TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC பொது தமிழ் - Nattupura Padalgal - Tamil PDF


TNPSC பொது தமிழ்
இங்கு நாட்டுப்புற பாட்டுசித்தர் பாடல்கள் தெடர்பான செய்திகள்  பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
நாட்டுப்புற பாட்டுசித்தர் பாடல்கள் தெடர்பான செய்திகள்
·         ஆங்கிலேயரின் தமிழ் ஆய்வால் தோன்றிய துறைகளில் ஒன்று நாட்டுப்புறவியல்
·         இதற்கு நாட்டார் வழக்காற்றியல் என்று வேறு பெயரும் உண்டு.
·         நாட்டுப் புறப்பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், கலைகள், சமயம், பழக்கவழக்கங்கள், அறிவியல் போன்றன நாட்டுப் புறவியலுள் அடங்கும்.
நாட்டுப்புறப் பாடல்கள்
·         நாட்டார் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம் என்ற பெயர்களும் உண்டு.
·         குடும்பம்,தொழில், விளையாட்டுச் சார்ந்த பாடல்கள், விடுகதை, பழமொழி, இதிகாசங்கள், புராணங்கள் போன்றன இதில் அடங்கும்.
நாட்டுப்புற பாடல்களின் இயல்புகள்:
1. பேச்சு வழக்குடையது
2.
கொச்சை மொழி கொண்டது
3.
கூறியது கூறல் வரும்
4.
வாய்மொழியாகப் பரவுவது
5.
வடிவம் மாறக் கூடியது
6.
படைத்தவர் பெயர் தெரியாதது
7.
மக்களின் பக்தி, நீதி, உளவியல், சமுதாயம் என அனைத்துக் கூறுகள் பற்றிக் கூறுவது.
நாட்டுப்புறக் கதைகள்:
·         உரைநடைக் கதைகள், கதைப் பாடல்கள் என இருவகைப்படும்.
·         காகம்நரி, முயல்சிங்கம், எலிசிங்கம் போன்ற சிறுவர் சிறுகதைகளும்,ராஜா ராணிக் கதைகள், பேய்க் கதைகள், பரமார்த்த குரு கதைகள் போன்ற நெடிய கதைகளும் உரைநடைக் கதையில் அடங்கும்.
·         அல்லி அரசாணி, பொன்னுருவி மசக்கை போன்ற இதிகாசக் கதைகளும், ஐவர் ராஜாக் கதை, கட்டபொம்மன் கதை, தேசிங்குராஜன் கதை போன்ற வரலாற்றுக் கதைகளும், நல்லதங்காள்கதை, முத்துப்பட்டன் கதை போன்ற சமுதாயக் கதைகளும், வள்ளத் திருமணம், சொக்கன் கதை, சுடலைமாடன் கதை போன்ற தெய்வக் கதைகளும் இதில் அடங்கும்.
நாட்டுப்புற விளையாட்டுகள்:
சடுகுடு, கோலி, கல்லாங்காய், பல்லாங்குழி, கல்லாமண்ணா, கூட்டாஞ்சோறு, கண்ணாமூச்சு, நொண்டி, தாயம் போன்றன இதில் அடங்கும்.
நாட்டுப்புறக் கலைகள்:
கரகாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவை போன்ற நிகழ்த்துக் கலைகளும். ஓவியம், சிற்பம், கதைச் சிற்பம் போன்ற பொருட் கலைகளும் இதில் அடங்கும்.
நாட்டுப்புறச் சமயமும் பழக்க வழக்கங்களும்:
சிறு தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இத்தெய்வங்களுக்கு எடுக்கும் விழாக்கள், இடும் பலிகள், அணியும் ஆடைகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றன இதில் அடங்கும்.
நாட்டுப்புற அறிவியல்:
வானிலை, வேளாண்மை, கட்டடம், நிலவியல், கடலியல், படகு கட்டுதல், மருத்துவம், இசைக் கருவிகள் தயாரித்தல் போன்ற செய்திகள் இதில் அடங்கும்.
நாட்டுப்புற இசைக் கருவிகள் :
உடுக்கை, மிருதங்கம், தப்பு, தம்பட்டம், ஜால்ரா, கஞ்சிரா, உருமி, துந்தினா, கரடி வாத்தியம், குடுகுடுப்பை, பம்மை, பறை.
நாட்டுப்புறப்பாடல்:
தொழிற்பாடல் (மீனவர் பாடல்)
விடிவெள்ளி நம்விளக்குஐலசா
விரிகடலே பள்ளிக்கூடம்ஐலசா
அடிக்கும் அலையே நம்தோழன்ஐலசா
அருமைமேகம் நமதுகுடைஐலசா
காயும் ரவிச்சுடர் கூரைஐலசா
கட்டுமரம் வாழும் வீடுஐலசா
பின்னல்வலை அரிச்சுவடிஐலசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருட்கள்ஐலசா
மின்னல் இடிகாணும் கூத்துஐலசா
வெண்மணலே பஞ்சுமெத்தைஐலசா
முழுநிலாதான் கண்ணாடிஐலசா
மூச்சடக்கி நீந்தல் யோகம்ஐலசா
தொழும் தலைவன் பெருவானம்ஐலசா
தொண்டு தொழிலாளர் நாங்கள்ஐலசா
பதினெண் சித்தர்கள்:
·         சித்தர் என்ற சொல்சித்என்ற வடமொழிச் சொல்லிலிருந்து தோன்றியது.
·         சித்என்றால் அறிவு
·         18 சித்தர்கள் என்று சொல்வது மரபு. வரையறுத்துக் கூறினார் இல்லை.
1.
அகத்தியர்
2.
பட்டினத்தார்
3.
பத்திரகிரியர்
4.
சிவாக்கியர்
5.
பாம்பாட்டிச் சித்தர்
6.
இடைக்காட்டுச் சித்தர்
7.
அகப்பேய்ச் சித்தர்
8.
குதம்பைச் சித்தர்
9.
கடுவெளிச்சித்தர்
10.
அழுகுணிச் சித்தர்
11.
கொங்கணச் சித்தர்
12.
பீர் முகமது
13.
மதுரை வாலைசாமி
14.
சட்டைமுனி
15.
திருமூலர்
16.
உரோமரி
17.
கருவூரார்
18.
இராமலிங்க அடிகளார்
மேலும் ஒளவையார், ஏனாதி சித்தர், களைச் சித்தர் போன்றோரும் உண்டு.
1. அகத்தியர்:
·         சித்தர்களின் தலைவர் அகத்தியர்
·         சித்த மருத்துவ முறையை வகுத்தவர்
·         ஆயுர்வேத சூத்திரங்களுக்கு விரிவுரை எழுதியவர்
·         அவர் பாடிய சித்தர்பாடல்கள்ஞானப்பாமாலைஎன்று வழங்கப்படுகிறது.
·         அடக்கம் பெற்ற தலம் அனந்தசயனம் ஆகும்.
2. பட்டினத்தார்:
·         இயற்பெயர் சுவேதாரண்யர்
·         பெற்றோர் சிவநேச செட்டியார்ஞானகலை ஆச்சி ஊர் காவிரிப்பூம் பட்டினம்
·         பட்டினத்து வணிகர் ஆதலால் பட்டினத்தார் எனப்பட்டார்.
·         இவருக்குத் திருவெண்காடர் என்ற பெயரும் உண்டு
·         இவரின் சீடர் பத்திரகிரியார்
·         அடக்கம் பெற்ற தலம் திருவொற்றியூர்
3. பத்திரகிரியார்:
·         உஞ்சனை மாகாளபுரத்து அரசர்
·         பட்டினத்தாரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்
·         சோற்றுச் சட்டியும் நாய்க் குட்;டியையும் வைத்திருந்தால் பட்டினத்தாரால் சம்சாரி என்று கூறப்பட்டவர்
·         இவர் பாடல் மெய்ஞ்ஞானப் புலம்பல் என்று அழைக்கப்படுகிறது.
·         235 கண்ணிகள் உள்ளன.
·         ஏல்லா கண்ணிகளும்எக்காலம்என்னும் வினாவாகவே முடிகின்றன.
4. சிவவாக்கியர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         சித்தர்களில் மிகுந்த சீர்திருத்தவாதி
·         இவர் பாடல்கள் சந்த ஓட்டம் உடையன
·         சிவ வாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று கருதுவாரும் உண்டு.
5. பாம்பாட்டிச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         செத்த பாம்பை ஆட வைத்ததால் அல்லது பாம்பை ஆடும்படித் தூண்டியதால்
·         பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார் என்பர்
·         பிறந்த ஊர் பாண்டி நாட்டுக் கோகர்ணம்
·         வாழ்ந்த இடம் கொங்கு நாட்டு மருதமலை
·         மொத்த பாடல் 129
·         அடக்கம் பெற்ற ஊர் விருத்தாசலம்
6.இடைக்காட்டுச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         பிறந்த ஊர் தொண்டை நாட்டு இடைக்காடு
·         இடையர் குலம்
·         கொங்கணச் சித்தரின் சீடர்
·         மொத்தம் 130 பாடல்கள்
·         இவரது பாடல்கள் இடையர்களின் பசுவைப் பார்த்தும் இடையர்களின் தலைவனைப் பார்த்தும் பாடுவதாக அமைத்துள்ளன.
·         அடக்கம் பெற்ற ஊர் திருவண்ணாமலை
7. அகப்பேய்ச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         அகப்பைச் சித்தர் என்பது மரூஉ
·         மொத்தம் 90 பாடல்கள்
·         பேயாக அலையும் மனதைஅகப்பேய்என்று பெண்ணாக உருவகித்து முன்னிலைப்டுது;திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.
·         அடக்கம் பெற்ற ஊர் அழகர்மலை
8. குதம்பைச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         குதம்பை என்பது ஒருவகைக்காதணி. ஆதனை அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திகுதம்பைஎன்று விளித்துப் பாடியதால்குதம்பை சித்தர்எனப்பட்டார்.
·         இடையர் குலத்தைச் சேர்ந்தவர்
·         அடக்கம் பெற்ற ஊர் மாயூரம்
·         32 பாடல்கள் பாடியுள்ளார்
9. கடுவெளிச் சித்தர்:
·         சித்தர் பாடல்ஆசிரியர்கடுவெளிச் சித்தர்
·         நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
·         பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்.
·         கடுவெளிச் சித்தர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்டவர்.
·         ஏளிய சொற்களில் அறிவுரைகளைச் சொன்னவர்.
·         இயற்பெயர் தெரியவில்லை.
·         கடுவெளி என்றால் சுத்தவெளி அதாவது பிரமம் பிரமத்தைக் கடுவெளி என்றதால்கடுவெளிச் சித்தர்எனப்பட்டார்.
·         இவரது பாடல்களில் நீதிக் கருத்துகள் மிகுதி
·         34 பாடல்கள்
10. அழுகுணிச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         இவர் பாடல்களில் அழகும் அணியும் சேர்ந்திருப்பதால் அழுகுணிச்சித்தர் எனப் பெயரிடப்பட்டார்.
·         அழுவது போன்ற சந்த யாப்பில் இவர் பாடல் உள்ளதால் இவரை அழுகுணிச் சித்தர்; என்றும் அழுகுணி சித்தர் என்றும் அழைப்பர்.
·         இவர் பாடல்களின் எண்ணிக்கை 32
·         இவர் பாடல் ஒவ்வொன்றிலும்கண்ணம்மாஎன்ற விளிச்சொல் வருகிறது.
11. கொங்கணச் சித்தர்:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         கொங்கு நாட்டவராக இருக்கலாம்
·         வாலைக் கும்மி அடித்தவர்
·         ஆன்மாக்கள் கும்மி அடிப்பதாக உருவகித்துள்ளனர்.
·         இவரின் சீடர் இடைக்காட்டுச் சித்தர்
·         111 பாடல்கள்
·         மருத்துவ நூல், யோக நூல், இரசவாத நூல், கடைக்காண்டம், திரிகாண்டம், கொங்கணர் ஞானம், குணபாகம் ஆகிய நூல்களை இயற்றியவர்
·         கொக்கென நினைத்தாயோ கொங்கணவா’ (வாசுகி) என்ற கதைக்குரியவர்
அடைக்கலம் பெற்ற ஊர் திருப்பதி
12. பீர் முகமது:
·         இஸ்லாம் சமயச் சித்தர்
·         ஞானரத்தினக் குறவஞ்சி பாடியவர்
·         64 கண்ணிகள் பாடியுள்ளார்
·         இவர் பாடல்கள் வினாவிடையாகச் செல்கிறது
·         சிங்கன் கேள்வி கேட்பதாகவும் சிங்கி பதில் சொல்வதாகவும் அமைந்துள்ளது.
13. மதுரை வாலைச்சாமி:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         ஞானத்தைப் பெண்ணாக உருவகித்து,அவளை விளித்துப் பாடியுள்ளார்.
·         கும்மியடி மெட்டில் பாடல் புனைந்தவருள் இவரும் ஒருவர்.
14. சட்டை முனி:
·         இயற்பெயர் தெரியவில்லை
·         போக முனிவரின் மாணவர்
·         உரோமரியுடன் மாறுபாடு கொண்டவர்
·         பூஜை விதிகளைப் பற்றி அதிகம் பாடியவர்
·         இயற்றிய நூல்கள் சட்டை முனி ஞானம், சடாட்சரக் கோவை, கல்பம் நூறு, ஞானநூறு, வாதநிகண்டு, சட்டைமுனி,1200  நவரத்தின வைப்பு.
15. திருமூலர்:
·         திருமந்திரம்
1. “
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளத் தேனே”.- திருமூலர்
16. உரோமரி:
·         பசுண்ட மாமுனிவர் மாணவர்
·         மானிடர் வயது நூறு என்றும் ஒரு நாளைக்குச் சுவாசம் 21600 என்றும் கணக்கிட்டுச் சொன்னவர்
17. கருவூரார்:
·         பூசை விதிகளைப் பாடியவர்
·         தஞ்சை பெரிய கோயில் லிங்கத்திற்கு அஞ்டபந்தனம் செய்தவர்
·         ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடியவர்
·         இவரது பூஜைவிதிப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
·         மொத்தம் 30 பாடல்கள்
18. இராமலிங்க அடிகளார்:
·         திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான்பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து”.- இராமலிங்க அடிகளார்
ஒளவையார்:
·         இவர் பிற்காலத்தில் வாழ்ந்த வேறோர் ஒளவையார்
·         ஞானக் குறள் என்ற நூல் பாடியவர்
·         இதில் 210 பாடல்கள் உள்ளன.
ஏனாதி சித்தர்
·         ஏனாதி என்பது படைவீரர்களுக்கு அளிக்கும் பட்டம்
·         10 பாடல்கள் பாடியுள்ளார்
·         பாடல்கள் தாழிசையால் ஆனவை
·         பாடலின் முதற்பகுதி சித்தர் கேட்பதும் (வினாவாகவும்) பிற்பகுதி ஏனாதி கூறும் விடையாகவும் அமைந்துள்ளது.
காளைச்சித்தர்:
·         ஞானத்தை உழவுத்தொழில் செய்வதாக உருவகம் செய்ததால் இப்பெயர் பெற்றது.
·         மொத்தம் 8 பாடல்கள்
·         ஏற்றப் பாட்டு வடிவில் இவர் பாடல்கள் அமைந்துள்ளன.
சில செய்திகள்:
·         சித்தர்களில் பெரும்பாலானோர் சைவர்கள்; எனினும் இவர்கள் சாதி சமயங்களைக் கடந்தவர்கள்
·         பக்தி செலுத்தி முக்தி அடைவதே பிறவாதிருக்க வழி என்பது பக்தர் கொள்கை; பருவுடலை நுண்உடல் ஆக்குவதே பிறவாதிருக்க வழி என்பது சித்தர் கொள்கை.
·         கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்என்று தேவாரம் கூறுகிறது.
·         சித்தர்களில் பஞ்சமர் (ஐவர்) என்று குறிப்பிடப்படுபவர்கள்.
1.
திருமூலவர் 2. சிவவாக்கியர் 3. பட்டினத்தார்
4.
திருமாளிகைத் தேவர் 5. கருவூரார்

PDF Download

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *