்தலால் இந்நூல் கலம்பகம் எனவும் பெயர் பெற்றது.
·         பதினெண் உறுப்புகளில் ஒன்றாகிய அம்மானை என்னும் பகுதி ஈண்டு பாடப்பகுதியாக இடம் பெற்றுள்ளது.
அம்மானை
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான்
பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில்
ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை
அறிந்து சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை. – சுவாமிநாத தேசிகர்
தமிழ்விடு தூது
·         தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் தூதும் ஒன்று.
·         கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்
·         மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்க நாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது
·         விடுவதாகப் பொருளமைந்தது தமிழ்விடு தூது.
·         இதனை இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை.
தமிழ்விடு தூது
அரியா சனமுனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழேவிரிவார்
திகழ்பா ஒருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கள்மமடைப் போக்காநிகழவே
நல்லேரி னால்செய்யுள் நாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லேர் உழவர் தொகுத்தீண்டிநல்லநெறி
அழகர்கிள்ளைவிடு தூது
·         ஆசிரியர் பலபட்டை சொக்கநாதபிள்ளை
·         18 ஆம் நூற்றாண்டினர்; மதுரையைச் சேர்ந்தவர்.
·         சைவரான சொக்கநாதப்பிள்ளை வைணவக் கடவுள் மீது பாடிய நூல்
·         கிளியின் பெருமைஅழகரின் பெருமைஅழகர் உலா வருதல்தசாங்கம்ஊர்த்திருவிழாதலைவிநிலைகிளியை வேண்டுதல்கோயில் பணியாளர்தூது உரைக்கும் முறைதூதுச் செய்திமாலை வாங்கிவா என இதன் பொருள் அமைப்பு உள்ளது.
·         வேளாண்மை எனும் விளைவிற்கு நின் வார்த்தை
கேளாதவர்காண் கிள்ளையே”.
மாலினைப்போல மகிதலத்தோர்வாட்டமற
பால் (ன்)னத்தாலே பசி தீர்ப்பாய்
நந்திக் கலம்பகம்
ஆசிரியர் குறிப்பு:
தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இந்நூலை வழங்கியவரின் பெயரும் ஊரும் அறியப் பெறவில்லை.
நூற் குறிப்பு:
·         மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம். ஆதலின் நந்திக் கலம்பகம் எனப் பெயர் பெற்றது.
·         இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
·         கலம்பகம் என்பது தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
·         கலம்+பகம்கலம்பகம். கலம்பன்னிரண்டு பகம்ஆறு, பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதால் கலம்பகம் என்னும் பெயர் வந்தது எனவும் கூறுவர்.
நந்திமன்னன் வீரம்:
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு
காவிரி வளநாடா
நிதிதரு கவகையும் நிலமகள் உரிமையும்
இவையிவை யுடைநந்தி
முதியிலி அரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே.
விக்கிரமசோழன் உலா
ஆசிரியர் குறிப்பு:
·         இயற்பெயர்ஒட்டக்கூத்தர்
·         சிறப்புப் பெயர்கவிச்சக்கரவர்த்தி
·         சிறப்புவிக்கிரமசோழன்
·         இரண்டாம் குலோத்துங்கன் இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
·         இயற்றிய நூல்கள்:
1.
மூவருலா
2.
தக்கயாகப்பரணி
3.
குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
·         காலம்பன்னிரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
·         உலா என்பது தொண்ணூற்று சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
·         இறைவன் மன்னன்  மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகைச் சிற்றிலக்கியங்கள் எழுதப் பெற்றுள்ளன.
விக்கிரமசோழன் உலா:
·         ஒட்டக்கூத்தர் எழுதிய மூவர் உலாவில் ஒன்று.
·         முதற்குலோத்துங்கனின் நான்காவது மகன் விக்கிரமசோழன். இவன் தாய் மதுராந்தகி ஆவார்.
·         12 ஆம் நூற்றாண்டு
·         விக்கிரம சோழனின் முன்னோர்களைப் பட்டியலிட்டுக் கூறும் வரலாற்று ஆவணநூல்.
·         குடகுமலையை ஊடறுத்துக் காவிரியாற்றைக் கொணர்ந்தவன் கவேரன்.
·         மேருமலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டியவன் கரிகாலன்.
·         காவிரியின் கரைகளை உயர்த்தின் கட்டியவன் கரிகாலன்.
·         பொய்கையாரின் களவழி நாற்பதிற்காகச் சேரமான் கணைக்கால் இரும்பொறையை
·         விடுதலை செய்தவன் செங்கணான்.
·         போரில் 96 விழுப்புண்களைப் பெற்றவன் விஜயாலயன்.
 விக்கிரமசோழன் உலா
1. கொள்ளும் குடகக் குவடூ டறுத்திழியத்
தள்ளும் திரைப்பொன்னி தந்தோனும்தௌ;ளருவிச்
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும்இன்னருளின்
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும்மீதெலாம்
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்றும்
புண்கொண்ட வென்றிப் புரவலனும்கண்கொண்ட
கோதிலாத் தேறல் குனிக்கும் திருமன்றம்
காதலால் பொன்வேய்ந்த காவலனும்தூதற்காப்
பண்டு பகலொன்றில் ஈரொன் பதுசுரமும்
கொண்டு மலைநாடு கொண்டோனும்தண்டேவிக்
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியனும்வங்கத்தை
முற்று முரணடக்கி மும்முடிபோய்க் கல்யாணி
செற்ற தனியாண்மைச் சேவகனுமம்பற்றலரை
வெப்பத் தடுகளத்து வேழங்கள் ஆயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோனும்-
அப்பழநூல்
பாடரவத் தென்னரங்க மேயாற்குப் பன்மணியால்
ஆடரவப் பாயல் அமைத்தோனும்.- ஒட்டக் கூத்தர்
இராஜராஜன் சோழன் உலா
·         இதன் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்
·         மூவர் உலாவில் இடம் பெற்றுள்ள ஒரு நூல்.
·         விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன்,இரண்டாம் ராஜராஜன் என்ற மூவர் மீதும் பாடப்பட்ட உலா நூல் மூவர் உலா.
·         இரண்டாம் ராஜராஜன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட இந்த நூல் 391 கண்ணிகள் உள்ளன.
·         புயல்என்ற மங்கலச் சொல்லால் இந்நூல் தொடங்குகின்றது.
நூற்செய்திகள்
·         சோழமன்னர்களின் வழிமுறை செய்த போர்கள், அடைந்த வெற்றி, அளித்த கொடை பற்றிக் கூறுகிறது.
·         இராஜராஜன் கருநிறத்தவன் அவன் பட்டத்து அரசி புவனமுழுதுடையாள்.
·         இராஜராஜனுக்கு வரராசன், கண்டன், சனநாதன் என்ற பட்டப் பெயர்களும் விளங்கின.
·         அரசன் பெரும்பாலும் பாசறையிலேயே இருந்தால்அயிற்படை வீரன்எனச் சிறப்பிக்கப்படுகிறான்.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
ஆசிரியர் குறிப்பு:
·         பெயர்குமரகுருபரர்
·         பெற்றோர்சண்முகசிகாமணிக் கவிராயர்சிவகாமசுந்தரியம்மை
·         ஊர்திருவைகுண்டம்
·         சிறப்புதமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்
·         திருப்பனந்தாலிலும் காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளார்.
·         இறப்புகாசியில் இறைவனது திருவடியடைந்தார்.
நூல் குறிப்பு:
·         தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று பிள்ளைத்தமிழ்
·         இறைவனையே நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ்
·         பத்துப் பருவங்கள் அமைத்துப் பருவத்திற்கு பத்து பாடலென நூறு பாடலால் பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்பாடுகளை எடுத்து இயம்புவது பிள்ளைத்தமிழ்
·         ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
·         பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற்பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை.
·         இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும் அம்மானை கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.
·         புள்ளிருக்குவே@ரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானின் பெயர் முத்துக் குமாரசுவாமி அவர் மீது பாடப்பட்டமையால் இது முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப் பெயர் பெற்றது.
·         குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது வருகை பருவம் ஆகும்.
முத்தொள்ளாயிரம்
நூல் குறிப்பு:
·         முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்டது.
·         புறத்திரட்டு என்னும் நூல்வாயிலாக நூற்றெட்டு வெண்பாக்களும் பழைய உரை நூல்களில் மேற்கோள்களாக இருபத்திரண்டு வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
·         மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
·         இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
முத்தொள்ளாயிரம்
பல்யானை மன்னீர் படுதிறை தந்துய்ம்மின்
மல்லல் நெடுமதில் வாங்குவில் பூட்டுமின்
வள்ளிதழ் வாடாத வானோரும் வானவன்
வில்லெழுதி வாழ்வார் விசும்பு.
கலிங்கத்துப் பரணி
ஆசிரியர் குறிப்பு:
·         கலிங்கத்துப்பரணி இயற்றியவர் சயங்கொண்டார்
·         இவர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர்.
·         இவர் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அரசவை புலவராகத் திகழ்ந்தவர்.
·         பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
·         இசையாயிரம் உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
·         இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
·         ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்பது பெயர்.
·         இது தொன்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
·         பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி.
·         குலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர் தொடுத்து வெற்றிப் பெற்றான்.
·         அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்வியுற்ற கலிங்கநாட்டின் பெயரால் அமைந்து உள்ளது.
·         இந்நூலில் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
·         சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக்கூத்தர் இந்நூலைத் தென்தமிழ்த்
·         தெய்வப்பரணி எனப் புகழ்ந்துள்ளார்.
கலிங்கத்துப்பரணி
1. தீயின் வாயினீர் பெறினு முண்பதோர்
சிந்தை கூரவாய் வெந்து லர்ந்துசெந்
நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே. – சயங்கொண்டார்
பரணி இலக்கியங்கள்:
1. தக்கயாகப் பரணி
2.
இரணியன் வதைப் பரணி
3.
புhசவதைப் பரணி
4.
மோகவதைப் பரணி
5.
வங்கத்துப் பரணி
6.
திராவிடத்துப் பரணி
7.
சீனத்துப் பரணி
8.
திருச்செந்தூர் பரணி (சூரன் வதைப் பரணி)
நந்திக்கலம்பகம்
·         மூன்றாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் மீது பாடப்பட்ட கலம்பக நூல்
·         ஆசிரியர் பெயரை இதுவரை அறியமுடியவில்லை
·         நந்திவர்மனின் மாற்றாந்தாய்க்குப் பிறந்த நால்வரில் ஒருவர் என்று சிலர் கூறுகின்றனர்.
·         காலம் 9 ஆம் நூற்றாண்டு
·         கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகையின் முதல் நூல். (கலம்பகம் குறித்த செய்திகளை இந்நூலில் பக்கம்-ல் காண்க.)
·         வரலாற்றுக் குறிப்புகள் மிகுந்த கலம்பக நூல்
·         ஈட்டு புகழ் நந்தி பாண! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவுஅளவும் கேட்டிருந்தோம்
பேய்என்றாள் அன்னை; பிறர்நரி என்றார்; தோழி
நாய் என்றாள் நீ என்றேன் நான்”.
திருவேங்கடத்தந்தாதி
·         ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
·         12, 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
·         ஊர் திருமங்கை
·         இராமாநுசரின் சீடரான திருவரங்கத்து அமுதானரின் பேரன்
·         கூரத்தாழ்வாரின் மகனான பராச்சரப்பட்டரின் சீடர் என்பர்.
·         ஆராய்ச்சியாளர்கள் 17 ஆம் நூற்றாண்டு என்பர்.
·         திருமலைநாயக்கரின் அரண்மனையில் எழுத்தராகப் (ராயசம்) பணிபுரிந்தவர்.
·         இவர் பாடிய அட்டப்பிரபந்தத்துள் ஒன்று திருவேங்கடத்தந்தாரி.
·         96 சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி.
·         அட்டபிரபந்தங்கள்: 1. திருவரங்கத்தந்தாதி 2. திருவேங்கடத்தந்தாதி 3. திருவேங்கட மலை 4. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி 5. அழகர் அந்தாதி 6. திருவரங்கத்து மாலை 7. திருவரங்கக் கலம்பகம் 8. ஸ்ரீரங்க நாயகர் ஊசல் ஆகியன.
·         ஒருமாதுஅவனி ஒருமாதுசெல்வி உடன் உறைய
வரும் ஆதவனின் மகுடம்வில்வீச வடமலைமேல்
கருமாதவன் கண்ணன் நின்பால் திருநெடுங்கண்
வளர்தற்கு
அருமாதவம் என்னசெய்தாய்ப் பணிஎனக்கு அன்புதியே”.
பாஞ்சாலி சபதம்
·         முப்பெரும் பாடல்கள்எனப்படும் மூன்றில் ஒன்று.
·         பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஐந்து சருக்கங்கள் 412 பாடல்கள் உள்ளன.
·         முதல் பாகத்தில் 1. சூழ்ச்சிச் சருக்கம் 2. சூதாட்டச் சருக்கம் என்ற இரு சருக்கங்கள் உள்ளன.
·         இரண்டாம் பாகத்தில் 1. அடிமைச் சருக்கம் 2. துகில் உரிதல் சருக்கம்ää 3. சபதச் சருக்கம் என்ற மூன்று சருக்கங்கள் உள்ளன.
·         பாஞ்சாலி சபதம் நூலை 1919-லேயே பாரதி எழுதி முடித்துவிட்டார்; என்பது
·         05.09.1919-ல் பாரதியார் வயி..சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
·         பாஞ்சாலி சபதத்தின் முதல்பாகம் 1912 இல் பாரதி வாழ்ந்த காலத்திலேயே வெளிந்தது.
·         1924 இல் முழு நூலையும் பாரதி பிரசுராலயம் வெளியிட்டது.
விதுரனைத் தூதுவிடல்
தம்பிவிதுரனை மன்ன னழைத்தான்;
தக்க பரிசுகள் கொண்டினி தேகி
எம்பியின் மக்க ளிருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடியிங் கெய்தி விருந்து களிக்க
நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதோர் நுந்தை யெனவுரை செய்வாய்.
குயில்பாட்டு
·         ஆசிரியர் பாரதியார்
·         பாரதியின் முப்பெரும் பாடல்களுள் ஒன்று
·         இது ஒரு குறுங்காவியம்
·         1914-1915 காலத்தில் எழுதப்பட்டது
·         பாரதியார் காசியில் வாங்கிய நோட்டுப் புத்தகத்தில் இக்காவியத்தை எழுதியுள்ளார்.
·         அதில் முன்பக்கத்தில் 1914-1915 என்று குறித்துள்ளார்.

சிற்றிலக்கியம் PDF Download

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *