TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம்
இங்கு கம்பராமாயணம் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
கம்பராமாயணம்
·
இராமாயணம் இதிகாசம் இரண்டனுள் முதலாவது
·
கம்பராமாணயம் ஒரு வழி நூல்
·
வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் முதல் நூல்
·
கம்பராமாயணம் வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்பு அன்று தழுவல்
·
இயற்றியவர் கம்பர்
·
குலம் 9 ஆம் நூற்றாண்டு (அ) 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
·
பிறந்த ஊர் சோழநாட்டுத் திருவெழுந்தூர்
·
கம்ப் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை
·
கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.
·
கம்பர் 1000 பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
·
கம்பர் தம் நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம்
கம்பராமாயணம் நூல் அமைப்பு:
·
காண்டம் – 6,
·
படலம் – 113,
·
பாடல்கள் – 10569
காண்டம்:
1. பாலகாண்டம்
2. அயோத்தியா காண்டம்
3. ஆரண்ய காண்டம்
4. கிஷ்கிந்தா காண்டம்
5. சுந்தர காண்டம்
6. யுத்த காண்டம்
·
முதற்படலம், ஆற்றுப்படலம் இறுதிப்படலம் விடை கொடுத்த படலம்
·
தமிழின் மிகப் பெரிய நூல் கம்பராமாயணம்
·
காப்பியத்தின் உச்சகட்ட வளர்ச்சி கம்பராமாயணம்
·
திருமாலின் அவதாரம் இராமன்
·
இராமனின் குலம் சூரிய குலம்
·
தந்தை தசரதன், தாய் கோசலை (கௌசல்யா)
·
வளர்ப்புத்தாய் கைகேயி
·
நாடு கோசலம்
·
நகரம் அயோத்தி
·
ஆசிரியர் வசிட்டர்
·
கைகேயியின் தோழி கூனி
·
கூனியின் இயற்பெயர் மந்தரை
·
கைகேயியின் மனத்தை மாற்றியவள் கூனி
இராமனின் தம்பியர் மூவர்:
1. பரதன்
2. இலக்குவன்
3. சத்ருக்கனன்
இராமனால் தம்பியராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் மூவர்:
1. குகன்
2. சுக்ரீவன்
3. வீடணன்
·
இராமன் முதன் முதலாகக் கொன்றது தாடகை என்ற பெண்ணை.
·
விசுவாமித்திரரின் யாகத்தைக் காக்கும் பொருட்டு இராமன் தாடகையைக் கொன்றான்.
·
இராமனை மிதிலைக்கு அழைத்துச் சென்றவர் விசுவாமித்திரர்.
·
இராமன் – சீதை திருமணம் நடந்த இடம் மிதிலை
·
சீதையின் தந்தை ஜனகன்
·
சீதைக்கு ஜானகி, மைதிலி என்ற வேறுபெயர்களும் உண்டு.
·
பரதன் மனைவி மாண்டலி
·
இலக்குவன் மனைவி ஊர்மிளா (ஜனகன் மகள்)
·
சத்ருக்னன் மனைவி சதகீர்த்தி (ஜனகன் மகள்)
·
இராவணன் மனைவி மண்டோதரி
·
கும்பகருணன் மனைவி வச்சிரசுவாலை, தீர்க்க சுவாலை
·
வீடணன் மனைவி சுரமை
·
கைகேயியின் மகன் பரதன்
·
சுமத்திரையின் மக்கள் இலக்குவன்,சத்ருக்கனன்
·
ஆதிசேடனின் அவதாரம் இலக்குவன்
·
திருமணம் முடிந்து அயோத்தி வரும் வழியில் இராமனை எதிர்த்தவர் பரசுராமர்
·
கங்கைக் கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவன் குகன்.
·
குகனின் தலைநகரம் சிருங்கிபேரம்
·
கிஷ்கிந்தையை ஆண்டவன் வாலி
·
வாலி மனைவி தாரை
·
வாலி மகன் அங்கதன்
·
வாலி தம்பி சுக்ரீவன்
·
வாலியைக் கொன்றவன் இராமன்
·
சுக்ரீவன் அமைச்சன் அனுமான்
·
இராமனுக்காகச் சீதையிடம் தூது சென்றவன் அனுமான்.
·
இராமனுக்காக இராவணனிடம் தூது சென்றவன் அங்கதன்.
·
அங்கதன் தூது வால்மீகி இராமாயணத்தில் இல்லை.
·
இரண்யவதம் வால்மீகி இராமாயணத்தில் இல்லை
·
வீடணன் மகள் திரிசடை
·
இராவணன் மகன் இந்திரஜித்
·
இந்திரஜித்தின் இயற்பெயர் மேகநாதன்
·
இந்திரஜித்தின் அம்பால் மயங்கி விழுந்தவன் இலக்குவன்.
·
இந்திரஜித்தைக் கொன்றவன் இலக்குவன்
·
14 ஆண்டுகள் தூங்காமல் இருந்து இந்திரஜித்தை இலக்குவன் கொன்றான்.
·
தேவ – அசுரப்போர் 18 வருடம் நடந்தது.
·
இராமாயணப் போர் 18 மாதம் நடந்தது.
·
மகாபாரதப் போர் 18 நாள் நடந்தது.
·
செங்குட்டுவனின் வடநாட்டுப் போர் 18 நாழிகை நடந்தது.
·
இராமன் முடிசூட்டிக் கொண்ட போது அரியணை தாங்கியவன் அனுமான்.
·
உடைவாள் ஏந்தியவன் அங்கதன்
·
வெண்கொற்றைக் குடை பிடித்தவன் பரதன்
·
கவரி வீசியவர்கள் இலக்குவன் சத்ருக்கனன்
·
முடிஎடுத்துக் கொடுத்தவர் சடையப்ப வள்ளலின் முன்னோர் முடிசூட்டியவன் வசிட்டன்
·
கம்பர் தம் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்.
கம்பர் எழுதிய பிற நூல்கள்:
1. ஏர் எழுபது
2. திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
3. சடகோபர் அந்தாதி
4. சரசுவதி அந்தாதி
5. கம்பர் மகன் அம்பிகாபதி
·
அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
·
இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
புகழுரைகள்:
“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
“கம்பனைப் போல வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதி
மேற்கோள்:
“இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்”
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான்”
“வீரமும் களத்தே போட்டு வெறும் கையேடு இலங்கை புக்கான்”
“இன்று போய் நாளை வா”
“வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
“பேசுவது மானம் இடைப்பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம்”
“இற்பிறப்பு என்பெதான்றும் இரும்பொற என்பதான்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக் கண்டேன்”
“கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
“தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க”
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்”
“எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையாரும் இல்லை மாதோ”
“உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்”
“கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே”
“கை வண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்”
“ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ”
“அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா”
“விருந்துவரின் என்னுறுமோ என்று விம்மும்”
கம்பராமாயணம்:
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. – கம்பர்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. – கம்பர்
அயோத்தியா காண்டம்:
குகன் படலம்
·
குகன் வருகை:
ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.
நாய கன்போர்க் குகன்எனும் நாமத்தான்
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன் கல்திரள் தோளினான்.
·
குகனின் தோற்றம்:
துடியன் நாயினன் தோல்செருப்பு ஆர்த்தபேர்
அடியன் அல்செறிந் தன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்
இடியி னோடுஎழுந் தாலன்ன ஈட்டினான்.
அடியன் அல்செறிந் தன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர்முகில்
இடியி னோடுஎழுந் தாலன்ன ஈட்டினான்.
·
குகன் இராமனைக் காண வருதல்:
1. “சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தான்
இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான்.”
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தான்
இருந்த வள்ளலைக் காணவந் தெய்தினான்.”
2. “கூவா முன்னம் இளையோன் குறுகிநீ
ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.”
ஆவான் யார்என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான்.”
·
குகனைக்குறித்து இராமனிடம் இலக்குவன் கூறியது:
நிற்றி ஈண்டு என்றுபுக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான்
கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்;
எற்றுநீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன் என்றான்
·
இராமன் இலக்குவனிடம் குகனை அழைத்துவரப் பணித்தும், வந்த குகன் பணிதலும்:
அண்ணலும் விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
பண்ணவன் வருக என்னப் பிரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றான்.
பண்ணவன் வருக என்னப் பிரிவினன் விரைவில் புக்கான்
கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன் இருண்ட குஞ்சி
மண்ணுறப் பணிந்து மேனி வளைத்துவாய் புதைத்து நின்றான்.
·
தேனும் மீனும் விருப்பத்துடன் கொண்டு வந்தாகக் குகன் கூறுதல்:
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவ தாகத்
திருத்தினன் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன வீரன்
விருத்தமா தவரை நோக்கி முறுவலன் விளம்ப லுற்றான்
·
இராமன் குகனைப் பாராட்டல்:
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே
பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த வன்றே
பரிவினில் தழீஇய என்னில் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
·
குகன் வேண்டுகோள்:
கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான்.
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய செய்குவென் அடிமை என்றான்.
·
குகன் கொண்டுவந்த படகில் மூவரும் புறப்படல்:
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடைஎன்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா.
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடைஎன்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொ டினிதேறா.
·
குகன் படகைச் செலுத்துதல்:
விடுநனி கடிதென்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுவீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்.
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுவீர்வாய்க்
கடிதினில் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரியுறு மெழுகானார்.
·
குகன் உடன்வருவதாக நவின்றபோது இராமன் கூற்று:
அன்னவன் உரைகளோ அமலனும் உரைநேர்வான்
என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந்
நன்னுத லவள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது. நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.
என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந்
நன்னுத லவள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது. நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!