தமிழ் இலக்கணம்
யாப்பிலக்கணம்
இது ஆறு வகைப்படும்.
1. எழுத்து-எ.கா(அ)
2. அசை-எ.கா(அக)
3. சீர்-எ.கா(அகர)
4. தளை
5. அடி
6. தொடை
·
எழுத்து:-
குறில்,நெடில்,ஒற்று என மூவகையாக பிரித்துக்கூறுவர்.
எழுத்து ,அசைக்கு உறுப்பாக அமையும்.
·
அசை
குறில்,நெடில்,ஒற்று எனும் எழுத்துகளால்
அசைக்கப்படுவது.
இது 2 வகைப்படும்.
§
1.நேரசை
§
2.நிரையசை
v நேரசை-
- குறில் தனித்தும் (எ.கா -ப)
- குறிலுடன் ஒற்றும்(எ.கா - பல்)
- நெடில் தனித்தும் (எ.கா - பா)
- நெடிலுடன் ஒற்றும்(எ,கா - பால்)
இவ்வாறு
வருவது நேரசை ஆகும்
v நிரையசை –
- இரு குறில் இணைந்து வருவது(எ.கா - பட).
- இரு குறிலுடன் ஒற்று வருவது (எ.கா – படம்)
- குறிலுடன் நெடில் வருவது (எ.கா -படா)
- குறில்,நெடிலுடன், ஒற்று வருவது (எ.கா-படார்)
இவ்வாறு வருவது நிரையசை ஆகும்.
{இரு ஒற்று எழுத்துகள் ஒன்றாய் வந்தால்,ஒரு
எழுத்தாய் கொள்ள வேண்டும்.
எகா-அக்க்-இவ்வாறு வந்தால் அது நேரசை
எ,கா-அகட்ட் இவ்வாறு வந்தால் அது நிரையசை}
·
சீர்
§
ஓரசைச்சீர்
§
ஈரசைச்சீர்
§
மூவசைச்சீர்
v ஒரசைச்சீர்
Ø
வெண்பாவின் ஈற்றில் நேரசை,நிரையசை உள்ள ஏதேனும்
ஒன்று தனித்து நின்று சீராய் அமைவது அசை (அ) ஓரசைச்சீர் எனப்படும்.
Ø
இவை 2 விதமாக வரும்.இவற்றின் வாய்பாடு
நேரசை –நாள்
நிரையசை –மலர்
Ø
வெண்பாவின் ஈற்றில் குற்றியலுகர எழுத்துகள்
வந்தால்,அவற்றின் வாய்பாடு
நேர்பு – காசு
நிரைபு –பிறப்பு
(அதாவது கொடுக்கப்படும் சீர், கு,சு,டு,து,பு,று,
எனும் வல்லின குற்றியலுகற எழுத்தைக்கொண்டு முடிந்தால் இவ்வாறு கொள்ள வேண்டும்)
எ.கா;-
தானம் தவமிரண்டும்
தங்கா வியனுலகம்
வானம் வளங்கா தெனின்.
இதன் ஈற்றுச்சீர்
தெனின்
இது
தெ(த்+எ) /னி(ன்+இ)
/ன்
குறில் + குறில் +ஒற்று =நிரையசை
இதன் வாய்பாடு மலர்.
எ.கா
வாரி வளங்குன்றிக் கால்.
இதன் ஈற்றுச்சீர்
கால்
அதாவது
கா(க்=ஆ) / ல்
நெடில் + ஒற்று =நேரசை
வாய்பாடு -நாள்
எ.கா
பகவன் முதற்றே உலகு
இதன் ஈற்றுச்சீர்,
உலகு
அதாவது
உ
/ ல(ல்+அ) / கு
குறில்+குறில்+கு(குற்றியலுகர எழுத்து)
நிரை+(குற்றியலுகர எழுத்து)
எனவே இது
நிரைபு.
இதன் வாய்பாடு பிறப்பு என்று வரும்.
எ.கா;-
செய்யாமை செய்யாமை நன்று
இதன் ஈற்றுச்சீர்,
நன்று
அதாவது,
ந(ந்+அ) / ன் /று
குறில்+ஒற்று+று(குற்றியலுகர எழுத்து)
நேர்+(குற்றியலுகர எழுத்து)
எனவே இது நேர்பு ஆகும்.
எனவே இது காசு எனும் வாய்பாடை கொண்டு முடியும்.
v ஈரசைச்சீர்
நேர்,நிரை
எனும் இரண்டு அசை இணைந்து வரும் சீர்கள்.
Ø
நேர் + நேர் = தேமா
Ø
நிரை + நேர் = புளிமா
Ø
நிரை + நிரை = கருவிளம்
Ø
நேர் + நிரை = கூவிளம்
§
இவை ஆசிரிய உருச்சீர் எனவும் வழங்கப்படும்.
§
மேலே காணும் நான்கு சீர்களும் ஆசிரியப்பாவிற்கு
உரியவை.
எ.கா;-
எல்லா = எல்+லா = நேர்+நேர் = தேமா
விளக்கும் = விளக்+கும் = நிரை+நேர் = புளிமா
v மூவசைச்சீர்
§
ஈரசைச்சீர்கள் நான்குடனும் நேர்,நிரை ஆகிய
இரண்டயும் தனித்தனியாக இறுதியில் சேர்த்தால் மூவசைச்சீர் 8 ஆக உருவாகும்.
§
மூவசைச்சீரை இரு வகையாகப்பிரிக்கலாம்.
o
காய்ச்சீர்-4
1. நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
2. நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
3. நிரை+நிரை+நேர் = கருவிளங்காய்
4. நேர்+நிரை+நேர் = கூவிளங்காய்
§
இந்த காய்ச்சீர்கள் நான்கும் வெண்பா விற்கு
உரியவை.
§
ஆதலால் இவை வெண்பா உரிச்சீர் எனவும் வழங்குவர்.
o
கனிச்சீர்-4
1. நேர்+நேர்+நிரை = தேமாங்கனி
2. நிரை+நேர்+நிரை = புளிமாங்கனி
3. நிரை+நிரை+நிரை = கருவிளங்கனி
4. நேர்+நிரை+நிரை = கூவிளங்கனி
§
இவை வஞ்சிப்பாவிற்கு உரியவை.ஆதலால் வஞ்சி
உரிச்சீர் என வழங்குவர்.
எ.கா
விளக்கல்ல =விளக்+கல்+ல =நிரை+நேர்+நேர் =புளிமாங்காய்
சான்றோர்க்குப் =சான்+றோர்க்+குப் =நேர்+நேர்+நேர் =தேமாங்காய்
·
தளை
§
சீர் ஒன்றோடோன்று கட்டப்பட்டு இருப்பது
, தளை எனப்படும்.இது 7 வகைப்படும்.
1.
நேரொன்றிய
ஆசிரியத்தளை
·
‘மா’ முன் நேர் வருவது.
·
அதாவது தேமா,புளிமா உடன் நேர் அசைச்சீர்
வருவது.
·
எ.கா;-
¨
பாரி பாரி
¨
பா+ரி பா+ரி
¨
நேர்+நேர் நேர்+நேர்
¨
தேமா நேர்+நேர்
¨
(இந்த இரண்டாவதாக வரும் நேர்+நேர் –ல் முதலாக
வரும் நேர்-ஐ மட்டும் எடுத்திக்கொள்ளவும்.)
¨
தேமா நேர்
¨
மா முன் நேர் வருவதால் இது நேரொன்றாசிரியத்தளை
2.
நிரையொன்றாசிரியத்தளை
¨
‘விளம்’-முன் நிரை வருவது
¨
கருவிளம்,கூவிளம் ஆகியவற்றின் முன்னால் நிரை
வருதல்
¨
எ.கா;-
Ø
பலர்புகழ் கபிலர்
Ø
பலர்+புகழ் கபி+லர்
Ø
நிரை+நிரை நிரை+நேர்
Ø
கருவிளம் நிரை+நேர்
Ø
(இந்த இரண்டாவதாக வரும் நிரை+நேர் –ல் முதலாக
வரும் நிரை-ஐ மட்டும் எடுத்திக்கொள்ளவும்.)
Ø
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.எனவே இது
நிரையொன்றிய ஆசிரியத்தளை
நேரொன்றிய மற்றும் நிரையொன்றிய ஆசிரியத்தலைகள்
ஆசிரியப்பாவிற்கு உரியவை.
3.
இயற்சீர்
வெண்டளை
·
இது 2 வகையாக அமையும்.
¨
1.‘மா’-முன் நிரை வருவது
எ.கா;-
Ø
அகர முதல
Ø
அக+ர முத+ல
Ø
நிரை+நேர் நிரை+நேர்
Ø
புளிமா நிரை+நேர்
2.’விளம்’
முன் நேர்வருவது
எ.கா;-
Ø
பூம்புகார் போற்றுதும்
Ø
பூம்+புகார் போற்+றுதும்
Ø
நேர்+நிரை நேர்+நிரை
Ø
கூவிளம் நேர்+நிரை
4.
வெண்சீர்
வெண்டளை
·
‘காய்’ முன் நேர் வருவது.
·
எ.கா;-
¨
யாதானும் நாடாமல்
¨
யா+தா+னும் நா+டா+மல்
¨
நேர்+நேர்+நேர் நேர்+நேர்+நேர்
¨
தேமாங்காய் நேர்+நேர்+நேர்
இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும்
வெண்பா விற்கு உரியவை.
5.
கலித்தளை
§
‘காய்’ முன் நிரை வருவது
§
எ.கா;-
தாமரைப்பூ குளத்தினிலே
தா+மரைப்+பூ குளத்+தினி+லே
நேர்+நிரை+நேர்
நிரை+நிரை+நேர்
கூவிளங்காய்
நிரை+நிரை+நேர்
·
இது கலிப்பா விற்கு உரியது.
6.
ஒன்றிய
வஞ்சித்தளை
§
‘கனி’ முன் நிரை வருவது
§
எ.கா;-
செந்தாமரை குளத்தினிலே
செந்+தா+மரை
குளத்+தினி+லே
நேர்+நேர்+நிரை
நிரை+நிரை+நேர்
தேமாங்கனி
நிரை+நிரை+நேர்
7.
ஒன்றாத
வஞ்சித்தளை
·
‘கனி’-முன் நேர் வருவது
v
ஒன்றிய மற்றும் ஒன்றாத வஞ்சித்தலைகள் வஞ்சிப்பாவிற்கு
உரியவை.
அடி
மற்றும் தொடைகள் ஆகிய இரண்டும் அடுத்த பகுதியில்.
என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பதிணென்மேல்கணக்கு நூல்கள் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!