2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒருவர் இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி ஆவார்.
மற்ற இருவர்கள் எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரம்மர் ஆவார்கள். "உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக" இவர்களுக்கு நோபல்பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கோல்கட்டாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், டில்லி நேரு பல்கலைகழகத்திலும் பயின்று, பின் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற 2வது பெண் என்ற பெருமையை பிரான்ஸில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் எஸ்தர் டஃப்லோ பெற்றார். அபிஜித் மற்றும் எஸ்தர் டஃப்லோ கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற 2வது பெண் என்ற பெருமையை பிரான்ஸில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் எஸ்தர் டஃப்லோ பெற்றார். அபிஜித் மற்றும் எஸ்தர் டஃப்லோ கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!