TNPSC Group II New Syllabus - இந்திய அரசியல் அமைப்பு - உள்ளாட்சி அமைப்புகள்
- TNPSC Group II & Group IIA Exams - Group IV, VAO Exams
தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அரசு அமைப்பு
தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அரசு அமைப்பு
தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அரசு முறை, 'தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்' 1958-ன் படி ஏற்படுத்தப்பட்டது. இந்த முறை கிராமப் பஞ்சாயத்து அடிப்படையில் அமைந்துள்ளது. இதற்கு மேலாகப் பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சிக் குழுக்களும் உள்ளன.
இந்தப் புதிய அமைப்பு முறையில், மாவட்ட கழகங்கள் (Boards)
அகற்றப்பட்டுப் பஞ்சாயத்து ஒன்றியங்கள் அவற்றின் வாரிசுகளாக ஆயின.
பஞ்சாயத்து ஒன்றியத்தின் பரப்பளவு சமூக பரப்பளவு சமூக முன்னேற்றத் திட்டத்திலுள்ள அபிவிருத்தி அமைப்புகள்; சம எல்லை அமைப்புகளாக அமைக்கப்பட்டன. கிராம மட்டங்களின் மக்களால் நேரிடையாகத் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இப்பொழுது பஞ்சாயத்துத் தலைவரையும் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முயற்சி இருக்கிறது. பஞ்சாயத்து யூனியனில் அதன் அதிகாரத்திற்குட்பட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலின் தலைவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து அரசு நிறுவனங்களின் அமைப்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்.
1. பஞ்சாயத்துகள்
அ) கிராமப் பஞ்சாயத்துகள்
ஆ) நகரப் பஞ்சாயத்துகள்
2. பஞ்சாயத்து யூனியன்
3. மாவட்ட அபிவிருத்திக் கவுன்சில்
அ) கிராமப் பஞ்சாயத்துகள்
ஆ) நகரப் பஞ்சாயத்துகள்
2. பஞ்சாயத்து யூனியன்
3. மாவட்ட அபிவிருத்திக் கவுன்சில்
4. மாநில மட்டத்திலுள்ள பஞ்சாயத்து அபிவிருத்தி கவுன்சில்
உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள், இந்தியாவில் இரண்டு வகையாக உள்ளன. ஒருவகையாக கிராமப்புறப் பகுதிகளுக்கும், மற்றொரு வகை நகர்ப்புறப் பகுதிகளுக்குமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புமுறை பஞ்சாயத்துராஜ் அமைப்பு என்று அறியப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, வெவ்வேறு பெருநகரங்களுக்கும் சிறுநகரங்களும் மூன்று வகையான நிர்வாக நிறுவன ஏற்பாடுகள் கொண்டவையாக அமைந்துள்ளன.
1992-ஆம் ஆண்டு 73 மற்றும் 27-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்களின் அமைப்பாக்கம் மற்றும் செயல்பாடுகள் மீது பெரும் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி
சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (1952) மற்றும் தேசிய விரிவுபடுத்தப்பட்ட பணிகள் (1953) ஆகியவற்றின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் 1957-ல் கமிட்டி ஒன்றை அமைத்தது. இக்கமிட்டியின் தலைவர் பல்வந்த்ராய் ஜீ.மேத்தா ஆவார்.
இக்கமிட்டி தனது அறிக்கையை 1957-ம்ஆண்டு நவம்பரில் சமர்ப்பித்தது. மேலும் மக்களாட்சி பரவலாக்கல் (Decentralised Democracy) திட்டத்தை நிலைநிறுத்த பரிந்துரை அளித்தது.
இதன் இறுதியாகத் தோன்றியதே பஞ்சாயத்து இராஜ்யம் ஆகும்.
பஞ்சாயத்து அமைப்பு முதன் முதலில் இந்தியாவில் ராஜஸ்தானில் நிறுவப்பட்டது. (அக்டோபர் 2 – 1959ல் நகாவூர் மாவட்டம்)
இரண்டாவதாக ஆந்திராவில் 1959 – ல் நிறுவப்பட்டது.
அசோக் மேத்தா கமிட்டி
அசோக் மேத்தா கமிட்டி
1977ம் ஆண்டு டிசம்பரில் ஜனதா அரசாங்கத்தால் அசோக் மேத்தா தலைமையில் பஞ்சாயத்து ராஜ் நிறுவன கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது.
1978ம் ஆண்டு ஆகஸ்டில் தனது அறிக்கையை குழு சமர்ப்பித்தது. மேலும் சீர்கேடு அமைந்து வரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை புதுப்பிக்கவும் மற்றும் வலுப்படுத்தவும் 132 – பரிந்துரைகளை முன் வைத்தது.
இதன் முக்கிய பரிந்துரைகளாவன:
3 அடுக்கு பஞ்சாயத்து முறையை நீக்கிவிட்டு அதற்கு பதில் 2–அடுக்கு முறை கொண்டு வர வேண்டும்.
ஜனதா அரசாங்கம் தனது முழுப் பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யாமல் கலைந்துவிட்டதினால் அசோக் மேத்தா கமிட்டி பரிந்துரைகளை செயல் படுத்த முடியாமல் போயிற்று. எனினும் கர்நாடகம், மேற்குவங்கம் மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள பஞ்சாயத்து ராஜ் முறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தன.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!