TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - வாணிதாசன்

வாணிதாசன்

·         பிறப்பு – 22.07.1915 , மறைவு – 07.08.1974
·         பிறந்த ஊர் – வில்லியனூர் (புதுவை)
·         இயற்பெயர் – அரங்கசாமி என்கிற எத்திராசலு .
·         வாணிதாசன் , பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றார் .
·         தமிழ், தெலுங்கு , ஆங்கிலம் , ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கினார் .
·         வாணிதாசனுக்கு ‘ரமி’ எனும் புனைப்பெயருமுண்டு .
·         குற்றுலுகர ஒலியை , முதன்முதலில் உவமையாக எடுத்தாண்டவர் வாணிதாசன் .
·         வாணிதாசனுக்கு ப்ரெஞ்ச் குடியரசுத்தலைவர் ‘செவாலியே’ விருதினை வழங்கியுள்ளார்.
·         வாணிதாசன் கவிதைகள் , சாகித்திய அகாதமியால், ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’ என்னும் நூலிலும் , தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட ‘புதுத்தமிழ் கவிமலர்கள்’ என்னும் நூலிலும் இடம்பெற்றுள்ளது.
·         வாணிதாசன் பாடல்கள் ரஷ்யம் , ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சிறப்புப்பெயர்

·         பாவலர் மணி , பாவலர் மன்னன் , கவிஞரேறு , தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வொர்த்.
·         புதுமைக்கவிஞர் ,
·         தமிழ்நாட்டின் தாகூர் (அழைத்தவர் – மயிலை சிவகொத்து )

சிறந்த நூல்கள்

·         குழந்தை இலக்கியம் , கொடிமுல்லை ,  தமிழச்சி , பொங்கல் பரிசு , இன்ப இலக்கியம்
·         தீர்த்த யாத்திரை , தொடுவானம் , எழில் ஓவியம் , எழில் விருத்தம்

கவிதைகள்

·         நோக்கடா கீழ்வானம் தங்க காட்டாறு – நுண்முகில்கள்
ஆக்கிய அழகைக்காண ஆயிரம் கண்கள் வேண்டும்
·         அன்பு வளர்த்தால் அலைகடல்சூழ் நம் நாட்டில் துன்பம் இல்லை .
·         கற்பிப்போர் கண்கொடுப்போரே
·         செய்கதிரோன் மலையிடையில் செம்மை தேக்கும்

செடிகொடிகள் பொன் பூக்கும்
Share:

தமிழ் அறிஞா்கள் - முடியரசன்

முடியரசன்

·         பிறப்பு – 7.10.1920 , மறைவு - 1998 ஊர் – பெரியகுளம் , தேனி .
·         இயற்பெயர் – துரைராசு , பெற்றோர் – சுப்பராயலு , சீதாலட்சுமி .
·         காரைக்குடி மீனாட்சி சுந்தரனார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
·         பறம்பு மலையில் நடந்தவிழாவில் ‘கவியரசு’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது .
·         முடியரசனுக்கு 1966-ல் தமிழக அரசு ‘பூங்கொடி’ எனும் காவியத்துக்கு பாரதிதாசன் விருது வழங்கியது.
·         முடியரசன் கவிதைகள் , சாகித்ய அகாதமியால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
·         ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர் .
·         தமது மறைவின்போது எச்சடங்குகளும் கூடாது என்றுரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர் .

சிறப்புப்பெயர்கள்

·         திராவிட இயக்கக்கவிஞர்
·         தற்காலத் தமிழகக் கவிஞர்களின் முன்னோடி
·         பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் .

சிறந்த நூல்கள்

·         பூங்கொடி , காவியப்பாவை, வீரகாவியம் , புனிதனைத் தேடுகின்றேன் , நெஞ்சு பொறுக்குதில்லையே , பாடும் கோவில் .
·         ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பற்றி பாடிய நாடகம்)

சிறப்புத்தொடர்கள்

·         காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்
·         மணவறையில் தமிழுண்டோ பயின்றவர் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழுண்டோ மாண்ட பின்னர்
பிணவறையில் தமிழுண்டோ
·         வயலுக்கு வரப்பு ஓன்றும் வேண்டாம் என்றால்
வளக்கரைகள் ஆற்றுக்கு வேண்டாம் என்றால்

இயல்மொழிக்கு இலக்கணம் வேண்டாம் பெண்ணே !
Share:

தமிழ் அறிஞா்கள் - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

·         பிறப்பு – 27-08-1876
·         பிறந்த ஊர் – தேரூர் (குமரி மாவட்டம்)
·         பெற்றோர் – சிவதானு பிள்ளை , ஆதிலட்சுமி
·         ஆசிரியர் – சாந்தலிங்க தம்பிரான் .
·         தமிழ், மலையாளம் , ஆங்கிலம் என மும்மொழி புலமை பெற்று விளங்கினார் .
·         வெண்பா இயற்றுவதில் வல்லவர் .
·         கவிமணி , எட்வின் அர்னால்டு எழுதிய THE LIGHT OF ASIA என்பதை ‘ஆசியஜோதி’ என்று தமிழாக்கம் செய்து உள்ளார் .
·         கவிமணி , உமர்கயாம் எனும் பாரசீக கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘பீட்ஜெரால்டு’ என்பவரின் கவிதைகளின் வழி , தமிழில் அதனை உமர்கய்யாம் பாடல்கள் என தமிழாக்கம் செய்துள்ளார் .
·         உமர்கயாமின் இயற்பெயர் , ‘கீயாதுதீன் அபுல்பாத் ’ .
·         ரூபாயத் என்பதன் பொருள் நான்கடி செய்யுள் .

சிறப்புப் பெயர்கள்

·         1940- ல் சென்னை மாநில தமிழ்ச்சங்கம் ‘கவிமணி’ எனும் பட்டம் வழங்கியது.
·         குழந்தைக்கவிஞர் ( முதல் குழந்தைக் கவிஞர் – அழ வள்ளியப்பா )

படைத்த நூல்கள்

·         மலரும் மாலையும் , ஆசியஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், இளந்தென்றல் , பசுவும் கன்றும் , குழந்தைச்செல்வம் .
·         நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் – எள்ளல் நூல் .
·         காந்தளூர்ச்சாலை – வரலாற்று நூல் .
·         தேவியின் கீர்த்தனைகள் – இசைப்பாடல் .

மறைவு

·         26-09-1954 அன்று கவிமணி மறைந்தார் .
·         கவிமணியின் கவிதைகளை புரிந்து கொள்வதற்கு பண்டிதராக வேண்டியதில்லை , படிக்கத் தெரிந்த எவரும் பொருள்கொள்ளத்தக்க எளிய நடை
-    டி.கே.சண்முகம்
·         தேசிகவிநாயகத்தின் கவிப்பெருமை , தினமும் கேட்பது என்செவி பெருமை
-    நாமக்கல் கவிஞர் .


சிறப்புத்தொடர்கள்

·         தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம் .
·         மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திடல் வேண்டுமம்மா .
·         செந்தமிழ்ச் செல்வ திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்.
·         நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதி தொழுது எழுக ஓர்ந்து.
·         உள்ளத்தில் உள்ளது கவிதை – இன்ப ஊற்றெடுப்பது கவிதை .
·         வெயிற்கேற்ற நிழலுண்டு வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு .
·         தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கு
துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி .
·         எவர் உடம்பிலும் சிவப்பே இரத்தம் நிறமப்பா
எவர் விழிக்கும் உவர்ப்பே இயற்கை குணமப்பா
·         ஓடும் உதிரத்தில் வடிந்தொழும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும் ஜாதிகள் தெரிவதில்லை .
·         சாலைகளில் பலதொழில்கள் பெருகவேண்டும்

சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் .
Share:

தமிழ் அறிஞா்கள் - நாமக்கல் கவிஞா்.வெ.ராமலிங்கம்பிள்ளை

நாமக்கல் கவிஞர் . வெ. ராமலிங்கம் பிள்ளை

·         பிறப்பு –  19 – 10 – 1888 .
·         பிறந்த ஊர் – மோகனூர் , நாமக்கல் மாவட்டம் .
·         பெற்றோர் – வெங்கட்ராமன் , அம்மணி அம்மாள் .
·         வளர்ப்புத்தாய் – பதுல்லா பீவி எனும் இஸ்லாமிய பெண் .
·         நாமக்கல் கவிஞர் ஓவியக்கலையிலும் திறமை பெற்று விளங்கினார் . இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் – ராமகிருஷ்ண பரமஹம்சர் .
·         இவர் , அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்கு பாரதமாதா முடிசூட்டுவது போல படம்வரைந்து தங்கப்பதக்கம் பெற்றார் .
·         மேலும் திருச்சி மாவட்ட காங்கிரஸின் செயலாளர் ஆகவும் கரூர் மற்றும் நாமக்கல் வட்டார காங்கிரஸில் தலைவராகவும் பணியாற்றினார் .
·         1932-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு அதன் வழிநடை பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்ற பாடலை பாடினார் .
·         தமிழக அரசின் முதல் அரசவைக் கவிசராக விளங்கினார் .
·         சாகித்திய அகாதமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார் .
·         மேலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார் .
·         இராமலிங்கம்பிள்ளை , கோவிந்தராசு ஐயங்காருடன் இணைந்து ‘லோகமித்ரன்’ என்ற இதழை நடத்தினார் .

சிறப்புப்பெயர்கள்

·         ஆஸ்தான கவிஞர் , காந்தியக்கவிஞர், நாமக்கல் கவிஞர், காங்கிரஸ் கவிஞர் , ஆட்சிமொழி காவலர் .

எழுதிய நூல்கள்

·         அவனும் அவளும் , இலக்கிய இன்பம் , சங்கொலி , தமிழன் இதயம் , கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி, தமிழ்வேந்தன் , தமிழ்த்தேர் , அன்பு செய்த அற்புதம் , திருக்குறள் – புது உரை .
·         மலைக்கள்ளன் – மர்மச்சுவை நிறைந்த நாவல்
·         என் கதை – சுய சரிதை .

நாமக்கல் கவிஞர் மறைவு

·         இவர் 24 – 08 – 1972 அன்று மறைந்தார் .
·         நாமக்கல்லில் உள்ள இவரது இல்லம் , நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
·         தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது .
·         நடுவணரசு பத்ம்பூசன் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .

புகழுரை

·         திலகர் விதைத்த வித்து பாரதியாக உரைத்தது
காந்தி தூவிய விதை நாமக்கல்ல கவிஞராக தோன்றியது
-    ராஜாஜி

நாமக்கல் கவிஞரின் கவிதைகள்

·         தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
( தமிழன் இதயம் என்ற நூலில் இடம்பெற்ற பாடல் இது )
·         சத்தியம் நம்மில் குறைந்ததால்
பல சங்கடங்கள் வந்து நிறைந்தது.
·         கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் .
·         புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
·         தமிழனென்று சொல்லடா , தலைநிமிர்ந்து நில்லடா
·         கூட்டுறவில் சேருங்கள் கூடிவாழ பழகுங்கள் .
·         பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீரவேண்டும்
·         அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மை தன்மையையும் உறுதியும் மிகுந்தும்
·         கலையென்ற கடலுக்கு கரைகண்ட புனையா
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம் .
·         காந்தியை மறக்காதே என்றும் காந்தியை இழக்காதே
·         காந்தியம் நம் உடைமை – அதைக்காப்பது நம் கடமை
·         இந்திய நாடிது என்னுடை நாடே
என்று தினந்தினம் நீயதைப் பாடே
·         காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி .
Share:

தமிழ் அறிஞா்கள் - பாரதிதாசன்

·         பாரதிதாசன் 29-04-1891 ல் புதுவையில் பிறந்தார் .
·         இயற்பெயர் கனகசுப்புத்தினம் ; பெற்றோர் – கனகசபை , இலக்குமி அம்மாள் .
·         பாரதிதாசன் தன் 16-வது வயதில் புதுவை கால்வே கல்லூரி (அ) அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் . இதற்கு முன்னர் நிரவி அரசு பள்ளியில் பணியாற்றினார் .
·         தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிஞன் வேரில்லாத மரம் , கூடில்லாத பறவை என்று பாடிய ரஷ்யநாட்டுக் கவிஞர் இரசூல் கம்சதேவ் போலவே பாரதிதாசனும் விளங்குகிறார் .
·         பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக , தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார் .
·         பாரதிதாசன் இளம்வயதிலேயே பிரெஞ்ச் , தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார் .
·         புதுவையில் வெளியான ஏடுகளில் கிறுக்கன் , கிண்டல்காரன் , பாரதிதாசன் எனப் பல புனைப்பெயர்களில் இவர் எழுதிவந்தார் .
·         இயற்கையை வர்ணித்துப் பாடுவதில் இணையற்ற கவிஞர் – பாரதிதாசன் .
·         தன்நண்பர்கள் முன்னால் பாடு என பாரதியார் கூற ,
‘எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா’ என்று பாடினார் .
இந்த பாடலை , பாரதியார் , ஶ்ரீசுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் பாடியது எனக் குறிப்பிட்டு , சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார் .
·         பாரதிதாசனை பின்தொடர்ந்த கவிஞர்கள் தங்களைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அழைத்துக்கொண்டனர் . உதாரணம் – வாணிதாசன் , முடியரசன் ,  சுரதா, கம்பதாசன் .
·         பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு எல்லாம் முதலெழுத்தும் , தலையெழுத்தும் பாரதிதாசனே ஆவார் .
·         குடும்பக் கட்டுப்பாடு பற்றி , இந்தியாவிலேயே முதன்முதலாக பாட்டு எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும் .
·         பாரதிதாசன் 1929 –ம் ஆண்டு குடியரசு , பகுத்தறிவு போன்ற பெரியாரின்  ஏடுகளில் பாடல் , கட்டுரை எழுத ஆரம்பித்தார் .
·         பாரதிதாசன் 1931-ல் புதுவை முரசு என்ற ஏட்டினை ஆரம்பித்தார் .
·         பாரதிதாசன் குயில் என்ற இலக்கிய இதழை நடத்திவந்தார் .
·         1938 – ல் பாரதிதாசனின் முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தது .
·         செக் மொழியில் பாரதிதாசன் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
·         பாரதிதாசன் 1946 , ஜூன் 29 ல் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார் . ( விழாத்தலைமை – சோமசுந்தர பாரதியார் )
·         பாரதிதாசன் 1954- ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

பாரதிதாசன் சிறப்புப்பெயர்

1. பாவேந்தர் , 2. புரட்சிக்கவி (அழைத்தவர் - அண்ணா) , 3. புதுமைக்கவிஞர் , 4. பகுத்தறிவுக்கவிஞர் , 5. இயற்கைக் கவிஞர் , 6. புதுவைக்குயில் ,          7. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் , 8. பூங்காட்டுத்தும்பி ( அழைத்தவர் - வாணிதாசன்) .

பாரதிதாசன் மறைவு

·         21-04-1964 ல் இயற்கை எய்தினார் .(இடம் – அரசு மருத்துவமனை , சென்னை)
·         தமிழ்நாடு அரசு 1990-ல் பாரதிதாசன் படைப்புகளை நாட்டுடமையாக்கியது .

பாரதிதாசன் எழுதிய நூல்கள் 

·         பாண்டியன் பரிசு , எதிர்பாராத முத்தம் , சேரதாண்டவம் , சஞ்சீவ பருவதத்தின் சாரல் , இளைஞர் இலக்கியம் , வீரத்தாய் , நல்லதீர்ப்பு , தமிழச்சியின் கத்தி , சௌமியன் , குறிஞ்சித்திரட்டு .
·         காதல் நினைவுகள் , காதலா ? கடமையா ? , இரணியன் , இசையமுது , மணிமேகலை வெண்பா , கண்ணகி புரட்சிக் காப்பியம் , படித்த பெண்கள் , தமிழியக்கம் .
·         பிசிராந்தையார் – சாகித்திய அகாதமி பெற்ற நாடகம் .
·         குடும்ப விளக்கு – கற்ற பெண்ணின் சிறப்பு .
·         இருண்ட வீடு – நகைச்சுவை நூல் .
·         அழகின் சிரிப்பு – இயற்கை .

பாரதிதாசன் புகழுரை

·         மன்னவருக்கு மன்னன் மகாகவிஞன் பேரறிஞன் தன்னெறி இல்லாத தமிழ்
-    கண்ணதாசன்
·         அவர்தம் பாடல்களை படிக்கின்ற அந்நியனும் தமிழனாகிவிடுவான்
-    சிதம்பரச்செட்டியார்
·         பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி
-    கு.ப.ராசகோபாலன்.
·         அறிவுக்கோயிலைக்கட்டி , அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்.
-    புதுமைப்பித்தன்

பாரதிதாசன் கவிதைவரிகள்


இன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
(புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்)
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தமக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளே !
இனிமைத்தமிழ் எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்தாள் நல்லமுது .
எளியநடையில் தமிழ்நூல்கள் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதல் வேண்டும் .
தமிழெங்கள் பிறவிக்குத் தாய் .
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் .
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே !
தமிழே நீ ஒரு பூக்காடு நானோர் தும்பி
எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நகர்கிற திந்தவையம்
கொலை வாளினை எடடா – மிகு
கொடியோர் செயல் அறவே
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்
முதல் அமைச்சராய் வரவேண்டும் .
தமிழுக்கு அமுதென்று பேர்
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே
ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள அனைவரும் நானிடவும் வேண்டும்
தமிழின் விந்தையை எழுத தரமோ !
உள்ளே தொட்டால் உசிரில் இணைக்கும் தெள்ளு தமிழ்
தமிழென்று தோல்தட்டி ஆடு – நல்ல
தமிழ்வெல்க வென்று தினம்பாடு
செந்தமிழ் நடுந்தேனே செயலினை
மூச்சினை உனக்கு அளித்தேனே !
தமிழைப் பழித்தவனைத் தாய்த்தடுத்தாலும் விடாதே
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
இருட்டறையில் உள்ளதடா உலகம்
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடுசாய்ப்போம் .
பொதுவுடைமைக் கொள்கையை திசையெங்கும் சேர்ப்போம் .
மதம் , மனிதனின் மாற்றுச்சட்டை
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே !
பாரடா உன் மானிட சமூகத்தை
கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்
பெண்களுக்கு கல்வி வேண்டும் – குடித்தனம் பேணுதற்கே !
அகரமுதலி ஒன்றை நாளும் படித்துவருவாய்
நிகரில்லாத சொற்கள் நினைவில் பெறுவாய்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே !
தமிழே ஆதி தாயே வாழ்க
மானிட சமுத்திரம் நாளொன்றுக்கு
பிரிவில்லை எங்கும் பேதமில்லை
சாவிலும் தமிழ்ப்படித்து சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும் .
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *